29/03/2018

சீனாவில் உள்ள சாசிங்சி உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்...


உயிரியல் பூங்காவில் பாம்புக்கு இரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.

ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டு இருக்கும் போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.

இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவிட்டார்கள்.

உண்மையிலேயே அந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது.

நம் இனம் அழிக்கபட்டபோது வேடிக்கை பார்த்த நம்மை விட...

தன் இனத்துக்காக உயிரைவிட துணிந்த அந்த எலிக்கு வாழ தகுதி இருக்கிறது தானே...?

சீன எலிக்கு கூட
வீரமும் மானமும் உண்டு..

இங்கு மானத் தமிழனுக்கு
சாதியும் மதமும் உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.