மெளரிய பேரரசின் முக்கியமான மன்னனாக கருதப்படும் சந்திரகுப்தன் ஏசுகிருஸ்து பிறப்பதற்கு முன் 296 ஆண்டில் இறந்து போனார். இவர் போர்க்குணம் உள்ளவராகவும் ஆளும் திறமையுள்ள மன்னனாகவும் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.
இதற்கு பிறகு சந்திரகுப்தனின் மகன் பிந்துசாரான் ஆட்சிக்கு வந்தான் தந்தை போன்று இல்லாமல் குடி கேளிக்கை இந்த இரண்டும் மிதமாக இருக்கும் நேரத்தில் தர்க்க ஞானத்தை வளர்த்தலே இவனுடைய பொழுது போக்கு.
இவன் வாழ்ந்த காலம் சண்டையில்லாத சமாதான காலம் என்பதால் கூத்தும் கும்மாளத்திற்கும் அளவே இல்லாமல் போனது.
இதற்கு உதாரணமாக வரலாற்று ஆசிரியர்கள் இந்த சம்பவத்தை சொல்வார்கள்.
தன் சொந்த நாட்டில் கிடைத்த பழங்களையும் மதுக்களையும் சுவைத்து நாத்தடித்து போய் கிரேக்க நாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் கிரேக்க நாட்டு பழங்கள் மது. மற்றும் ஒரு தர்க்க ஞானியையும் அனுப்புங்கள் என்று எழுதினான்.
இவன் கடிதத்திற்கு கிரேக்க நாடு பதில் எழுதியது எப்படி தெரியுமா ?
மது பழங்களை வேண்டுமானால் நாங்கள் விற்ப்போம் எங்கள் நாட்டில் உள்ள எந்த அறிஞரையும் நாங்கள் விற்பது இல்லை என்று பதில் எழுதியது.
குடியும் கும்மாளமும் தர்க வாதமும் உள்ள பிந்துசாரான் அப்படியே காலத்தை போக்கி கண்மூடி விட்டார்..
இவரது காலத்தில் மெளரிய பேரரசு விரிவடைந்தது என்பது உண்மை தான் ஆனால் இதற்கு இவர் காரணமல்ல..
இவரது தந்தை சந்திரகுப்தரின் படைத்தளபதிகளின் உருவாக்கத்தால் தான்..
ஆமா யார் தெரியுமா இந்த பிந்துசாரான்?
இந்தியாவின் மாவீரன் என்றழைக்கப்படும் அசோகரின் தந்தை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.