02/09/2018

இறைவன் திருவடி கண்மணியே...


மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 
அணியே அணியும் அணிக் கழகே  அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே..

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி  பாடல் இது. ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்..

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர்.

அப்படியல்ல.  மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின்  ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள். இதுவே ஞானப்பொருள்.

இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு. அபிராமி  பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணியிலுள்ள ஒளி தான் மருந்து என்றார்.

இதையே வள்ளலாரும் நல்ல மருந்து  இம்மருந்து சுகம் நல்கும்  வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார்.

இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான். நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள். நன்றை த் தான் சொன்னார்கள்...

கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றவர் நாந் தொழுந் தெய்வமே..

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்தாயுமான சுவாமிகள்.

காளத்தியான்  அவன் என் கண்ணில் உள்ளான் காண்' என்  திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்...

அடுத்த தலைமுறையை காப்பாற்றவாது தற்சார்பை மீட்டெடுப்போம்...


விஏஓக்கு லஞ்சம் தர பிச்சை எடுத்த மாணவன்.. கிராம அதிகாரியை காரிதுப்பும் பொதுமக்கள்...


விழுப்புரம் மாவட்டம் மா.குன்னத்தூரை சேர்ந்த ஏழை மாணவனின் தந்தை இறந்து விட்டார். அரசின் ஈமச்சடங்கிற்கு அரசு சார்பில் தரப்படும் 12,500 ரூபாயை பெற அந்த மாணவன் விஏஓ கொளஞ்சியிடம் சென்று விண்ணப்பம் அளித்தார்.

ஆனால் அந்த பணத்தை தர அதிகாரி 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் என்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை என்ற கூறி உள்ளார். ஆனால் அதிகாரி லஞ்சம் கொடுத்தால்தான் பணம் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

இதனால் அந்த மாணவன் விஏஓக்கு லஞ்சம் தர பிச்சை போடுங்க என்று பேனர் அச்சடித்து பிச்சை எடுத்தார். இதனால் பதறி போன விஏஓ அந்த மாணவனை கூப்பிட்டு பணத்தை கொடுத்துள்ளார்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மோர்ஸ் கோர்டு என்றால் என்ன..?


விவேகம் படதில் அஜித் தனது மனைவி உடன் மோர்ஸ் கோடில் பேசுவதும்,
கிளைமாக்ஸ் இல் அவர் மனைவி கண் அசைவுகள் மூலம் மோர்ஸ் கோட் செய்து வில்லனின் இருப்பிடத்தை ஹீரோவுக்கு காட்டி கொடுப்பதும் பார்த்து இருப்பீர்கள்.

அந்த மோர்ஸ் கோட் என்றால் என்ன அதெப்படி கண் அசைவில் எல்லாம் பேச முடியும் . என்பதை இப்போது பார்க்கலாம்.

(பெண்கள் கண் அசைவில் பேசுவதில் வல்லவர்கள். ஆனால் நாம் பார்க்க இருப்பது அதை பற்றி அல்ல ).

Samual f.b morse என்பவரின் பெயரால் அழைக்க படுவது தான் இந்த மோர்ஸ்.

அவர் தான் தந்தியின் தந்தை அதாவது கண்டு பிடிப்பாளர்.

தந்தியில் டக டக என தட்டுவதை பார்த்து இருப்பீர்கள். அது ஏனோ தானோ என்று தட்ட படுவது அல்ல. அதில் ஒரு ஒழுங்கு உண்டு. அது ஒரு பாஷை... தந்தி பாஷை.

கணிணிக்கென்று ஒரு பாஷை உண்டு அல்லவா 0 மற்றும் 1 என்று..

அதை போல தந்திக்கு ஒரு மொழி உண்டு அது புள்ளி அல்லது கோடு என்ற மொழி.


உதாரணமாக மோர்ஸ் கோட் படி A என்றால் ஒரு புள்ளி ஒரு கோடு...

அப்போ AA என்பதை எப்படி எழுதுவீங்க ? புள்ளி கோடு, புள்ளி கோடு.. சரி தானே..

B என்றால் அதன் பாஷையில் ஒரு கோடு அதை தொடர்ந்து மூணு புள்ளி.

