09/10/2021

இந்து மதம் என்பது தமிழர் மதமே...

 


(இந்து மதம் வேறு.. இந்துத்துவா வேறு)

இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும்.

சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.

வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.

சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.

வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ் மொழியிலேயே இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும்.  அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.

வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.

சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது.

வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது.

ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.