26/10/2017

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் பேனர் வைக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம்...


தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?


இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்து விட்டு கட்டாயமாக படியுங்கள்...

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது.. என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

இனிக்கும் செய்தியல்ல..

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்..

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன..

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்..

ஒட்டு மொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்து கொண்டால் தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்...

உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ..

இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும் தான் வேலை.

ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும்.

ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்...

இரண்டும் தான் தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவது தான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக் கொள்ளும்.

அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்..

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டு வந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால் தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.
இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகு தான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும் போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தான் அதற்கு வேலை வரும்.

அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்து விடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள் தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்து கொள்ளும் முறை அட்டகாசமானது.

உணவுத் தேவை ஏற்படும் போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டுக் கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டு பிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்..

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன..

வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்...

இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக் கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும் போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும்.

இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம்.

தேனீக்களை அதிகம் காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!

'அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்து வரும் உயிரினங்கள்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன.

அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும்.

ராணி மட்டும் கூட்டில் இருக்கும்.

பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்து விடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும்.

பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்து விடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய் பறந்து போய் அலைந்து திரிந்து இறந்து விடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றே விடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்து விட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகள் சாதனை...


சித்தராவது எப்படி - 23...


ஆனாய் ஆனால் அடைந்தாயா ? என்ற கேள்வி...

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் வெகு விரைவாக பிரபலமாகி விடுவார்கள்..

பிரபலமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை... ஏதோ ஒரு தெய்வத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. பிடித்து பிடித்து அதுவாய் ஆக வேண்டும்..

அதில் தன் நிலையை கரைத்து, அதில் தன் மன நிலையை பலவீனப் படுத்தி செயல் அற்ற ஒரு முடமான நிலைக்கு போக வேண்டும்..

அந்த தெய்வ சிந்தனையில், தனக்கு இறைவனால் அளிக்கப் பட்ட கடமைகளை உதறி தள்ளி விட்டு, அவன் சிந்தனையிலேயே தன் ஜீவ சக்தி முழுமையாக இழந்து எந்த உலக குறிக்கோளையையும் பற்றி நிற்க முடியாத அளவிற்கு பலம் இழந்து, அதனால் உலகப் பற்றுகளை பற்ற முடியாமல் எந்த பற்றும் பற்றாத ஞானி என்ற போலியான பட்டம் பெற்று, தன் முடிவு காலத்தில் தேள் கொட்டிய திருடன் போல், உயிர் துயரத்தை சொல்ல முடியாமல் பெரும் வேதனையை அனுபவித்து, தன் துன் மரணத்தை ஜீவ சமாதியாக தன்னை போற்றியவர்களால் கொண்டாடி கொள்ள வேண்டியது தான்..

நிகழ் கால மகா சக்தியாகிய சிவகலப்பு என்ற உன்னத நிலையை அறவே இழந்து, சவகலப்பு நோக்கிய பயணமே அது..

சிவனை சதா காலம் தன் மனதால் நினைத்து நினைத்து சிவனை பற்றிய விசயங்களாகவே ஆகி விடுவார்களே தவிர சிவன் பெற்ற சக்தியை ஒரு சிறு துளியேனும் பெற்றார்கள் என்றால் கேள்வி குறிதான்...

மனதால் ஆனார்கள் ஆனால் சக்தியை அடைந்தார்களா என்றால் துளியும் இருக்காது..

நிகழ் காலத்தில் இருக்க துளிசக்திகூட இல்லாத அளவிற்கு தெய்வ சிந்தனையால் மோன நிலை என்ற நிகழ் கால தொடர்பை அறுந்த சவ நிலைக்கு ஒத்த மயக்க நிலையை மக்கள் அதிகமாக மதிப்பது ஒரு அறியாமையே...

சிவநிலை என்ற உயர்ந்த தத்துவம் நாம் இழந்து பல காலம் ஆகிவிட்டது..

அதை மீண்டும் நிலை நிறுத்துவது என்பது முடியாதது போல் தோன்றினாலும் நிறைநிலை மனிதன் தோற்றத்திற்கான இரகசியங்கள் வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதால் அது முடியும் என்பதே உறுதியாக தெரிகிறது..

சில உறுதி செய்யப் படாத விதிவிலக்குகள் பக்தியோகத்தில் இருந்தாலும், அவைகள் தனது இரகசியங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் பழைமையாக உள்ளது...

காளி பக்தரான மிக பிரபலமடைந்த இராமகிருஷ்னர் மோன நிலையிலேயே மயங்கி மயங்கி தன் தேகத்தை காப்பாற்றும் வல்லமையை இழந்து புற்று நோயால் மரண அடைந்தார்..

உலகிற்கு, உலக உய்ய என்ன உளவுகளை வைத்து சென்றார் என்றால் கேள்விக் குறிதான்..

ஆனால் உளவுகளை பக்தி யோகம் தாண்டிய நிலையில் சில தகுந்த உளவுகளை வைத்து விட்டுப் போன 3000 ஆண்டுகள் வாழ்ந்த, திருமூலருக்கு எந்த மடங்களும் அமைப்புகளும் இல்லை..

