13/08/2018
பிறவியின் நோக்கம் பற்றி...
ஆண்டவன் படச்சான் என் கிட்ட கொடுத்தான் என்ன அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான் என்ன அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...
இந்த பிரப்பஞ்சம் படைத்து ஒவ்வொரு உயிருக்கும் உணர்வை கொடுத்து அதை
பயன்படுத்தி அனுபவிக்கவே அனுப்பிருக்கிறது..
உயிரினங்களிளே மேம்பட்ட ஒரு விலங்கு என்றால் மனித பரிமாற்றமே
ஆமாம் நம்மை விட உணர்வுகளே பிரித்து பார்க்கும் வல்லமை எந்த உயிருக்கும் இல்லை.
நமக்குள் உதயமாகும் எண்ணங்களை ஒவ்வொரு விதமாக வெளியே காட்டுவோம் (உணர்வுகள்)அப்படி நீங்க எத வெளிய காட்டுறோமோ அதுவே கிடைக்கும் நமக்கும்.
உணர்வின் உதவியோடு நாம் செய்யும் அல்லது எதிர்வினையாற்றும் செயல்களுக்கு ஆதி புள்ளி எண்ணங்கள் அதை வெளியே கொண்டு வருவது உணர்வுகள்..
ஆக மொத்த விளையாட்டுமே உணர்வுகளை வைத்து தான் இருக்கு (எந்திரன் படத்தில் வசிகரன் சிட்டிக்கு உணர்வு கொடுத்த விசயத்த நினைவுல வச்சுக்கோங்க).
இது மூலம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் பதிலுக்கு திரும்ப வாங்க வேண்டும் இந்த கணக்கு எப்போ முடியுதோ அப்போ பிறவி இல்லை (ஏதுமற்ற நிலை / எண்ணங்கள் உதயமாக இருத்தல்).
அதாவது ஒருவனை அடிச்சுடோம் னா நீ பதிலுக்கு அடி வாங்கனும். வாங்காம இறந்தாலும் அந்த அடிவாங்க திருப்பி இந்த சக்கரத்துக்குள்ள தூக்கி போட படுவாய் இந்த சக்கரத்த நிறுத்தனும் எல்லாத்தையும் அனுபவித்து....
ஒரு பிறவில பணக்காரனா இருப்ப மறுபிறவில பிச்சகாரனா கூட இருப்ப...
Simple la solla போனா வாழ்க்கை என்பது அனுபவம்/அனுபவிக்க (தோன்றுவதை செய்யுங்க.. சரி தப்புனு எதுவும் இல்லை)
எல்லாதையும் அனுபவித்து பிறகு எல்லாத்தையும் தூக்கி போடனும் (இதுவே பிறப்பின் ரகசியம்)...
உனக்கு முழுமையா கற்பித்து கொடுத்த பிறகு பிரபஞ்ச சக்தி அதோட இணைத்துக் கொள்ளும்...
என் தாயை கொன்றவனோடு நான் எப்படி சமரசமோ, நட்பு ரீதியாகவோ இருக்க முடியும்...?
அப்படி இருந்தால், அது என் தாய்க்கு நான் துரோகம் செய்வது போன்றது..
இந்த அடிப்படையே தான் அரசியல் நாகரீகம் எனக்கூறி கூறி கடந்த 50 ஆண்டுகளாக நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள்..
அரசியல் நாகரீகம் என்ற ஒரு கொடூரத்தை உங்கள் மனதில் உளவியல் ரீதியாக அதை நல்லதாகவும், இதுதான் நவயுக நாகரீக அரசியல் எனவும் திணித்து விட்டார்கள்...
யாருக்கு மறுபிறவி கிடையாது…?
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது.
யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.
இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை.
இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.
அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.
சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.
பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன.
நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும்.
அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன...
ஜாதக ரீதியாக பார்த்தால் 12 இல் கேது இருப்பவருக்கு மறுபிறப்பு இல்லை... மீண்டும் பிறப்பதும் பிறக்காமல் போவதும் அவர்களின் விருப்பம்...
Subscribe to:
Posts (Atom)









