17/10/2018

மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன...


பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

ஏழு பிறப்பு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும் என்பது பொருள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பிரபந்தம்.

ஏழேழ் பிறவி என்றால், நாற்பத்தொன்பது பிறவி என்று அர்த்தமல்ல.

எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும் என்பது பொருள்.

சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.

இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை.

மற்றொன்று, சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?

புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள்.

சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது.

காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண்மை அறிவு.

சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான்.

சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை?

நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறார்கள்.

இவர்களுக்கு மறுபிறவி இல்லை.

உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.

உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்?

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானேதாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா – என்றார் பட்டினத்தார்.

பிறவா வரம் வேண்டும் எம்மானே என்று புலம்பினார் ஒருவர்.

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.

அன்னை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை அப்பனோ
இன்னும் எத்தனை ஜென்மமோ? – என்று கலங்கினார் ஒருவர்.

மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், ஐயையோ. படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும் என்ற அவலமும் சேர்த்து இதிலே எதிரொலிக்கின்றன.

மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.

அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி.

ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான்.

பகவான் ஒன்று சொல்கிறான், மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு என்று.

உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறோம்.

மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.

அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, ஆத்ம சாந்தி.

ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தி அடைவதில்லை.

மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன.

மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.

ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்...

தமிழக கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தல்...


கடத்தலுக்கு துணை போகும் அரசியல்வாதிகளும்.. கண்டு கொள்ளாத காவல்துறையும்...

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று தமிழை கொச்சைப்படுத்திய கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படா தமிழ் வளர்த்தான்..?


வந்தேறி- தெலுங்கு-கன்னடர்கள் திராவிடர்களின் பொய் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லாமல் போகிறது...

போக்குவரத்துறையில் 2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...


தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றன. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவுகள் மற்றும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆர்.சி. புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓட்டுநர் உரிமங்கள் ஏடிஎம் வங்கி அட்டைகளைப் போல் ஒரே வடிவத்திலும், வண்ணத்திலும் இருக்கும் எனவும், இதில் பாதுகாப்பான கொய் லோச் அச்சு தொழில் நுட்பம், மைக்ரோ பிரிண்டிங் மற்றும் சிப்-பில் க்யூ.ஆர். கோடுகள், ஹாலோகிராம், வாட்டர் மார்க் போன்ற தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். போலி காட்டு தயாரிக்காமல் இருப்பதற்கான ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் அந்த அட்டை இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு முத்திரை, உரிமம் வழங்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, ஓட்டுநரின் பெயர், ரத்த வகை, உறுப்புதானம் செய்தவரா என்பது உள்ளிட்ட விவரங்களும், வாகனம் விற்கப்பட்ட தேதி, தகுதி தேதி, வாகன பிரிவு, வர்த்தக பயன்பாட்டுக்கானதா, சொந்த பயன்பாட்டுக்கானதா மற்றும் வாகனத்தின் ஜேசிஸ் எண், என்ஜின் எண், எரிபொருள் புகை வெளிப்படும் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது, தானாகவே பழைய வாகன ஓட்டுநர் உரிமங்கள் புதிய ஸ்மார்ட் கார்டு வடிவத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனச் சோதனையில் காவல்துறை அதிகாரிகள் அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபடும்போது அடுத்த வினாடியே ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே பழைய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் புதிய முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டைகளை வழங்குவதற்காக கூடுதலாக ரூ.18 முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்...

பாஜக நிர்மலா சீதாராமன் மோசடி...


மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...


மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கிவிடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறபோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது.

அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.

மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.

சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.

ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச் சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.

மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள்.

ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.

எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.

இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.

ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.

“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞான பூர்வமாக அறிந்ததன் விளைவே.

மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
உண்மைதான்.

இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. சொல்லுகிறேன்.

பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வமானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.

அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.

பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம - நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.

டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.

ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.

எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.

பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.

வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார்.

இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.

இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்டு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.

தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது.

ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.

பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது நினைத்தேன் வந்தாய், நூறுவயது என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறை பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம்.

உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.

வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...

நீங்கள் மட்டும் இங்கு வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என நினைத்தீர்கள் என்றால்...


இந்த  பக்கம் உங்களுக்கானது இல்லை..

அடுத்த தலைமுறையும் இங்கு வாழ வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்...

கருப்பட்டி சுக்கு காபி சாப்பிடலாம் வாங்க..,


வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம் என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே.

ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது.

அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது.

இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது.

சுக்கு, கருப்பட்டி இட்டு சுக்கு நீர் தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்...

டெங்கு கொசு எச்சரிக்கை...


சாதிப்பெயர் வேண்டாம் என முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...


1929 பெப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத, சாதி அடையாளங்களை அணிந்து கொள்ளக் கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டு வந்தார்.

நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின் ( Packiarajan Sethuramalingam ) தாத்தா ஆவார்.

இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.

இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.

ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

சரி இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.

தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக் கொள்ளும் திமுக  கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.

ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்.

அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்கு செய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன...