08/05/2024

வில்லவன் மாதேவி...

 



(சேர குல அரசி)

பெரும்பாணப்பாடி என்று வழங்கப்பெற்ற திருவல்லம் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று (1092 A.D) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது...

"திருவல்லமுடைய மஹாதெவர்க்கு நீலகங்கன் அச்சலவீமன் அரைசர் தலைவன் என் மகள் பிள்ளையார் வீரசொழதெவர் நம்பிராட்டியார் வில்லவன் மாதெவியார்க்காக வைத்த திருநன்தாவிளக்கு" (S.I.I. Vol-III, No.59).

அச்சல குலமான சேரர் குலத்திற்கு தலைவன் (பீமன் = Head) போன்றவனும், அரசர்களுக்கு எல்லாம் தலைவனானவனுமான நீலகங்கன் அவர்கள், தன் மகளும், அரசர் வீரசோழ தேவர் (மருமகன்) அவர்களின் பட்டத்தரசியுமான வில்லவன் மாதேவியாருக்காக திருவல்லத்தில் உறையும் இறைவனுக்கு திருநந்தா விளக்கு வைத்தார் என்பதை கல்வெட்டு தெரிவிக்கிறது.

முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனும், சாளுக்கிய வேங்கி நாட்டின் அரசருமான வீரசோழ தேவர் அவர்களின் பட்டத்தரசி "வில்லவன் மாதேவி" என்ற சேர குல அரசியாருக்காக, அவரது தந்தையார் நீலகங்கன் என்பவர் திருவல்லம் கோயில் இறைவனுக்கு திருநந்தா விளக்கு வைத்தார்.  

இந்த நீலகங்கன் என்பவரை மேற்குறிப்பிட்ட திருவல்லம் கல்வெட்டு "அச்சல குலமான சேரர் குலத்திற்கு தலைவன்" என்றும் "அரசர்களுக்கு எல்லாம் தலைவரானவர்" என்றும் குறிப்பிடுகிறது.  இந்த குறிப்பின் மூலமாக இவர் "சேர குலத்திற்கு தலைவராக விளங்கினார்" என்று தெரியவருகிறது.

இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக இவரது மகளின் பெயர் "வில்லவன் மாதேவி" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வில்லவர் என்ற பெயரானது  சேரர்களை குறிப்பிடும் பெயராகும்.  சேரர்கள் வில்லவன் என்று சான்றுகளில் குறிப்பிடப்பட்டனர் என்பதாகும்.

930 வருட பழமையான இந்த அரச சமூக கல்வெட்டு சாசனமே "சேர வம்சத்தவர் யார்" என்பதை உறுதிசெய்யும் மிக முக்கியமான சான்றாகும். இதுவே அடிப்படை சான்றாக ஏற்கப்படும்.

நீலகங்கரைய மன்னர்கள் சோழர் கால கல்வெட்டுகளில் "வன்னிய நாயன்", "பள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இடங்கை வலங்கை புராணம் இவர்களை "வில் வீரபராக்கிரமர்", "சம்பு குல வேந்தன்" என்று குறிப்பிடுகின்றன.

குறிப்பு : சேரர் மற்றும் பாண்டியரும் "ஒரே மரபினர்" ஆவர். பல்லவரும் இதே மரபினர் ஆவர்...


Post Credits - Jaya Varman

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.