22/11/2021

உலகில் நடந்த வித்யாசமான திருட்டுகள்...

 


இறந்த உடலை திருடிய வரலாறு...

உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..

இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..

இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..

மோனலிசா மர்ம ஓவியம்...

உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..

மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...

அதே போன்று உலகை மிரளச் செய்த திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...

அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய் அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..

இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..

அதில் பாதிக்கப்பட்டது  முக்கியமான இரு நபர்கள்...

முதலாமவர் சார்லி சாப்ளின்...

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..

ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு  உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.

செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....

ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..

கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..

2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..

இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..

1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள்  தகர்த்தனர்.

இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..

இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..

எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.