30/04/2018

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்து விடுமாம்...


மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால்
கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’
விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச் சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம்.

இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது.

அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக
இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும்
ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்.

அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து விடும் என்று நம்பப்படுகிறது.

அந்த நாளில் இந்த உலகமும் அழிந்து விடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது...

மருத்துவ மாப்பியா - தடுப்பூசி உண்மைகள்...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 10...

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 10-ம் பகுதியாகும். இது பல்வேறு குறிப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனப் பகுதியாகும்.


இந்த 10-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கத்தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றங்கள் 90% இருக்கும் எனவும், இது வடதமிழகம், தென்தமிழகம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் புயல், மழை, சூறாவளிக் காற்று, கடல் சீற்றம் என இருக்கும்படி அமைய உள்ளதாக இந்த 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவில் மழை பொழிந்து பலத்த சேதங்களை அங்கு ஏற்படுத்தும் என்றும், இது ஒரு வரலாற்று சோகம் போல் அமையும் என சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



அமெரிக்க நாட்டில் வரலாறு காணாத அளவு மழையும், பனியும் இருக்கும் எனவும், கடல் பொங்குதல் போன்ற நிகழ்வுகள் இனி அங்கு அதிகமாக காணப்படும் என்றும், மக்களின் இறப்பு சதவீதம் அங்கு அதிகமாக காணப்படும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


உக்ரைன் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


தமிழக அரசியலில் இனி பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும் என்றும், தமிழக நடிகர்களின் பங்கீடுகள் அதிகமாகவே காணப்படும் என்றும், இதனால் நாட்டு மக்கள் வேதனைப்படும் அளவிற்கு கூச்சல், குழப்பங்கள் தற்போது நிலவ உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் தமிழகத்தின் அவல நிலையை படம்பிடித்து காட்டுகிறது.

பாமரனும் பதவி ஏற்கும் ஆசையில் பல வினோத கருத்துகளை இணையதள வாயிலாக அறிக்கைவிடும் படுகேவலமான அவல நிலை இனி தமிழக அரசியல் களத்தில் நிகழ உள்ளதாகவும், இனி தமிழகத்தில் புதுப்புது கட்சிகள் நிறைய உதயமாகிட உள்ளதாகவும், இதனால் உலக மக்களே தமிழகத்தை திரும்பி பார்க்கும்படி பல மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


வரும் ஆவணி மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக தமிழக மக்கள் எண்ண வேண்டும் என்றும், இந்த மாதத்தில் தமிழகத்தில் பல தெய்வீக அதிசய நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்க இருப்பதாக தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.


மும்பை மிகுந்த மழை சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், 35 % வீதம் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை இழக்கும் சூழல் உருவாக இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.


இனி தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தற்போது வரக்கூடிய “சத்திய யுகத்தை“ பற்றி விளக்கங்கள் கூறும் கல்வெட்டுகளாக இருக்கும் என 10-ம் தீர்க்கதரிசனம் இங்கே தமது கருத்தை பதிவு செய்கிறது.


பதஞ்சலி எனும் அமைப்பு இனி மக்களால் அடையாளம் காணப்படும் என்றும், அதனுடன் கைகோர்த்துள்ள பிற அமைப்புகளைப் பற்றி குறிப்புகள் இனி செய்தி ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிடுவார்கள் என்றும், இதனால் இந்திய தேசத்தில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாக இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


வீர மன்னன் சிவாஜி வாழ்ந்த ஊரில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்படும் என்றும், அக்கல்வெட்டில் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும், அதில் மிகப்பெரியதாக ஒரு குறியீடு இருக்கும் என்றும், அது ஆதிசக்தியின் இரகசிய குறியீடாக அமைந்திருக்கும் என்றும், அதனை மக்கள் இனி எங்கு, இந்த குறியீடு காண முடியும் என்று தேடுவார்கள் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சோழவந்தான் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு இனக்கலவரங்கள் அதிகம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


ஜப்பான் நாட்டில் ஆழிப்பேரலைகள் தாக்கும் மிக கொடுரமான சோகச் சம்பவம் ஒன்று தற்போது ஏற்பட போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கோடைவாசஸ்தலம் ஒன்று மிகப்பெரிய பூமி அதிர்வால் பூமிக்குள் அமிழப் போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது.


