28/02/2021

சின் (தியான) முத்திரைகள்...


தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் சின் முத்திரையில் தான் இருப்பார்கள்.

சின் முத்திரை செய்முறை...

உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொட வேண்டும்.

மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம்.

மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பலன்கள்...

மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

மன அழுத்தத்தை போக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.