உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்...
டீத்தூள் – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
செய்முறை...
இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.
வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.
பயன்கள்...
எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது.
மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும்.
தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.