19/02/2021

உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...

உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.

நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மன உளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்.

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.

உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....

மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...

நன்றி ஆரோக்கியமே..

நன்றி உடலே..

என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி..

என்னை குணமாக்கியதற்கு நன்றி..

என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.

இதன் மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு.. உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.

1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் "ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது" என்பதை மனதிற்குள் சொல்லி கொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...

2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்.

4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்... எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...

5. காலை வேலையில் நியூஸ் பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....

6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்.

7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன் மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்.

தினமும் இதை செய்து பாருங்கள்.. தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.