29/03/2018

பள்ளி தேர்வை எழுத வராத மாணவனை அவரின் கிராமத்திற்கு சென்று அழைத்து வந்து தேர்வெழுத வைத்த போலீசார்...


விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வருகிறது. அரசுதேர்வு பணிக்கு சென்ற Gr I,pc 501 மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில், +1  இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவர் மட்டும் நேரம் 9:54 ஆகிரது இன்னும் 6 நிமிடம் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்வு எழுத வேண்டிய மாணவர் இன்னும் வரவில்லை என்று கூறினார்.

உடனே சமயோகிதமாக செயல்பட்ட காவலர் மதன், மாணவரின் விலாசம் தென்கோடிபாக்கம் (நான்கு கிலோ மீட்டர்) கிராமம் என கேட்டு தெரிந்து கொண்டு அந்த ஊர் பக்கம் இன்றைய பகல் ரோந்து காவலர் யார் என்று காவல் நிலையத்தில் Si திரு விஜயகுமார் அவர்களிடம் கேட்டு விசாரித்து உடனே அந்த காவலர் Pc 260 மணிகண்டன் என்பவருக்கு போன் செய்து தகவல் சொல்ல, உடனே காவலர் மணிகண்டன், சிறிது தொலைவில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று மாணவரை சந்தித்து ஏன் தேர்வு எழத செல்லவில்லை என கேட்க, அவரின் பெற்றோருடன் சண்டையிட்டு அழுதுகொண்டு தேர்வு எழுத செல்லாமல் மறுத்துள்ளார்.

உடனே காவலர் நேரமின்மையை கருத்தில் கொண்டு Pc மணிகண்டன், மாணவனை சமாதானப்படுத்தி தனது இருசக்கர வாகனத்தில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்து வந்து அறிவுரை கூறி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் 10.10 க்கு தேர்வு அறைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் மாணவர் நல்ல முறையில் தேர்வு எழுதி முடிந்து நிலையம் வந்து ரோந்து காவலர் மணிகன்டன் அவர்களுக்கும் இதற்கு காரணமாய் இருந்த Gr,I Pc மதன் அவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து நெகிழ்சியுடன் சென்றார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட விழுப்புரம் எஸ்.பி, சம்பந்தப்பட்ட காவலர்களை பாராட்டினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.