05/12/2021

அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?

 


எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக் கொடுங்கள்.. அப்படியே நெஞ்சில் ஒட்டும்...

ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை,

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,

கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல்,

மேற்கிலிருந்து வாட்டுவது கோடை

தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்

நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள்,

யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,

உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-

சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,

உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்

பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல்,

மருட்கை, அச்சம், பெருமிதம்,

உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்

எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,

நாசி இரண்டு, வாய் ஒன்று,

முன்னொன்று, பின்னொன்று-உடலி­

ன் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில்

எண்ணங்களைப் பொருத்தித்

  1. தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள்.. தமிழாசிரியப் பெருமக்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.