17/09/2021

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...

நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை...

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல. பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது.

காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும்.

இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்:

கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்..

இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.