14/03/2021

ஸ்வீட் கடை காரனும் நானும்...

 


என் நண்பர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னாங்க சரினு நானும் ஒரு பிரபல ஸ்வீட் கடைக்கு ஆன்லைன் ஆர்டருக்கு போனில் பேசினேன்....

எனக்கு ஸ்வீட் வேணும். உங்களிடம் என்னென்ன ஸ்வீட் இருக்குனு கேட்டேன்..

பதில் வந்துச்சு...

லட்டுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

பூந்திக்கு எண் 2 ஐ அழுத்தவும்...

அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்...

கேசரிக்கு எண் 4 ஐ அழுத்தவும்...

குலோப்ஜாமூன் வாங்க எண் 5 ஐ  அழுத்தவும்...

ஜிலேபிக்கு எண் 6 ஐ அழுத்தவும்...

நான் எண் 3-ஐ அழுத்தினேன்...

பதில் வந்தது...

கோதுமை அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...

பாதாம் அல்வாவுக்கு எண் 2 ஐ அழுத்தவும்...

பால் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்...

ரவா அல்வாவுக்கு எண் 4 ஐ அழுத்தவும்...

நான் எண் 1-ஐ அழுத்தினேன்...

பதில் வந்தது...

பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...

டால்டாவில் செய்த அல்வாவிற்கு எண் 2 ஐ அழுத்தவும்...

பாமாயிலில் செய்த அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்...

நான் எண் 1-ஐ அழுத்தினேன்...

பதில் வந்தது ...

கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1ஐ  அழுத்தவும்..

அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2ஐ அழுத்தவும்..

முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3ஐ  அழுத்தவும்..

ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4ஐ அழுத்தவும்...

நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9ஐ  அழுத்தவும்..

நான் தவறுதலாக எண் 9 ஐ அழுத்திட்டு போனை ஆஃப்  பண்ணிட்டேன் 😁

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் போனை ஆன் செய்தப்போ அங்கிருந்து அழைப்பு வந்தது...

நீங்க தானே அல்வா ஆர்டர் பண்ணீங்க?

இல்லையே...

இந்த நம்பர்லேர்ந்து 100 கிலோ அல்வா வேணும்னு ஆர்டர் வந்துச்சே..

சார் போன் என்னோடது தான்... ஆனா ஆர்டர் செய்தது நான் அல்ல... என் வீட்டில் இருக்கும் உடன் பிறந்தவர்கள் யாராவது செய்திருப்பார்கள்.... எனவே நீங்கள்... 

என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1 ஐ அழுத்தவும்..

என் சின்ன அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2 ஐ அழுத்தவும்...

என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3 ஐ அழுத்தவும்...

என் சின்ன தம்பியை தொடர்பு கொள்ள எண் 4 ஐ அழுத்தவும்...

என் அப்பாவை தொடர்பு கொள்ள எண் 5ஐ அழுத்தவும்...

என் நண்பனை தொடர்பு கொள்ள எண் 6ஐ அழுத்தவும்...

அதுக்குள்ள லைன் கட் பண்ணிட்டான்😁

நாங்களும் அல்வா குடுப்போம்ல 😁

யார்கிட்ட 😂😂😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.