22/07/2017

நடிகர் கமல் ஒரு கன்னட பிராமணர்...


கதிராமங்களம் போராட்டத்தை திசைத் திருப்பும் வேலையில் இலுமினாட்டி கமல்...

இம்புட்டு ஆபத்தா? மாத்திரைகளை இரண்டாக உடைத்துப் போடுவதால்...


சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ தொடர்ந்து வாசியுங்கள்.

மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும்.

மாத்திரைகளை இரண்டாக உடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மருத்துவரிடம் அதனை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

மாத்திரைகளின் அளவு வேறுபடும் போது அது உடலுக்கு பக்க விளைகளைக் கூட ஏற்படுத்தலாம். இதயம்,ஆர்த்த்ரைட்டீஸ், பிரசர், கை நடுக்கத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாத்திரையின் தயாரிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும். நாம் இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் தான் உடைபடும் என்றும் அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது.

வீரியமிக்க மருந்துகள் வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும். உடைக்கும் போது வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நம் உள்ளுறுப்புகளில் செல்வதால் இதனால் வேறு சில உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவை உடைக்க தகுந்த ஆயுதங்களை கையாளுங்கள். கையாலோ, கத்தியாலோ அல்லது வேறு பல கூர்மையான ஆயுதங்களாலோ மாத்திரைகளை உடைக்க கூடாது. மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும்.

மாத்திரைகளை உடைக்க பயன்படுத்தும் கருவியில் உள்ள அழுக்குகள் மாத்திரைகளில் பட்டு விடும் என்பதாலும் இவற்றை தவிர்ப்பது நலம்.

மாத்திரைகள் சில ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்கக்கூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை இரண்டாக்க போகிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்களில் உடைத்து மாத்திரையின் முக்கிய வேலையே சிதைந்துவிடும்...

தமிழக எல்லை மீட்பு போர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போது, ஈ.வே.ராமசாமி பிள்ளையார் சிலையை உடைத்து தமிழர்களை மடைமாற்றினார்.. எல்லை மீட்பு போர் நீர்த்து போக செய்து தமிழர் நிலங்கள் தாரைவார்கப்பட்டது...



அதே போல பெரியாரியவாதிகள் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை அறிவித்தனர், இந்துத்வா ஆரிய மதவாதிகள் அதற்கு எதிர்வினை ஆற்ற ராம சாமிக்கு பூணூல் போடும் போராட்டத்தையோ செருப்பு மாலை போடும் போராட்டத்தையோ அறிவித்திருக்கலாம் ஆனால் சம்பந்தமே இல்லாமல் குல்லா போடும் போராட்டத்தை அறிவித்தனர். இதற்கு பெயர் தான் social engineering. பிரித்தாளும் உக்தி. இசுலாமிய சகோதர்ர்கள் தமிழர் என்று ஒன்றுபட்டு நிற்பதை சிதைத்து திராவிடர்களிடம் தஞ்சம் புக செய்வது..

இரு ஆரிய அடிவருடிகளும் சேர்ந்து தமிழர் வாழ்வாதார காப்பு போராட்டத்தை மடைமாற்ற, தமிழர் ஒற்றுமையை சிதைக்க, பொது அமைதியை கலைக்க வேலை செய்கிறார்கள்.

தமிழர்கள் உரியை மீட்பு போராட்டத்தில், மண் மீட்பு போராட்டத்தில், வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டத்தில் பங்கெடுக்காத இவர்கள் இருவரையும் தமிழர்கள் தனிமைப்படுத்த வேண்டும்...

மதுவிலக்கும் திமுக, அதிமுக எனும் திருட்டு திராவிடமும்...


இராஜாஜி 1949ல் நிறைவேற்றிய மதுவிலக்கால் 25 ஆண்டுகள் குடிப்பழக்கத்தை மறந்திருந்த தமிழகத்தை,1971 ல் கருணாநிதி சட்டத்தை தளர்த்தி சாராயக்கடைகளைத் திறந்து குடிகார மாநிலமாக்கினார்...