(கோடு .புள்ளி .புள்ளி .புள்ளி)

இப்ப AB என்று எழுத வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்...

( ✴ ______   ______✴ ✴ ✴)இப்படி வரும் சரியா ?

இதில் டிட் டாட் டேஸ் என்பார்கள். டிட் என்றால் கோடு டாட் என்றால் புள்ளி டேஸ் என்பது இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி.

ஒரு கோடு என்பது 3 புள்ளிகள் சேர்ந்த அளவில் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு புள்ளி அளவுள்ள டேஸ் அதாவது இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும். மற்றும் இரண்டு வார்த்தைகள் 7 புள்ளி அளவு கொண்ட இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும்.

இந்த புள்ளி கோடுகள் வெறும் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அல்ல நம்பர்களையும் குறிக்க பயன்படுகிறது.

மோர்ஸில் உள்ள மிக சிறிய எழுத்து என்பது E . (வெறும் ஒரு புள்ளி தான் மோர்ஸ் பாஷையில் E).

சரி எதற்கு இந்த புள்ளி கோடு... இதனால் என்ன வசதி ?

இப்போ ஒரு அறையில் நீங்கள் அடைக்க பட்டு இருக்கிறீர்கள் அடுத்த அறைக்கு உங்களால தொடர்பு கொள்ள முடியாது ஆனால் சுவரில் தட்டினால் அல்லது கீறினால் அடுத்த பக்கம் கேட்கும் என்றால் . சுவருக்கு இருபுறமும் உள்ளவர்கள் மோர்ஸ் கோட் தெரிந்தவர்கள் எனில் சுவரில் தட்டுவதை புள்ளி எனவும் கீறுவதை கோடு எனவும் கொண்டு தகவலை பரிமாற முடியும்.

(கோட் பற்றி தெரியாதவர்களுக்கு சுவரில் மாறி மாறி ஏதோ தட்டுவதும் கீறுவதும் போல தெரியும் ).

சரி இப்போ இதை கவனியுங்கள் ..நீங்கள் உயரமான ஒரு கட்டிடத்தில் பெரும் வெள்ளம் அல்லது புயலில் சிக்கி இருக்கிறீர்கள். தூரத்தில் மீட்பு படை கண்ணுக்கு தெரிகிறது ஆனால் கூப்பிடும் எல்லை தாண்டி இருக்கிறார்கள். சைகை செய்யலாம் என்றால் நீங்கள் சிக்கி இருப்பது கும் இருட்டில். என்ன செய்வீர்கள் ?

இப்போது உங்களிடம் டார்ச் இருந்தால் போதும் நீங்கள் தகவலை பரிமாறலாம்.

அதாவது டார்ச்சை அணைத்து அணைத்து போட்டால் அது புள்ளி...

சில வினாடி நீட்டாக எரிய விட்டால் அது
கோடு என்று கணக்கு வைத்து கொண்டு மோர்ஸ் கோடு மூலம் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கலாம் .
உலகம் எங்கும் "உயிர் ஆபத்தில் உள்ளது "என்பதை குறிக்க பயன் படுத்த படும் வார்த்தை... "S. O. S ."
இதன் முழு அர்த்தம் "SAVE OUR SOLE "..

நம்ம மோர்ஸ் கோடில் sos என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்து பாரதால் "புள்ளி புள்ளி புள்ளி.. கோடு கோடு கோடு புள்ளி புள்ளி புள்ளி " என்று வரும்.
(✴✴✴ ____   ____   _____ ✴✴✴ ).

டார்ச்சை வைத்து இதை சொல்ல முயன்றால் மூன்று முறை குறுகிய இடைவெளியிலும் அதை தொடர்ந்து கொஞ்சம் அதிகம் இடைவெளியில் மூன்று முறையும் டார்ச்சை அணைத்து அணைத்து போட வேண்டும்.

உங்கள் கையில் ஏதாவது இசை இருந்தால்.. டிக் டிக் டிக்... டீக் டீக் டீக்... டிக் டிக் டிக் என்று ஒலிக்க வேண்டும்.

