05/11/2021

கரும்பும்_அரசியலும்...

 


நம்மை எந்த அளவுக்கு இந்த உலக அரசியல் நம்மை சுருக்கி விட்டது பார்த்தீர்களா? 

பொங்கல்  என்றால் மட்டுமே நாம் கரும்பைப் பற்றி நினைக்கின்றோம்..

ஆனால் பண்டைய தமிழர்கள் கரும்பை கொண்டு வேலி அமைத்து தன் பயிர்களை காப்பாற்றியுள்ளனர்..

மட்டுமின்றி பெண்கள் உரலில் தானியங்களை இடிப்பதற்கு உலக்கைக்கு பதிலாக கரும்பை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது...

ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. 

மற்றும் சேற்றுக்குள் சிக்கிய தேரின் சக்கரம் மற்றும் மாட்டு வண்டிகளின் சக்கரத்தை நெம்பி தூக்கி விட கரும்பை பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறது அகநானூறு...

அதேபோன்று..

கரும்பின் தீஞ்சாறு

விரும்பினர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை )

கரும்பு சாற்றை விற்கும் கடைகள் அப்போதே வீதியில் இருந்திருக்கிறது என்றும் பழைய வரலாறு நமக்கு கூறுகிறது. 

ஆனால் இப்போதோ கரும்பு சாற்றை சாலையோரம் அதிகமாக  விக்கிறது வடநாட்டவன்... 

அதன் தரமும் சரியில்லை.

ஒரு விளையும் பயிரை குறைத்து அதை சிறுமிதமக்காக்கினால் என்ன நடக்கும்? 

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் சந்தைக்கு வரும் மற்றபடி அதன் மதிப்பு குறையும் அதனால் அதை பயிரிட விவசாயி யோசிக்க வேண்டும்..

காலப்போக்கில் கரும்பு என்பது சீனிக்காக பயிரிடப்படும் சாதாரண தாவரம் மட்டுமே..

இதை தொழிற்சாலைகள் நினைத்த விலைக்கு வாங்க முடியும் காரணம் அதற்கு மக்களின் சந்தை மதிப்பு கிடையாது இருந்தாலும் (பொங்களுக்கு மட்டும்)..

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நமது உணவில் இருந்து கலாச்சாரம் வரை அழிக்கப்படுகிறது... 

இதேதான் இன்றைய இந்தி திணிப்பும் ஆழமான அரசியல் இது...

காலப்போக்கில் திருக்குறளை எழுதியது பிராடு மோடி 😁 என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.