02/02/2021

மனமும் நோயும்...

 


ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது.

உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர்.

ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள். வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.