1991ல் மது ஒழிப்பை பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியின் மலிவுவிலை மதுக்கடைகளை (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார்..

பிறகு டாஸ்மாக் கொண்டு வரப்பட்டது...

காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுக்கிறதுல.. அர்ஜுன் சம்பத் பலே கிள்ளாடி தான்...


அதெப்பிடி ஒரே நேரத்துல எல்லாத்தையும் காப்போம்... அர்ஜுன் சம்பத் இஸ் எ மிராக்கில் மேன்...

திருவிளையாடலில் தமிழர் அறிவியல் - 2...


பார்வதி. இந்த பெயருக்கு தனி விளக்கமே தேவையில்லை.

பார் என்றால் இந்த பூமி. வதி என்றால் வசிப்பவர். இந்த பூமித்தாய் தான் அவர். அந்த சூரியனும் இந்த பூமியும் சேர்ந்தால் தான் உலகில் உயிர் உருவாகும்.

சக்தி இல்லையேல் சிவன் இல்லை. சிவன் இல்லையேல் சக்தி இல்லை.

பூமி தனியாகவோ, சூரியன் தனியாகவோ இருந்து உயிர் தர முடியாது. இரண்டும் சேர்ந்ததுதான் அர்த்தநாரீஸ்வரர்.

அர்த்த-பாதி. (அர்த்த ராத்திரியில வந்து எழுப்புறியே ன்னு சொல்வோம்ல)
நாரீ - (நரன் என்றால் மனித ஆண், நரபலி, நரன் என்பதன் பெண்பால் பெயர் நாரீ)
ஈஸ்வரன் - இரட்சிப்பவன், உயிர் கொடுப்பவன், சூரியன்.


அடுத்து..

விநாயகன் - விரிந்த நாயகன்
கணபதி - கணத்த சரீரன். பெரிய வயிறு கொண்டிருப்பது.
பிள்ளையார் -பெரிய பிள்ளை
ஆனைமுகன் / யானைமுகன் / கஜமுகன் / ஐங்கரன்-ஐந்து கரங்களை உடையவன் - எல்லாம் யானையைக்குறிக்கும். மனிதன் காணும் விலங்குகளிலேயே மிகப்பெரியது என்ற அடிப்படையில் இப்பெயர்.

வியாழன் : கிரகங்களிலேயே பெரியது வியாழன். விரிந்த கிரகம், உப்பிய கிரகம் உப்பிட்டர், Jupiter, உப்பர், upper எல்லாம் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள். வியாழனை ஒரு விரிந்த பாத்திரம் போல கருதினால், அதற்குள்ளே எத்தனை பூமிகளை போடலாம் என்றால் 1,320 பூமிகள்.

இந்த வியாழன் தான் விரிந்த நாயகனான விநாயகன்.


அப்ப முருகன் : தமிழர் கடவுள்களில் ஒருவர் சேயோன் என அழைக்கப்படுகிறார். அவர் முருகன். காரணம் அவருக்கு இன்னொரு பெயர் அருகன், ஆறு படை கொண்டவன். இந்த சேயோன் தமிழர்களின் வானவியல் கண்டுபிடிப்பு. அதனால்தான் 6 முனை கொண்ட நட்சத்திரம் அடையாளமாய் கொள்ளப்படுகிறது.


முருகனுக்கான வார்த்தை ச ர வ ண ப வ என்பதும் ஓர் ஆறெழுத்து பெயரே.
எபிரேயர்களின் 'சீயோன்' என்பதற்கும் அடையாளகுறியீடு இதேதான். இந்த ஒப்புமை பற்றி பிறகு பேசலாம்.


வானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. கிரேக்கத்தில் இந்த 6 நட்சத்திரங்களுக்கு பதிலாக, 7 நட்சத்திரங்கள் கொண்டதாக Pleiades என இதே நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகிறது.