காரணம் மயக்கத்தை நீக்கி தெய்வீக விழிப்பு நிலையாகிய சிவகலப்பை தந்ததால், மயக்கத்தை விரும்பும், மாயையில் சிக்கிய மக்கள், அதனை விரும்பவில்லை..

மயக்கம் தரும் போதை பொருள்களிலும், மயக்கம் தரும் கருத்து போதைகளிலும் மயங்கி கிடக்கவே மனிதனின் சோம்பல் மனம் விரும்புகிறது..

ஆகவேதான் விழிப்பு நிலையில் உள்ள புத்தியும், அறிவும், செயல் படவேண்டிய அவசியம் ஆகிறது..

அவை செயல் பட தொடங்கி விட்டால் எந்த மயக்கமும், தன்னை மறந்த மோன நிலையும், தூக்கமும், முடிவில் மரணமும் இல்லை என்பதாகிறது..

இந்த உயர்ந்த உன்னத நிலை, வெறும் சாதாரண சுவாச ஒழுங்கில் உள்ளது என்றால் மனம் ஏற்றுக் கொள்வது இல்லை..

விழிப்பு நிலையை வெறுப்பதே மனதின் இயல்பு..

இந்த உலகம் ஒரு நிறைநிலை மனிதன் வரவுக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது..

அந்த ஏக்கத்தை போக்க நிறைநிலை மனிதனாக முனைவோமாக....

மெட்டி அணிவது ஏன்..?


மெட்டி அணிவது ஏன் என்று தெரியாமல் வெறும் சம்பிரதாயமாகவே அதனை பார்க்கின்றோம்.

ஆனால் அதற்கு பின்னால் தமிழனின் அறிவியல் ஒளிந்திருக்கிறது...

திருமணமான இந்து பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.

மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது.

அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் பெண்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். தற்பொழுது மயக்கம் ஏற்பட்டால் உடனே பெண்களை படுக்க வைத்து அவரின் கால் விரல்களை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளங்காலை தேய்ப்பார்கள்.

ஏனெனில் கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும் மயக்கம் சோர்வு போகும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோ, சோர்வு, மயக்கம் போன்றவற்றை குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்..

அதுமட்டுமா? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.

இதனாலயே வெள்ளியில் மெட்டி அணியப்படுகிறது...

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்...


உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்...

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,

இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,

மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,

நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள்.

ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது..

நோய் வந்த பிறகு தான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது..

மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது..

இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன..

அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்..

உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக் காற்று தான்..

நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது..

மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும்.

ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம்.

இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை.

நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்...

திமுக வும் அனைத்துக் கட்சி கூட்டமும்...


கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.

அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன..

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது..

இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது..

தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது..

அதற்கு பின்னும் எந்த மாற்றமும் இல்லை.. கச்சதீவு பறிபோய் 500க்கும் மேற்பட்ட உயிர்களும் எண்ணற்ற இழப்பும் ஏற்பட்டது தான் மிச்சம்...

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின படுகொலையை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி 2008 அக்டோபர் 14ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்..

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது..

இரண்டு வாரங்களுக்குள் இந்திய அரசாங்கம் இலங்கையில் போரை நிறுத்த முன்வராவிட்டால் தேசிய பாராளுமன்றத்தில் இருக்கும் மாநில உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக இராஜிநாமா செய்துவிடுவர்..

அதற்கு பின்னும் எந்த மாற்றமும் இல்லை..

ராஜினாமாவும் ஒரு நாடகம் என்று தெரிந்தது தான் மிச்சம்..

இந்திய அரசின் துணையோடு சிங்கள பௌத்த இனவெறி ராணுவம் கோரத்தாண்டவம் ஆடி மே மாதத்தில் மொத்த இனத்தையும் அழித்து முடித்தது..

ஆட்சியில் இருந்து போட்ட அனைத்துக்கட்சி கூட்டமே இந்த லட்சணம் என்றால் எதிர்கட்சியாக இருந்து கொண்டு போடும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் என்ன தந்துவிட போகிறது..

தந்தையும் மகனும் இன்னும் பலி எடுக்காமல் இருந்தால் போதும்...

ஊசல் என்னும் ஊசலாட்டம்...


பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தியுருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர்.

சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்..

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.
முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

பாம்புகள் ராஜ்ஜியத்தால் தடைவிதிக்க பட்ட பகுதி...


பாஜக மோடியின் மெகா ஊழல்...


சென்ற ஆண்டு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அனுப்பும்போது முதல் ஒரு மாதமாக‌ அனுப்பிய நோட்டுக் கட்டுகளின் சீரியல் எண் விவரங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவாகவில்லை.

யார் யாருக்கு, எந்த எந்த வங்கிக்கு எவ்வளவு அனுப்பப்பட்டது என்பது குறித்த ஆதாரம் எடுக்க முடியவில்லை.

பல லட்சம் கோடி ரூபாய் தவறான முறையில் பங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சேகர் ரெட்டி போன்றவர்களிடம் பிடிபட்ட கணக்கற்ற கோடிகள் நடவடிக்கைக்கு தப்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு செய்த மெகா ஊழல் இதுதான் ஆகவே மோடி ராஜினாமா செய்ய வேண்டும்...