01/07/2018

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை விலைக்கு வாங்கிய பாஜக மோடி நண்பர் அதானி....


இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக அதானி குழுமம் எடுத்துள்ள நடவடிக்கை...

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்-அண்ட்-டி ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம்தான் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிர்வகித்து வருகிறது. இது சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீ. இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உள்ளன. இவை சரக்கு பெட்டகங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் திறன் பெற்றவை. அதானி குழுமம் ஏற்கெனவே 7 துறைமுகங்களை (முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட்டனம்) நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.