01/07/2018

சேலம் கலெக்டர் ரோகினியின் ரகசிய திட்டங்கள்...


ஊடக உளவியல் போர்...


நீங்கள் வெறுப்பதும் அவர்களுடையது தான்..

அதற்கு மாற்றாக தேர்ந்தெடுக்கும் மற்றொன்றும் அவர்களுடையது தான்..

இது உளவியல் போர்..

எந்த ஊடகமும் இங்கு நேர்மையாக இல்லை..

நீங்கள் சமூக ஊடகங்களான யூடியூப் போன்றவற்றில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை..

ஆனால் நீங்கள் Mainstream Media-ல் நுழையும் போது நீங்கள் கையெழுத்து போடும் முதல் ஒப்பந்தமே அவர்களுடன் தான்..

அதில் கட்டுப்பாடுகள் அதிகம், பெரும்பாலும் உள்ளூர் அரசியலை பேச வேண்டும் என்பதை பெரும்பான்மையாக கற்பிக்கப்படும்..

கட்சி அரசியலை விட, ஊடக அரசியல் தான் உங்களை அதிகம் அடிமை ஆக்குகின்றன...

விவசாயத்தை அழிக்கும் திட்டம்...


தரிசு நிலத்தை சோலையாக்கும் கோவையில் ஒரு இயற்கை விஞ்ஞானி தாத்தா...


500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?

"திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுத் தென்னந்தோப்புல இருந்த மரங்கள் எல்லாம் காய்ஞ்சு விழுறாப்பல கனவு கண்டேன். கனவைச் சொல்லி 'மாற்றுப் பயிரை பத்தி யோசிக்கணும்'னு நான் சொன்னத யாரும் நம்பல. எல்லாரும் சிரிச்சாங்க. ஆனா ஒருநாள், கனவு கண்டமாதிரியே என் கண்ணு முன்னாடியே எல்லா மரங்களும் கழுத்தொடிஞ்சு காய்ஞ்சு விழுந்துருச்சு. பக்கத்து தோட்டத்துலயும் அப்படித்தான்.

என்னை உதாசீனப்படுத்துனவங்க மேல கோபமும் ஆத்திரமும் வந்துச்சு. பக்கத்துல இருக்கிற மலங்காட்டுக்குள்ள போய்ட்டேன். காட்டுக்குள்ள கெடச்ச நெல்லி, புளின்னு மரவகை உணவுகளை உண்டு திரிஞ்சேன். இருபது நாள் கழிச்சு மீண்டும் ஊருக்குள்ள வந்தப்ப, பைத்தியக்காரன பாக்குறாப்புல பாத்தாங்க. அதுக்கப்புறம் ஜனங்க என்னை பரிகாசம் பண்றப்ப எல்லாம் வனவாசம் போக ஆரம்பிச்சேன். காடுகளை சுவாசித்து மரங்களோட பேசிப் பேசி நான் இன்னைக்கி இப்படி இருக்கேன்".

முற்றும் துறந்த முனிவர் போல பேசும் விவசாயி இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1997ல் இந்திய அரசின் இந்திரா பிரியதர்சினி விருஷ்சமித்ர விருது பெற்றவர். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுத்தால், அங்கேயே அவர்களது ஜீவாதாரத்துக்கான வழிவகை களைப் பெற்றுத் தந்தால், காடு வளர்ப்பில் புவி வெப்பமயமாதலை தடுத்தால் பாலைவனத்தில்கூட பலன்தரும் மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

எதற்கும் உதவாது என்று வல்லுநர்களே ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றுகிறார் சதாசிவம். திருச்சி டு தஞ்சாவூர் சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள மு.சோலகம்பட்டி கிராமத்தில், தன் நண்பர்கள் துணையோடு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப மா, பலா, தேக்கு, ஈட்டி, செஞ்சந்தனம், பேரீச்சை என விதவிதமான மரங்களை நட்டார். மூன்று இடங்களில் தலா பத்து ஏக்கரிலான குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்தார். சுயதேவைக்கு சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். தரிசாகக் கிடந்த அத்தனை ஏக்கரும் சோலைவனமானது. சதாசிவத்தின் சோலைவனத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் வந்து பாடம் படித்துக் கொண்டு போகிறார்கள்.
அவர்களுக்கு ஆலோசனைகளையும் அள்ளி வழங்குகிறார் சதாசிவம்.