இந்த ஆறு நட்ச்சத்திரக்கூட்டம் இருக்கும் நட்ச்சத்திரக்குடும்பத்தின் பெயர் இடபம் (taurus) காளை என்பதே இதன் பொருள்.

வானியலில் உள்ள 27 நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர்.


நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள்.

வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் 'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது.


கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.

இந்த தார் அப்படியே எபிரேயத்திற்கு வரும்போது எஸ்தர், அப்படியே இத்தாலிக்கு வரும்போது எஸ்தெல்லா,  ஸ்தெல்லா-வாகி, ஆங்கிலத்தில் ஸ்டார் ஆகிவிடுகிறது.


சிவ நட்சத்திரமான திருவாதிரை (Betelgeuse) யின் முன்பாக வானில் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்தின் பெயர் காளை (Taurus).

ஜப்பானில் உள்ள ஒரு வாகன நிறுவனத்தின் பெயரே தமிழ் 'ஆறு' என்பதைக் கொண்டிருப்பதோடு இந்த ஆறு நட்சத்திரங்களை நிறுவன அடையாளமாகவும் வைத்திருக்கிறது.


அந்தப்பெயர் சுபஆறு (Subaru)
கார்த்திகை திருவிழா தமிழர்களின் வானியல் அறிவுத்திருவிழா. பூமி, நிலா, சூரியன், இந்த கார்த்திகை நட்சரத்திரக்கூட்டம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரும் நாள் அது.


இந்த Pleiades அல்லது கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் பூமியிலிருந்து 440 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது.


எனவே கார்த்திகேய நட்சத்திரக்கூட்டம் அல்லது முருகன் நம்ம சூரியனைச் சுற்ற வாய்ப்பே இல்லை.


ஆனால் வியாழன் சூரியன், பூமி இரண்டையும் சுற்றுகிறது. காரணம் சூரியனை சுற்றும்போது பூமி இடையில் இருப்பதால் அதையும் சேர்த்தே சுற்றுகிறது..

எனவே தான்..

வியாழன் (பிள்ளையார்) - சூரியன் (சிவன்), பூமி (பார்வதி) யை சுற்றுகிறது. (ஞானப்பழம் கிடைத்தது)..

கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (முருகன்) - சூரியன், பூமியைச் சுற்ற வில்லை.(ஞானப்பழம் கிடைக்கவில்லை.)...

குமரிக்கண்டம் உண்மையா - 3..?


2) சங்கத் தமிழ் இலக்கியக் குறிப்புகளில் குமரி நாடு:

8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள்எழுதிய சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."
இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில்

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.


1. தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், 39 மன்னர்கள் வழிநடத்த இணைந்து நடத்தப்பட்டுள்ளது.
இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.


2. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.


3. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.


4) தமிழகத்தின் கடலில் மூழ்கிய நிலப்பகுதி:

கன்னியாகுமரிக்குத் தெற்கே 300 கி.மீ தொலைவு வரை கடலில் மூழ்கிக் கிடக்கும் தமிழர் நிலம்.

எவரும் கூகுள் நிலப்படத்தில் (Google Earth) பார்க்கலாம்.


5) பூம்புகார் சமீபத்திய ஆய்வில்  கிரஹாம்:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்து தமிழர்களின் சிந்தனைக்கு:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற காரணம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. உண்மையில்  துவாரகை என்பதும் என்பதும் தமிழர் வாழ்ந்த பகுதி தான். அதுபற்றி பின்னர் பகிர்வோம்.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத் தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

1. பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2001-02ல் ஆய்வு மேற்கொண்டார்.

2. அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

3. பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).
காண்க: மலையமான்: நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010.

4. மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. அந்தக் கடலில் மூழ்கியுள்ள மகாபலிபுரம் கோயில் உச்சிப்பகுதி:

அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்....

மிக விரைவில் தூத்துக்குடி திருநெல்வேலி மக்கள் அனைவரும் புற்றுநோயால் சாகவுள்ளனர்...


