29/03/2018

ஓஎன்ஜிசியின் - உறவுக்காரர்கள் கம்யூனிஸ்ட்கள் - பகுதி-1...


போலி கம்யூனிஸ்டுகளின்.. பொய் பித்தலாடம்.. ஏமாற்று பிழைப்புவாதம்...

ஓஎன்ஜியின் மிக முக்கியமான கையாட்கள் தான் இந்த போலி கம்யூனிஸ்டுகள்...

ஆம், காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாயநிலங்களை பாழாக்கி, எத்தனையோ எத்தனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளன.

இந்நிறுவனம் குழாய்பதித்த அத்தனை கிராமப்பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, இருக்கின்ற நீரும் அமிலத்தன்மை பெருகி நஞ்சாகிவிட்டது.

அதனை பயன்படுத்தும் மக்களும் கேன்சர்,சிறுநீரக கோளறு, தோல் நோய்கள் என பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு, இன்றுவரை வாழும் சாட்சியக கதிராமங்கலம், நெடுவாசல், நன்னிலம், கமலாபுரம் என டெல்டா பகுதி முழுவதும் நிரம்பி காணப்படுகின்றனர்.

இது அத்தனைக்கும் காரணம் ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டுமே. இது ஒன்றைத்தவிர காவிரிப்படுகையில் வேறெந்த தொழிற்சாலைகளோ, மண்ணை மலடாக்கும் நிறுவனங்களோ இல்லை!

இவை அனைத்தும் இந்த கம்யூனிஸ்களுக்கு நன்கு தெரியும். எல்லாமே மக்கள் தான். மக்களே தலைமை. மக்கள் தான் சக்தி., என மக்கள் தான் உயிர்மூச்சு என மக்களையே முதலாக கொண்டுள்ளதாய் கொக்கரிக்கின்ற...

கார்ப்ரேட் சதி, ஏகாதிபத்தியம்,  வல்லாதிக்கம் என எதற்க்கெடுத்தாலும் முதலாளித்துவத்தை எதிர்த்து கூப்பாடு போடுகின்ற... இந்த கம்யூனிஸ்டு கட்சிகள் தான் இன்று முற்றுமுதலாக மாறிபோய் விட்டனர்.

ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக, ஓஎன்ஜிசி என்ற அரச கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனத்துக்கு ஆதரவாக கையாட்கள் வேலையை செய்து வருகிறது..

இதுதான் இன்றைய கம்யூனிஸ்டுகளின் உண்மை நிலை.. தான் சார்ந்திருக்கும் பொதுவுடமை சித்தாந்தத்திற்க்கே நேர் எதிராக செயல்படும் துரோகிகள்..

மேடைகளில் மக்களுக்காக முழங்கியும், களத்தில் கார்ப்பரேட் நிறுவனத்திற்க்காகவும் செயல்படும்  பிழைப்புவாதிகள்.

இவை அனைத்தும் உண்மையே. நேரடியாகவே டெல்டா மாவட்டங்களுக்கு வந்து நிலைமையை தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் அவர்கள்

அன்று, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவிக்க வந்தார், அப்போது மக்களிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் "ஓஎன்ஜிசி நிறுவனம் ஆபத்தானது. அதன்மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

நேற்று, சில தினங்களுக்கு முன்பு, மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் திருவாரூரில் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டியில்...

மீத்தேன் திட்டத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஓஎன்ஜிசியை அல்ல. ஒஎன்ஜிசியை எதிர்ப்பது முறையல்ல. அது செயல்பட மக்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.

இன்று, தஞ்சையில் ஓஎன்ஜிசி எதிர்ப்பு போராட்ட குழுவோடு இணைந்து..

ஓஎன்ஜிசியே மண்ணை விட்டு வெளியேறு என்று கோஷமிட்டுக் கொண்டும், மேலும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் முன்னின்று பதாகைகளை பிடித்துக் கொண்டு முதல் ஆளாக கைதாகினார்.

இந்த மூன்று சம்பவத்தையும் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவர்கள் எப்பேற்பட்ட சந்தர்ப்பவாதிகள் என்று.

பொதுவுடமை என்னும் புனித தத்துவத்தையே கேள்விக்குறியாக்கும் போலி பொதுவுடமைவாதிகளை இனங்காணுவோம்..

-தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.