11/11/2021

கன்னட பலிஜா ஈ.வெ.ரா எனும் தெலுங்கன் பெரியார் தமிழர் தலைவரா.?

 


கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது - ஈ.வே.ரா அறிக்கை...

1968ல் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை தன் அடியாட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கி விரட்டிவிட்டு, முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை (தமிழர்கள்) வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிரோடு எரித்துக் கொன்றான் அப்பகுதி மிராசுதாரான கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வந்தேறித் தெலுங்கன்.

உடனே ஈ.வே.ரா கொதித்து எழுந்தார். அறிக்கைவிட்டார்..

யாருக்கு எதிராக?

அன்று கூலித்தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நின்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக.

பின்னே ஒரு வந்தேறி அதிலும் நாயுடு, இன்னொரு வந்தேறியை அதிலும் நாயுடுவை எதிர்த்து அறிக்கை விடுவானோ?

ஈ.வே.ரா, கீழ்வெண்மணி படுகொலை பற்றி விட்ட அறிக்கை 28.12.1968 அன்று விடுதலையில் வந்துள்ளது.

இடப்பட்டுள்ள இடங்களைக் கவனிக்கவும்.

தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல அவர்களுக்காகப் பாடுபடுவது போல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள்.

உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலி வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டு தான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல், நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி..

இன்றைய தினம்,வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி,இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை.தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம் கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அதாவது கீழ்வெண்மணி படுகொலைக்குகம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று கூறுகிறார்.

மேலும், கூலித் தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்கக்கூடாது.கிடைக்கும் சம்பளத்திற்குள் வாழ்ந்து கொள்ள வேண்டும்.

மீறி கலகம் செய்தால் கீழ்வெண்மணி போன்ற படுகொலைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

அப்படியும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தால் அரசாங்கம் அடக்கி ஒடுக்கும்.

(அப்போது வந்தேறி அண்ணாதுரை முதல்வர், நடந்து கொண்டிருந்தது திராவிட வந்தேறிகளின் ஆட்சி).

இதுதான் அவர் கூறுவரும் கருத்து.

ஈ.வே.ரா எந்த இடத்திலும் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு கண்டனமோ

அல்லது வெண்மணி பள்ளர்களுக்கு இரங்கலோ தெரிவித்ததே இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார்.

கீழ்வெண்மணி படுகொலையில் கைது செய்யப்பட்ட நாயுடு நிராபராதி என்று 1965ல் விடுதலை செய்யப்பட்டான்.

இதற்கு வந்தேறித் தெலுங்கனான கருணாநிதி அமைத்த விசாரணைக் கமிஷன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தது முக்கிய காரணம்.

நீதிபதி மகாராஜன் தீர்ப்பில் கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.இதற்கு நன்றிக்கடனாக திருநெல்வேலியில் ஒரு பகுதிக்கு அவர் பெயர்வைக்கப்பட்டது. அது தான் மகாராஜ நகர்.

நாயுடு விடுதலையான போது அவரை வரவேற்ற தி.மு.க வினர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தனர்.

தி.மு.கவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்யவும் இல்லை.

1968ல் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த13 வயது சிறுவன் நந்தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து 12 ஆண்டுகள் கழித்து 1980 டிசம்பரில் கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டி படுகொலை செய்தார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (எம்.எல்) கம்யூனிஸ்ட்களின் அழித்தொழிக்கும் குழு என்று அறியப்பட்ட இவர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை.

கம்யூனிஸ்ட் தலைமை இக்குழுவினருக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஏனென்றால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போதும் வந்தேறிகளாகவே இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்த தமிழர்களுக்கு மேல்மட்டம் எந்த ஆதரவையும் தரவில்லை.

அடுத்த தேர்தலில் கருணாநிதியுடன் அக்கட்சி கூட்டணியும் வைத்துக் கொண்டது.

இன்றைக்கும் கூட இறந்த அப்பாவி மக்களை 'வீரர்கள்' என்று கம்யூனிஸ்ட் கொடியோடு சென்று வணக்கம் வைக்கிறார்களே ஒழிய கோபால கிருஷ்ணனை கொலை செய்து பழிக்குப்பழி வாங்கிய உண்மையான வீரர்களை கொண்டாடுவதில்லை.

நந்தன் உட்பட வெண்மணிப் பள்ளர்கள் 11பேர் தண்டனை பெற்று சிறை சென்றனர்.சாட்சிகள் இல்லாததால் தண்டனை நிரூபணம் ஆகாமல் சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்த போராட்ட வரலாறையும் கடைசி நேரத்தில் நுழைந்து ஆட்டையை போடும் பெரியாரியக் கூட்டம் கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கை வந்தேறி தெலுங்கரான கோவை ஜி.ராமகிருஷ்ணன் மூலம் எடுத்து நடத்தியது.

என்னமோ அந்த கொலையை தி.க தொண்டர்கள் தான் நடத்தினார்கள் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் கோபால கிருஷ்ணனைக் கொலை செய்தவர்கள் திராவிட அமைப்புகளையும் கம்யூனிஸ்ட் அமைப்புகளையும் நம்பி மோசம் போய் கடைசியில் தங்களது சொந்த இழப்புக்கு பழிவாங்கத் தாமே களத்தில் இறங்கியவர்கள் ஆவர்.

கொலை நடந்த பிறகு ஆளாளுக்கு பங்குக்கு வருகிறார்களே ஒழிய அந்த கொலையைச் செய்ய முடிவெடுத்தவர்களுக்கு எந்த உதவியையும் எந்த அமைப்பும் செய்யவில்லை.

கீழ்வெண்மணி கொலை நிகழ்வு ஒரு நாளில் நடந்த நிகழ்வு கிடையாது.1946 லேயே பிரச்சனை தொடங்கிவிட்டது.

அங்கே விவசாயக் கூலிகளாக இருந்த பள்ளர்களுக்கும் ஆதிக்கசாதியான நாயுடுகளுக்கும் உரசல் இருந்து வந்தது.

பள்ளர்கள் நடத்திவந்த இரவு நேர குடிசைப் பள்ளியை நாயுடுகள் நிறுத்தச் சொன்னார்கள்.பள்ளர்கள் மறுத்தனர்.

ஆதிக்கசாதியினர் எலும்புத்துண்டுகளை வீசி காவல்துறையை அனுப்பினர்.

பள்ளர்கள் காவல்துறையை அடித்து உதைத்து விரட்டினர்.மறுநாளே ரிசர்வ் படை வந்து இறங்கியது.முக்கியமான இரண்டு பேரை அழைத்துச் சென்று சிறையிலடைத்தது.

இப்படி புகைந்து கொண்டே வந்த பிரச்சனை முற்றி இறுதியில் நடந்தேறியது தான் 5 ஆண்கள், 20 பெண்கள், 19 குழந்தைகளைப் பலிகொண்ட அந்த திட்டமிட்ட படுகொலை.

ஜனநாயகமுறையில் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி  ஆயுதம் மூலமாகக் கிடைத்தது.ஆனாலும் இழப்பு என்னமோ தமிழர் பக்கம்தான் அதிகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.