இங்கு 10 ல் இரண்டு பேருக்கு புற்றுநோய் இருக்கிறது.. அதுவும் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்கும் போதுதான் புற்றுநோய் இருப்பதே தெரியவருகிறது..
பாவம் அப்பாவி மக்கள்...

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது.

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான்.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது.

சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.

தூத்துக்குடி திருநெல்வேலி முழுமையாக அழிவதற்க்குள் முடிவேடு போராட்டமா? அல்லது ஊரைவிட்டு ஓட்டமா? என்று...

குமரிக்கண்டம் உண்மையா - 2..?




1) கடல் அகழ்வாய்வில் குமரி நாடு:
 தெற்கே இந்தியப்பெருங்கடலில் (அதிகபட்ச ஆழம் (Sunda Trench) சுண்டா படுகுழி 8 கி. மீ. அல்லது 7,725 மீட்டர், சராசரி ஆழம் 4 கி. மீ.) உள்ள நீரையெல்லாம் அகற்றினால், (உடனே மத்த கடலேருந்து தண்ணீ வந்துரும்னு சொல்லாதீங்க) தரை எப்படி இருக்கும். குமரிக்கண்டம்னு சொல்லப்படும் பகுதி எவ்வளவு பெருசா இருக்கும். அதையும்தான் பார்க்கலாமே. கடல் நீர் அகற்றப்பட்ட இந்தியப்பெருங்கடல் தரை. இந்தியப்பெருங்கடலின் சராசரி ஆழம் 4 கி. மீ. ஆக இருந்தாலும் பல இடங்களில் 2 கி.மீ. க்கும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரியை ஒட்டி 300 கி. மீ. தூரம் வரை கடலின் ஆழம் அரை கி. மீ. தான்.

இந்தப்பகுதியில் குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் பகுதியில் எத்தனை தமிழ் நாடுகள் இருந்தன என்றால் மொத்தம் 49 நாடுகள்:

1. ஏழ்தெங்க நாடு,
2. ஏழ்மதுரை நாடு,
3. ஏழ்குணகாரை நாடு,
4. ஏழ்பின்பாலை நாடு,
5. ஏழ்குன்றநாடு,
6. ஏழ் முன்பாலை நாடு,
7. ஏழ்குறும்பனை நாடு

இவை ஒன்றும் அறிவியல் தன்மை அற்றது அல்ல.

ஏழ்குணகாரை நாடு - கரை என்பதால் கீழக்குக்கடல் பகுதியில் இவை இருந்திருக்கும்.

ஏழ் குன்ற நாடு - குன்றம் என்பது மலையை சுற்றியுள்ள நாடுகள். குமரியில் மேரு என்றதொரு மலை இருந்ததை ஒப்பிட்டுப் பார்க்க.

இந்தியப்பெருங்கடலுக்குள் இரு பெரும் மலைத்தொடர்கள் இருப்பதைப்படத்தில் காணலாம்.

இந்த மலைத்தொடரில் எப்படி நாடுகள் இருந்திருக்கும் என்று நம்பாதவர்களுக்கு,

படத்தில் உள்ள மேற்குப்புற மலைத்தொடரில் தான், நம்ம ஊரு லட்ச தீவுகள், மினிகாய் தீவுகள், மாலைத்தீவு என்று தமிழ்ப்பெயரிலேயே உள்ள தீவுக்கூட்டம், அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படை கொண்ட டியூகோ கார்சிகா தீவு என இத்தனை நாடுகளும் உண்டு.  

தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 66 மீட்டர். ஜப்பானின் சுனாமி உயரம் அதிகபட்சம் 3 மீட்டர். கி. மு. 10,000 ல் ஏற்பட்ட கடல் கோளின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்தது 120 மீட்டர். 1 அல்லது 2 முறை அல்ல, 3 முறை (500 மீட்டர்). கடல் மட்டம் 400 அடி (120 மீட்டர்) உயர்ந்த பின்னும் மேற்சொன்ன தீவு நாடுகள் இங்கு இருக்கிறது என்றால், 120 மீட்டர் குறைந்தால் எவ்வளவு பெரிய நாடுகள் கிடைக்கும்.

