22/07/2017

திருவிளையாடலில் தமிழர் அறிவியல் - 2...


பார்வதி. இந்த பெயருக்கு தனி விளக்கமே தேவையில்லை.

பார் என்றால் இந்த பூமி. வதி என்றால் வசிப்பவர். இந்த பூமித்தாய் தான் அவர். அந்த சூரியனும் இந்த பூமியும் சேர்ந்தால் தான் உலகில் உயிர் உருவாகும்.

சக்தி இல்லையேல் சிவன் இல்லை. சிவன் இல்லையேல் சக்தி இல்லை.

பூமி தனியாகவோ, சூரியன் தனியாகவோ இருந்து உயிர் தர முடியாது. இரண்டும் சேர்ந்ததுதான் அர்த்தநாரீஸ்வரர்.

அர்த்த-பாதி. (அர்த்த ராத்திரியில வந்து எழுப்புறியே ன்னு சொல்வோம்ல)
நாரீ - (நரன் என்றால் மனித ஆண், நரபலி, நரன் என்பதன் பெண்பால் பெயர் நாரீ)
ஈஸ்வரன் - இரட்சிப்பவன், உயிர் கொடுப்பவன், சூரியன்.


அடுத்து..

விநாயகன் - விரிந்த நாயகன்
கணபதி - கணத்த சரீரன். பெரிய வயிறு கொண்டிருப்பது.
பிள்ளையார் -பெரிய பிள்ளை
ஆனைமுகன் / யானைமுகன் / கஜமுகன் / ஐங்கரன்-ஐந்து கரங்களை உடையவன் - எல்லாம் யானையைக்குறிக்கும். மனிதன் காணும் விலங்குகளிலேயே மிகப்பெரியது என்ற அடிப்படையில் இப்பெயர்.

வியாழன் : கிரகங்களிலேயே பெரியது வியாழன். விரிந்த கிரகம், உப்பிய கிரகம் உப்பிட்டர், Jupiter, உப்பர், upper எல்லாம் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள். வியாழனை ஒரு விரிந்த பாத்திரம் போல கருதினால், அதற்குள்ளே எத்தனை பூமிகளை போடலாம் என்றால் 1,320 பூமிகள்.

இந்த வியாழன் தான் விரிந்த நாயகனான விநாயகன்.


அப்ப முருகன் : தமிழர் கடவுள்களில் ஒருவர் சேயோன் என அழைக்கப்படுகிறார். அவர் முருகன். காரணம் அவருக்கு இன்னொரு பெயர் அருகன், ஆறு படை கொண்டவன். இந்த சேயோன் தமிழர்களின் வானவியல் கண்டுபிடிப்பு. அதனால்தான் 6 முனை கொண்ட நட்சத்திரம் அடையாளமாய் கொள்ளப்படுகிறது.


முருகனுக்கான வார்த்தை ச ர வ ண ப வ என்பதும் ஓர் ஆறெழுத்து பெயரே.
எபிரேயர்களின் 'சீயோன்' என்பதற்கும் அடையாளகுறியீடு இதேதான். இந்த ஒப்புமை பற்றி பிறகு பேசலாம்.


வானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. கிரேக்கத்தில் இந்த 6 நட்சத்திரங்களுக்கு பதிலாக, 7 நட்சத்திரங்கள் கொண்டதாக Pleiades என இதே நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகிறது.


இந்த ஆறு நட்ச்சத்திரக்கூட்டம் இருக்கும் நட்ச்சத்திரக்குடும்பத்தின் பெயர் இடபம் (taurus) காளை என்பதே இதன் பொருள்.

வானியலில் உள்ள 27 நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர்.


நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள்.

வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் 'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது.


கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.

இந்த தார் அப்படியே எபிரேயத்திற்கு வரும்போது எஸ்தர், அப்படியே இத்தாலிக்கு வரும்போது எஸ்தெல்லா,  ஸ்தெல்லா-வாகி, ஆங்கிலத்தில் ஸ்டார் ஆகிவிடுகிறது.


சிவ நட்சத்திரமான திருவாதிரை (Betelgeuse) யின் முன்பாக வானில் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்தின் பெயர் காளை (Taurus).

ஜப்பானில் உள்ள ஒரு வாகன நிறுவனத்தின் பெயரே தமிழ் 'ஆறு' என்பதைக் கொண்டிருப்பதோடு இந்த ஆறு நட்சத்திரங்களை நிறுவன அடையாளமாகவும் வைத்திருக்கிறது.


அந்தப்பெயர் சுபஆறு (Subaru)
கார்த்திகை திருவிழா தமிழர்களின் வானியல் அறிவுத்திருவிழா. பூமி, நிலா, சூரியன், இந்த கார்த்திகை நட்சரத்திரக்கூட்டம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரும் நாள் அது.


இந்த Pleiades அல்லது கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் பூமியிலிருந்து 440 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது.


எனவே கார்த்திகேய நட்சத்திரக்கூட்டம் அல்லது முருகன் நம்ம சூரியனைச் சுற்ற வாய்ப்பே இல்லை.


ஆனால் வியாழன் சூரியன், பூமி இரண்டையும் சுற்றுகிறது. காரணம் சூரியனை சுற்றும்போது பூமி இடையில் இருப்பதால் அதையும் சேர்த்தே சுற்றுகிறது..

எனவே தான்..

வியாழன் (பிள்ளையார்) - சூரியன் (சிவன்), பூமி (பார்வதி) யை சுற்றுகிறது. (ஞானப்பழம் கிடைத்தது)..

கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (முருகன்) - சூரியன், பூமியைச் சுற்ற வில்லை.(ஞானப்பழம் கிடைக்கவில்லை.)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.