29/03/2018

நம் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால்...


ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு...


தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஸ்மல்டர் பிளாண்ட் 2 (புற்றுநோய் நச்சாலை) தொழிற்சாலையின் விரிவாக்க பணியை தடைச் செய்யக்கோரி கடந்த ஆண்டு மனு எண்:DST/377203 நாள்:27/03/2017 அன்று முதன் முதலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திரு.அக்ரி.எஸ்.பரமசிவன் (சமூக ஆர்வலர்)என்பவரால் புகார் மனு அளிக்கப்பட்டது..

அம்மனு மீதான தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பதில் கடிதம்...

கோவில் கருவறையில் அர்ச்சகர் காயக்களியாட்டம்...



நாத்திகம் பேசுறவன் கூட கோயிலுக்கு மரியாதை கொடுப்பான் ஆனா இவனுங்க...?

பாஜக & அதிமுக இனைந்து சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?


சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்...

இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்...

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை - சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார், இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,

தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன்   புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?

அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்.. அமையவிருக்கும் சாலையானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக.( Jindal steel)..

ஆம், ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது.

ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை
புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.

அதில் முதன்மையான திட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது..

இரண்டாவது திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன்மலையில் இருந்து இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது..

இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் இரும்புத்தாது  வளங்களை
வெளிநாடுகளுக்கு  அதிவிரைவாக        ஏற்றுமதி செய்ய வேண்டுமானால்
சென்னை  துறைமுகத்துக்குகொண்டுச்  செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.

அது தான் இந்த சென்னை -சேலம்  விமான சேவை மற்றும்  8 வழி பசுமை சாலை.

இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான
பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.

நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு தமிழக அதிமுக அரசும் உடந்தை.

தயவு செய்து தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து.. கூடுமானவரை ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்,

எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்...

பாஜக காங்கிரஸ் ஸ்டெரேலைட் ஆலையில் வாங்கிய லஞ்சப் பட்டியல்...



Political Funding from Vedanta (Sterlite) to BJP and Congress.. ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசியல் கட்சிகளுக்கு நிதி(லஞ்சம்) கொடுத்த பட்டியல்...

எண்ணமின் அலைகளின் பயணம்...


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன்...

பாஜக மற்றும் அதிமுக இனைந்து.. சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நாசமாக்க தான் இந்த அவசர திட்டங்கள் எல்லாம்...


ஆதாரம்: https://www.deccanchronicle.com/150723/nation-current-affairs/article/namakkal-village-may-be-rich-platinum

சீனாவில் உள்ள சாசிங்சி உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்...


உயிரியல் பூங்காவில் பாம்புக்கு இரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.

ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டு இருக்கும் போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.

இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவிட்டார்கள்.

உண்மையிலேயே அந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது.

நம் இனம் அழிக்கபட்டபோது வேடிக்கை பார்த்த நம்மை விட...

தன் இனத்துக்காக உயிரைவிட துணிந்த அந்த எலிக்கு வாழ தகுதி இருக்கிறது தானே...?

சீன எலிக்கு கூட
வீரமும் மானமும் உண்டு..

இங்கு மானத் தமிழனுக்கு
சாதியும் மதமும் உண்டு...

தமிழின விரோதி பாஜக ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்றான்?


தமிழர்கள் எந்த மதத்தை சார்ந்தாலும், மதம் சாராதவராக இருந்தாலும் தாங்கள் முதலில் தமிழர் என்றே கருதுதல் வேண்டும்...


இனத்தால், மொழியால் நாம் அனைவரும் தமிழர்களே என்று உணருதல் வேண்டும்.

மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர், சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான்.

நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம்.

நம்மை பிரித்தாளும் மதவாதத்தை துரத்தி அடிப்போம். தமிழர்களாக ஒன்றினைவோம்.

தமிழர் என்பதே நம் அடையாளம்..
சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்...