08/05/2024

மீட்டான் அப்பனான.. சோழேந்திர சிங்க.. சம்புவராயன்...


சோழப் பேரரசு என்ற பெருமாளிகையைத்  தாங்கி நின்ற தூண்களாக விளங்கிய சிற்றரசுகளில்* *சம்புவராய மன்னர்களும் ஒருவர் ஆவர்.

சோழ சக்கரவர்த்தி இரண்டாம் ராஜாதிராஜ சோழன் அவர்களை "எங்கள் வம்சத்தவர்" என்று காஞ்சிபுரம்* *ஆர்ப்பாக்கம் கல்வெட்டில் குறிப்பிட்ட சம்புவராயர்கள், சோழர்கள் மேற்கொண்ட பல* *போர்களில் பங்குபெற்றனர் என்பதாகும்.

 மாபெரும் வீரர்களாக சம்புவராயர்கள் விளங்கினர் என்பதை சோழர் காலத்திய விரிஞ்சிபுரம் கல்வெட்டு* *நமக்கு மிகத் தெளிவாக  தெரிவிக்கின்றது.

மூன்றாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் :

"செங்கேணி விராசனி அம்மையப்பன் தனிநின்று வென்றான் தன் வசி காட்டுவான்* *அழகிய சோழனான எதிரிலி* *சோழ சம்புவராயனேன்* "

 என்பவர் குறுநிலமன்னராக இருந்தார்.

மாவீரனான இவர் "போரில் தனித்து நின்று பல பேரை வெற்றிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்" ஆவார்.  மேலும் இவர்* " *எதிரிகளுக்கு பேரிடி முழக்கம் போன்றவர்" (விராசனி =  The thunderbolt to heroes) என்பதை* *கல்வெட்டு தெரிவிக்கின்றது..

மேலும் இச் சம்புவராய மன்னர், விழுப்புரம் பிரம்மதேசம் கல்வெட்டில் :

"செங்கேணி மங்கல மீட்டான் அம்மையப்பன் மீட்டான் அப்பனான  சோழேந்திர சிங்க சம்புவராயன்"*  

 என்று குறிப்பிடப்பட்டார்.

இவர் போர்புரிந்து "மங்கலம்'' என்னும் ஊரை மீட்டிருக்கிறார்" என்று தெரியவருகிறது.  எனவே இவர் "மீட்டான்* *அப்பன்" என்றும் "சோழேந்திர சிங்கம்'' (சோழர்களின் சிங்கம்) என்றும் குறிப்பிடப்பட்டார்கள்.

இத்தகைய மாவீரர்களின் தியாகத்தாலேயே, சோழப் பேரரசு தென்கிழக்கு* *ஆசியநாடுகள் வரை தன்னுடைய வெற்றிக் கொடியை நிலைநாட்டியது என்பதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.