பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி (BOOMERANG) வீச கற்றுக் கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் வெல்ஷ்.
1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.
அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர்.
பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.
வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.
இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,
தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூஜைக்குரிய ஆயுதமாக இருப்பதாக சொல்கிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.