01/08/2022

பாவம் மற்றும் புண்ணியம் இவற்றிற்கு இடையில் உள்ள கர்ம தொடர்பு என்ன.. இதில் எவை கர்மாவை குறிக்கும்...

 


புண்ணியம் என்பது கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் அனுபவிக்கும் சந்தோஷம் மிக்க செயல்கள்...

கடந்த காலம் என இங்கே குறிப்பிடுவது கடந்த பிறவிகள்...

உதாரணமாக, நாம் செய்யும் புண்ணியம் என்பதை (நல்ல செயல்களாக நல் கர்மாவாக எடுத்துக் கொள்ளலாம் .) Debit card போல, இதில் முதலில் நம்முடைய பணத்தை செலுத்தி விட்டு பிறகு அந்த debit card மூலம் அனுபவிக்கலாம்...

தீய கர்மவினைகள் அல்லது நாம் சந்திக்கும் தகாத அல்லது மனதிற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்துமே பாவ கர்ம வினைகள் உடன் தொடர்பு பெற்றவை.

Credit card-- முதலில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு பிறகு அதற்கான பலனை (bill) செலுத்துவது..

Debit card என இங்கே குறிப்பிடுவது நம்முடைய நல்ல செயல்களின் பிரதி பலிப்பு. (புண்ணியங்கள்)..

Credit card என இங்கே குறிப்பிடுவது, நாம் தேவையற்ற செயல்களை செய்து விட்டு பிறகு அதற்காக வருத்தப்படும் நிகழ்வுகள்..

குரு  கடந்தகால புண்ணிய பலன்களை அனுபவிக்க உதவும், அதாவது debit card pin (கடவுச்சொல்) என்பதுபோல, அனைத்து உயிர்களின் புண்ணியச் செயல்களை அனுபவிக்க உதவுகிறது அல்லது வழிகாட்டுகிறது. (Free will)..

ராகு என்னும் மாயாவி மனோகாரகன் என்று உடைய இன்னொரு மாயக்காரன் உடன் இணைந்து (சந்திரன்) மீண்டும் மீண்டும் பாவங்களையும் கர்ம வினைகளுக்கு மனிதனை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்...

சனி, எந்த விதத்திலும் ஒரு துளி கூட குறையாமல் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீதிமானாக இருந்து பலன்களை வழங்குகிறார்...

கர்ம கணக்காளர் கேது ,குருவின் தன்மைக்கு ஏற்ப அதாவது ஒவ்வொருவரும் செய்யக்கூடிய நல் கர்ம வினைக்கு ஏற்பவே ஞானமும், அவதியும் ,என்பதை சொல்கிறார்...

கேது காயத்ரி மந்திரம்...

ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்..


ஒவ்வொருவரும், debit card எனப்படும் நல்ல கர்மவினைகளை சேர்த்துக் கொண்டு புண்ணிய பலன்களை அனுபவிக்கும் வழியை நோக்கி பயணிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.