17/10/2018

கருப்பட்டி சுக்கு காபி சாப்பிடலாம் வாங்க..,


வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம் என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே.

ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது.

அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது.

இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது.

சுக்கு, கருப்பட்டி இட்டு சுக்கு நீர் தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.