17/10/2018

நீயும் நானும் ஒரு மேம்பட்ட பரிணாமத்தில் ஜனனித்திருக்கலாம்...


இந்த வாழ்க்கை நமது வாரஇறுதி விடுமுறை நாளை கழிக்க நம் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்ட நாம் விளையாடும் ஒரு விளையாட்டாக இருக்கலாம்.

எந்த பரிணாமமாக இருந்தால் என்ன ? அதிகாரம் எங்கும் இருக்கும்.. நம் பரிணாமத்தில் அதிகாரத்தில் உள்ளவன் அவனுக்கு பிடித்தவாறு மூளை செயல் பாடு , சுற்றுசூழல், காலக்கட்டம் ஆகியவற்றை அவனது கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருக்கலாம். அவ்வளவு ஏன் நம் பரிணாமத்தில் கீழ் நிலையை சேர்ந்தவன் தன் நிஜ வாழ்வில் அனுபவிக்காத வாழ்க்கையை, அதிகாரத்தை அனுபவிக்க இந்த விளையாட்டில் மேம்பட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் சிலர் கடவுள் கதாபாத்திரங்களில் கூட விளையாடலாம்.

நீயும் நானும் அருகருகே அமர்ந்து இந்த ஆட்டத்தை விளையாடி கொண்டிருக்கலாம். ஒரு ஆட்டத்தில் நண்பர்களாக, ஒரு விளையாட்டில் விரோதிகளாக, சில நேரம் பாலினத்தை மாற்றி, விளையாட குறைவான நேரம் கிடைக்கும் நேரத்தில் ஈசல்களாக, சில நேரங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் என பல் வேறு சூழ்நிலைகளில் பல் வேறு அனுபவங்களை பெற்றிருக்கலாம்.

எனினும் நான் ஏன் இந்த ஆட்டத்தில் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன் ? விளையாட்டை முடித்த பின் நான் என்னை பார்த்து கேட்கப்போகும் முதல் கேள்வி.

அதே போல் கடவுளுக்கு ஒரு செய்தி ( நம் பரிணாமத்தில் இந்த ஆட்டத்தை வடிவமைத்தவனுக்கு ) " உன் விளையாட்டு சலிப்புத்தட்டத் தொடங்கிவிட்டது ".

ஒரே ஒரு சுவாரசியமான ஆசை, என்னுடைய தற்போதைய கதாபாத்திரம் இந்த விளையாட்டை விளையாடும் என்னுடைய உண்மையான உடல் (எண்ணம்) தொடர்புகொள்ள முடியுமா ? அப்படி தொடர்பு கொண்டவர்களைத்தான் " முக்தி " பெற்றோர் என்கிறோமா ?

இப்படியும் இருக்கலாம் ஒரே ஒரு மேம்பட்ட எண்ணோட்டம் பல கதாபாத்திரங்களை வடிவமைத்து அனைத்து கதாபாத்திரங்களையும் அதுவே விளையாடிக் கொண்டிருக்கலாம்.

என்ன இருந்தாலும் எண்ணோட்டங்கள் அனைத்தும் நதிபோல் ஓடி இறுதியில் பெரும் எண்ண கடலில் சேர்கின்றன. ஒவ்வொரு எண்ணங்களும் ஓடும் வழியில் பல்வேறு அனுபவங்களை திரட்டி இறுதியாக ஒற்றை எண்ணக்குவியலில் விழுகிறது.

எது எப்படியோ ஆட்டம் முடிந்ததும் நம் பரிணாமத்தில் சந்திப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.