மாலைத்தீவுகளை செய்மதியிலிருந்து (satellite) எடுத்த புகைப்படத்தில் காணலாம்.
ஏழ் மதுர நாடுகள் - தென்மதுரை குமரியின் கடைத் தலைநகரம் என்பதால் இந்நகர் சுற்றி அமைந்த நாடுகள் இவை.

ஏழ்தெங்க நாடு - தென்னை மரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

ஏழ் குறும்பனை நாடு - மேற்சொன்ன தென்னை போலவே பனையும் தென்னகத்திலே அதிகம். ஏழ் பனை நாடு யாழ்ப்பானத்தைக் குறிக்கும்,

பனை மரம் தெற்கத்திய நாடுகளின் மரம்.

தெற்கே செல்லச்செல்ல எண்ணிக்கை அதிகரிப்பதாக விக்கிபீடியா சொல்கிறது.

"கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே."

குணகரை தெங்க பனை இவை எல்லாம் திசை குறித்திருக்க, பாலை நாடுகள் மட்டும் முன் பின் எனக்கூறுவானேன். அவற்றையும் குணப்பாலை குடப்பாலை தென்பாலை வடபாலை அல்லது நடுப்பாலை என கூறாமல் விட்டதன் அர்த்தம் என்ன?

இங்கு தான் நாம் இக்குமரி நில நடுக்கோடு தாண்டி பரந்திருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"

ஆக இங்கு முன் பின் பாலை நாடுகள் எனக்கூறியது.

சூரியனின் மகர ரேகை பயண காலத்தில் ஒரு ஏழு  நாடுகள் வறட்சி கண்டு அவை முன்பாலை எனவும்,

சூரியனின் கடக ரேகை பயண காலத்தில் மற்றொரு ஏழு நாடுகள் வறட்சி கண்டு அவை பின்பாலை எனவும் கூறப்பட்டிருக்கலாம், கீழே உள்ள உலக உருண்டையில் காணப்படுவது போல.

குமரி முனைக்குத் தெற்கே 5,300 கி.மீ. தொலைவில் பிரான்ஸ் நாடு எடுத்துக்கொண்ட ஆம்ஸ்டர்டம் தீவில் (மேலே உலக உருண்டையில் குறியீடு காட்டும் தீவு) நடத்தப்படும் ஆராய்ச்சி, தொல் தமிழர் தொடர்பான மேலும் பல தகவல்கள் தரும்..

அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்...

குமரிக்கண்டம் உண்மையா - 1..?


நான் இதற்கு முன்னர் குமரிகணடத்தை
பற்றி கூறி இருந்தேன். பலர் இதை கற்பனை என்று குற்றம் சாட்டினர் ஆக அதை நிருபிக்கும் பொறுப்பு உள்ளது.

நாம் இதுவரை அங்கோர்வாட் உள்ளடங்கிய தென்கிழக்காசிய குமர் நாகரீகம், ஈரான், காஷ்மீர் உள்ளடங்கிய சுமேரிய நாகரீகம், மெசொபடோமிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், மாயன் மற்றும் இன்கா நாகரீகங்களைப்பற்றி
பார்த்துள்ளோம்.

இனி  இவை எல்லாவற்றுக்கும் மூலமும் தொடக்கமுமாய் இருந்த தமிழரின் பூர்வீகம் பற்றித் தேடுவோம்.

எந்தச்சூழ்நிலையிலும் இந்தக்கட்டுரைகள், தமிழரின் பழம்பெருமை பேசி நிகழ் காலத்தை மறக்கச்செய்யவோ, வீண் பெருமை அரிப்புக்குத் தீனி போடுவதோ அல்ல.