"எனக்கும் மரங்களுக்குமான உரையாடல் ஏழு வயசிலேயே ஆரம்பிச்சிருச்சு.எதுவும் பேசாம நிக்கிறவங்களைப் பார்த்து, 'ஏன் மரம் மாதிரி நிக்கிற?'ன்னு கேப்பாங்க. பலரும் நெனைக்கிற மாதிரி மரம் ஜடமில்லை. அவை ஏதோ ஒன்றை மனிதனுக்கு சொல்ல விரும்புது. இதை நான் சொன்னப்போ ஒருமாதிரியா பார்த்தாங்க. இது சொன்னா புரியாது. அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும். மரங்களை நேசிக்க வேண்டியது நம்ம கடமை. இது புரியாம, மத்தவங்க பரிகாசம் செஞ்சத என்னால தாங்கிக்க முடியல. காட்டுக்குள்ளே போய் மரங்களோட மரங்களா குடியிருக்க ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா காட்டுக்குள்ளே இருந்து புடிச்சுட்டு வந்து படின்னு அனுப்புவாங்க. அடிக்கடி நான் காட்டுக்குள்ள ஓடுனதால பெத்தவங்களும் ஒரு கட்டத்துல பேசாம இருந்துட்டாங்க.

காட்டுக்குள்ள சுத்தும்போதுதான் ஒவ்வொரு மரத்தோட தன்மை, குணாம்சம், அது நம் உயிர் மண்டலத்துக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்குன்னு தேடித்தேடி படிச்சேன். ஆராய்ச்சியும் பண்ண ஆரம்பிச்சேன். காய்கறிகளில் கத்திரிக்காய், முள்ளங்கி போல, காடுகள்லயும் மரக்கத்திரிக்காய், மரத்தக்காளி எல்லாம் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி மனிதனுக்கு நேரடியாக உணவளிக்கும் 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?

கோவையில் சிறுவாணி, போளுவாம்பட்டி, தடாகம், மாங்கரை, பல்லடம், சூலூர், உடுமலை, பெருந்துறை சுற்று வட்டார கிராமங்கள்ல உள்ள தரிசு நில விவசாயிகளிடம் பேசி இந்த மரப்பயிர்களை வேளாண்மை செய்ய ஆரம்பித்தேன். அதில் நான் கண்டது நிரூபணமானது. அதை ஒட்டுமொத்தமா ஒரே இடத்துல செய்து காட்டணும். நான் உருவாக்கியதை இந்த உலகுக்கு அர்ப்பணிக்கணும்ற நோக்கத்தோடுதான் இங்கே இந்த காடுகளை உருவாக்கினேன்"என்கிறார் சதாசிவம்.

தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி உள்ளிட்ட 200 வகை மரங்கள் வளர்ந்து செழித்து நிற்கும் சதாசிவத்தின் இந்த சோலைவனம் இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்...

தனியாரை நோக்கி மின்சாரம்...


சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை விலைக்கு வாங்கிய பாஜக மோடி நண்பர் அதானி....


இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக அதானி குழுமம் எடுத்துள்ள நடவடிக்கை...

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்-அண்ட்-டி ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம்தான் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிர்வகித்து வருகிறது. இது சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீ. இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உள்ளன. இவை சரக்கு பெட்டகங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் திறன் பெற்றவை. அதானி குழுமம் ஏற்கெனவே 7 துறைமுகங்களை (முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட்டனம்) நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது...

பாஜக மோடியின் சாதனை....


இவர்கள் கைது செய்திருப்பது வளர்மதி எனும் பெண்ணை அல்ல...


நமது ஜனநாயகத்தை
நமது சுதந்திரத்தை
நமது முன்னோர்களின் தியாகத்தை

இவர்களின் அரச வன்முறைக்கு அடிபணிய மாட்டோம் என வாட்சப் முகநூலில் மட்டும் சொன்னால் அரசாங்கத்துக்குத் தெரியாது.

வரும் ஞாயிறு ஜுலை 1 காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்திற்கு வந்து சொல்வோம். உரக்கச் சொல்வோம்...

இன்றைய தலைமுறையினருக்கான புதுமொழி...


அசோகர் - வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...


வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?


சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான். இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது. 

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது. அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..


அது  என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,

ஒருமுறை அவர்  அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார். 

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும், அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.  ஏனோ தெரியவில்லை அவர்  திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.


மேலும்  இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர். ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார். ஆனால் தனது 99  சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும்  நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...