விமாணிகளுக்கு... ராணுவத்தில்... மீட்பு படையில்.... பல உயிர் ஆபத்தில்... அவசரத்தில் என்று பல இடங்களில் மோர்ஸ் பயன் படுகிறது.

விவேகம் படத்தில் காஜல் செய்தது என்ன என்று இப்போ புரிந்திருக்கும்.
அதாவது கண்ணை சிமிட்டினால் புள்ளி தொடர்ந்து மூடினால் கோடு.

இனி எங்காவது பெண்கள் கண்களை சிமிட்டி சிக்னல் கொடுத்தால் புரிந்து கொள்வீர்கள் தானே....

பாஜக அடிமை அதிமுகவும் வடசென்னை அழிப்பு திட்டமும்...


பாஜக அடிமை அதிமுகவும் வடசென்னை அழிப்பு திட்டமும்...


விரும்புவது தான் நடக்கும் - WORLD IS A MIRROR...


நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.

இது கதையல்ல…

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்.. அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது...

ஜூலியோ டயஸ் நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

ஒரு சுரங்கபாதையை கடக்கும் போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டுகிறான்.

திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன் ஏஜ் வயது.

அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைக்கிறார் இவர். அவன் தப்பியோட முயற்சிக்கும் தருணம், அவனை கூப்பிடுகிறார்.

“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லார்கிட்டேயும் பணம் பறிக்கிறதா இருந்தா இந்த கோட் உனக்கு தேவைப்படும். இதை போட்டுக்க. ஏன்னா… வெளியிலே ரொம்ப குளிரா இருக்கு!” கூறியவாறே தனது கோட்டை கழட்டுகிறார்.

திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான்.

“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?”

இவர் ஒரு படி மேலே போய் … “நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு ஒ.கே. என்றால் நாம் இருவரும் பக்கத்தில் ஏதாவது கடையில் டின்னர் சாப்பிடலாம்” என்றார்.

அவன் இன்னும் அவரை நம்பாமாலே பார்த்தான்.

“இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ ரிஸ்க் எடுத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் டின்னருக்கு வா…”

திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.

அருகில் சாலையோரம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள்.

மேனேஜர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து இவருக்கு விஷ் செய்கிறார்கள்.

“என்ன இது உங்களுக்கு இப்படி ராஜ மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரோ?”

“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு சாப்பிடுவது வழக்கம்… எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம்”

“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்து கொள்கிறீர்களே…?”

“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று உனக்கு பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”

“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைத்தேன்”

சாப்பிட்டு முடிக்கும்போது, அவனிடம், “என்னிடம் கொடுக்க பணம் இல்லை. பர்ஸ் தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்கு பணத்தை செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.

நியாயமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமே திருப்பித் தந்தான்.

அடுத்து இவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு ஒ.கே. என்றால் இந்த கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்த கத்தியை திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.

ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக் கொண்டது போலவும் ஆச்சு.

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… டயம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதலயும் அவன் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டதலயும் எந்த ஆச்சரியமும் இல்லை” என்றார்.

குறிப்பு :

ஜூலியோ டயஸுக்கு சாத்தியப்பட்ட இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா……..? படும். படும்..

* எதையும் பாஸிட்டிவ்வாக பார்ப்பவர்களுக்கு.

* எந்த சூழலிலும் இன்சொல்லே பேசுபவர்களுக்கு.

* இடியே விழுந்தாலும் நிலைகுலையாத மனப்பக்குவம் இருப்பவர்களுக்கு..

* தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு..

நம்பிக்கையும் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இந்த பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்… அட நீங்கள் விரும்புவது தான் நடக்கும்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


வேற்றுகிரக வாசிகளும் உண்மைகளும்...


வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுகள் 'UFO' வந்து சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது...

ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது.

அப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள், அமெரிக்க போர்வீரர்களை வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வருவதாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டு
சென்ற உணவு வகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கி விட்டார்கள். போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமானதளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.

அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள். பின்னர் அந்த ஆதிவாசிகள், ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களைப் பார்த்து, அதை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத் தொடங்கினார்கள்.

இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் மறுக்கமுடியாத கருத்தாக உள்ளது...