உலகின் எல்லா இனங்களும் தங்களது வரலாற்றை மறக்காதவை, அவற்றை பாதுகாப்பவை,  தமிழினம் தவிர.
தமிழினம் மட்டுமே தன் அழிவில் பெருமை கொள்கிறது. எனக்குத் டமில் வராது என தமிங்கிலம் பேசுவதை ஒரு இயல்பான பரிணாமமாக கருதுவது ஒரு குழு.  தாய் மொழி தெரியாததை பெருமையோடு அறிக்கையிடும் கேவலம் எனக்குத்தெரிந்து தமிழர்களிடம்(?) தான் இருக்கு. மொழி என்பது தொடர்புகொள்ள ஒரு வழி தானே எதுவாயிருந்தால் என்ன என இன்னொரு குழு. தமிழில் பேசினாலே தீவிரவாதியாய் பார்ப்பது இன்னொரு குழு, தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழருக்கெதிராய் பேசும்  குழுக்கள் இன்னொரு பக்கம்.

தமிழரின் வரலாற்றை மறைத்து திரித்து அழித்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வந்திருக்கும் ஆரியக்கூட்டம், இன்றும் கூட பூம்புகார் கடலாய்வு நடத்தி பாதியில் மூடியது,

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை முடிந்து பல வருடங்கள் ஆன பின்னும் இன்னும் வெளியிடாமல் மறைப்பது,

சிந்துவெளி, துவாரகை ஆய்வு முடிவுகள் தமிழருடையதா, ஆரியருடயதா என்ற கேள்விக்கு மழுப்பலாக அது இந்தியருடையது என்ற முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. சொல்வது,

அதே கதைதான் கீழடிக்கும்....

என தன் முகத்தை தெளிவாகவே காட்டுகிறது..

இதற்கு சரியான பதிலை, வரலாற்றுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய தமிழன் எப்படி இருக்கிறான்?

டாஸ்மாக் தமிழன், ரசிகர் மன்றத் தமிழன், கடலைத்தமிழன், எதையும் கலாய்க்கும் தமிழன், வெட்டிபேச்சு பேசியே காலம்போக்கும் தமிழன், தமிழ், தமிழனுக்கெதிராகவே பேசித்திரியும் எட்டப்பத்தமிழன், சாதியத்தமிழன், தமிங்கிலத்தமிழன், 9-5 அலுவல் தமிழன், இந்தியத்தமிழன், இவர்களை மறைமுக ஆரியக்கூட்டம் எனலாம்.

அவர்கள் அங்கிருந்து செய்ய வேண்டிய வேலையை, உள்ளிருந்தே செய்பவர்கள் (பல நேரங்களில் அறியாமலேயே).

பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழர்கள் கட்டிக்காத்த பாரம்பரியம், ஆயிரக்கணக்கில் சித்தர்களும், அறிஞர்களும், கணியர்களும் உருவாக்கிய, வானியல், இலக்கியம், மருத்துவம், கட்டடக்கலை, விவசாயம், மற்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சா. சேகரித்த ஓலைச்சுவடிகள், பாவாணர் கண்டுபிடித்த வேர்ச்சொல் விளக்கவுரைகள் இன்னும் பிற வீனாகப் போய்விடக்கூடாதல்லவா.

தமிழர் வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாய் அல்ல, அறிவியல் பூர்வமாய் அணுகுவோம். உண்மை எது என்பதைத் தேடிக் கண்டு பிடிப்போம். தெரிந்த உண்மையை பகிர்வோம், அறிவிப்போம், அதன் மூலம் தமிழரின் சுயமரியாதையை, தன்னம்பிக்கையை மீட்போம். தமிழால் பன்னெடுங்காலமாய் முடிந்தது, இன்றும் முடியும், தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழி வேலைவாய்ப்பு, தமிழ்வழி அரசாங்கம், தமிழ்வழி தமிழர் மேம்பாடு என ஆங்காங்கே சிறு சிறு முயற்சிகளாய்.

அந்த வகையில் மிகச்சிறிய ஓர் அறிவியல்பூர்வ ஆய்வுத் தேடல் முயற்சிதான் இது.

குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா? தொடரும் பாகங்கள்...