மரித்தவர், எழுந்தவர், தோன்றியவர் என்ற சொற்களுக்கு (அடைமொழியாக) உரிய இயேசுவின் இரண்டாம் வருகை தமிழகத்தில் தான் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒரு விஷயம் என்றும், இது மிக, மிக அருகில் நடக்கும் ஒரு சுப நிகழ்வு என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடல்கன்னிகள் என்ற கதாபாத்திரங்கள் நிஜம் என்று நிருபிக்கும் வகையில் இந்த கடல்கன்னிகளை மக்கள் தங்களது புறக்கண்களால் காணும் பாக்கியத்தை அடைவார்கள் என்று 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.  கடல்கன்னிகள், அரிய கடல்வாழ் உயிரினங்கள், அவைகளின் வசிப்பிடங்கள் போன்ற செய்திகள் இனி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் சமயத்தில், வேற்று கிரகவாசிகள் இம்மண்ணில் நிலையாக இறங்குவார்கள் என்றும், இதனால் இப்பூமி பல வியத்தகு ஆச்சர்யங்களை சந்திக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை எடுத்துக் கூறுகிறது.


அலவாய் மலை இனி பிரசித்திப் பெறும் என்றும், அம்மலையில் சித்தர்களின் நடமாட்டத்தை இனி பல மக்கள் காண்பார்கள் என்றும், “குதம்பை“ எனும் சித்தரின் அற்புதங்கள் அங்கு இனி வெளிப்படும் என்றும், பல பக்தர்களுக்கு அவரின் தரிசனம் கிட்ட உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


குதம்பை சித்தரின் பிரவேசம் சேலம் மலைத்தொடர்களில் இனி அதிகமாக இருக்கும் என்றும், மலைகளில் உள்ள தெய்வீக தன்மைகளை மக்களுக்கு இவர் வழிமூலமே இனி தெரியவரும் என்றும், இது சத்திய யுகத்திற்கான வேலையாக மக்கள் கருத வேண்டும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.



கன்னியாகுமரி, வேதாரண்யம், விசாகப்பட்டினம் போன்ற கடல் சார்ந்த ஊர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று 10-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


இறைவன் இடம்பெறும் அந்த இறுதி சபையில் இறைவனின் அற்புதங்களை மக்கள் காணும்படி பல அதிசய சம்பவங்கள் துவங்கிட இருப்பதாகவும், அது துவங்கும் சமயத்தில் சென்னையில் உள்ள “மெரினா பீச்“ பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அது ஒரு வரலாற்றை பதிய வைக்க இருப்பதாக சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறை சார்ந்த குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

மன்னர்கள் ஆண்ட இப்பூமியை இனி மன்னர்கள் போன்ற மக்கள் ஆள்வார்கள் என்றும், அவர்களை இறைவனே தேர்ந்தெடுத்து அரியணையில் அமர வைத்து ஆட்சி செய்யும் பொற்காலம் இப்பூமியில் விரைவில் வந்துவிடும் என்றும், இனி இப்பூமியில் இறைவனின் இறையாட்சி துவங்கிட இருப்பதாகவும், அதன் தூதுவராக ஒரு யோகா அமைப்பு தமிழகத்திலிருந்து செயல்படும் என்றும், அதற்கு அறிகுறியாக இனி தமிழகத்தில் மழை அதிகமாக பெய்யும் என்றும், இனி காவேரியின் வரலாறு தமிழகத்தில் மட்டுமே பேசும் அளவிற்கு அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


கடலோர மாவட்டங்களுக்கு பலத்த கனமழை எச்சரிக்கைகள் தரப்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், மரணத்தின் ஓலம் மிகுந்த உச்சத்தில் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் நமக்கு வரக்கூடிய பேராபத்துகளை சுட்டிக் காட்டுகின்றன.


வரக்கூடிய “மாசி“ மாதம் மிகுந்த மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கும் என்றும், தமிழனின் பெருமைமிக்க ஆட்சியை இறைவன் இப்பூமியில் அமைக்கும் துவக்க காலமாக அக்காலம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

இனி புண்ணிய ஷேத்ரங்கள் யாவும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அதற்கான நிகழ்வுகள் இனி ஒவ்வொன்றாக துவங்கிட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


புகழ்மிக்க ஒருவனின் வருகை இந்தியாவில் தற்போது நிகழ இருப்பதாகவும், அவனின் வருகையை மக்கள் எதிர்நோக்கும் இக்காலமே சத்திய யுகம் என்றும் அதனை காண நாமும் காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

29/04/2018

கண்ணகி விண்ணகம்.. யார் இந்த கண்ணகி.?


பேருந்து டயர் வெடித்து பயணிகள் படுகாயம்...


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செந்தநாடு to பண்ருட்டி சென்ற தனியார் பேருந்தின் மேல்புறம் இருந்த பேருந்தின் கூடுதல் டயர் வெயிலின் வெப்பம் தாங்காமல் வெடித்து விபத்து பேருந்தில் பயணம் செய்த 20.வதிர்க்கும் மேற்பட்டோர் படுகாயம் புதுப்பேட்டை போலீசார் விசாரணை...

சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் தீ விபத்து -20 கடைகள் எரிந்து சாம்பல்...


சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் நடைபாதைக் கடைகள் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகி நாசமாகின. சண்முகா சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் எனுமிடத்தில் பழங்கள், வளையல் கடை, காய்கறி கடை, துணிக்கடை என 20க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்தக் கடைகள் யாவும் தீயில் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் சாம்பலாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

திருட்டு திராவிடம் 2.0 தயாராகிறது தமிழா... விழித்துக்கொள்...


மே 1ந் தேதி கூடும் கிராம சபைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் ஒற்றைத் தீர்மானத்தினை ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்...


உண்மையிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அக்கறை இருக்குமென்றால் தமிழக அரசே முன்வந்து இந்தத் தீர்மானத்தை இயற்றிடச் செய்து தனது பிரதிநிதிகள் மூலம் அதனை மத்திய அரசிடம் சேர்க்க வேண்டும்...

மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு இவ்விதம் எச்சரிக்கை மணியை அடிக்க தமிழக அரசும் மக்களும் தயாராக வேண்டும் என அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 28.04.2018 விடுத்துள்ள அறிக்கையில் ...

காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற மீளாய்வுத் தீர்ப்பு என எந்தத் தீர்ப்பையுமே நிறைவேற்றவில்லை.

காரணம் அதனை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசே இதில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும் செய்வது தான்.

கடைசியாக ஆறு வார கெடு கொடுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. மேலும் தற்போது மீண்டும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கோரிக்கைவிடுத்துள்ளது மத்திய அரசு இது  தமிழகத்திற்கு செய்கிற  மாபெரும் துரோகம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தினர் அதிமுக எம்பிக்கள்.

முதல்வர், துணை முதல்வர் உட்பட தமிழக அமைச்சரவை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், அமைப்புகள் என தமிழகமே இன்றுவரை போராட்டக் களத்திலேயே உள்ளது.

ஆனால் ஸ்கீம் என்ற வார்த்தையை திட்டமிட்டே உருவாக்கி வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்துக்கும் நீதித்துறைக்குமே புறம்பாகவே நடந்து வருகிறது மத்திய அரசு . மோடி இன்றைய நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார் என்று சொல்வதற்கில்லை.

இப்போது கர்நாடகத் தேர்தலை வைத்து தான் இப்படி நடந்துகொள்கிறார் என்று சொல்வதாயிருந்தாலும், அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் வர இருக்கிறதே, அதற்கு என்ன சொல்வது?

ஆக, மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!

எனவே நாம் போராடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் வேறு வழிமுறைகளிலும் நாம் போராட்டத்தை முன்னெக்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் மேலும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் குரல் எழ வேண்டும்.

ஓங்கி ஒலிக்கும் அந்தக் குரல் டெல்லி செங்கோட்டையை எட்ட வேண்டும்.

அந்தக் குரல் கண்டனக் குரலாக, குறிப்பாக மோடி அரசை எச்சரிக்கும் குரலாக இருக்க வேண்டும்.

மே 1ந் தேதி கூடும் கிராம சபைக் கூட்டத்தில் உள்ளாட்சி அதிகாரிகளிடம் நாம் கோரும் ஒற்றைக் கோரிக்கையாக காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த வேண்டும்.

அனைத்து கிராம சபைகளிலும் இந்த ஒற்றைத் தீர்மானத்தினை ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழக அரசே முன்வந்து இந்தத் தீர்மானத்தை இயற்றிடச் செய்து தனது பிரதிநிதிகள் மூலம் அதனை மத்திய அரசிடம் சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.

மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு இவ்விதம் எச்சரிக்கை மணியை அடிக்க தமிழக அரசும் மக்களும் தயாராக வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

மருத்துவ மாப்பியாவின் உண்மைகள்...


அழிவிற்கு தயாராகும் பெருந்துறை... பூமிக்குள் புதையும் கொடூர விஷம்: செத்து மடியும் ஈரோடு மக்கள்...


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, சிப்காட் அமைந்துள்ளது.

இங்கு 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு எந்த ஒரு தொழிற்சாலையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை.

ஆழ்துளை கிணறு அமைத்து சாய கழிவு நீரை பூமிக்குள் நேரடியாக விடுகின்றன. விளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 15 கி.மீக்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை.

சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.

சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர வயிறு உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர்.

ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என வேதிப்பொருட்கள் பன்மடங்கு அதிகம் உள்ளன.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது.

சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது...