17/10/2018

நீர் சுத்திகரிப்பு (Water Purifier)....


இந்தியாவில் தண்ணீர் மிகப்பெரும் வணிகமாக உருவெடுத்துள்ளது...

தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களை எண்ணிக்கையில் அடக்கிவிட முடியாது... இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க அடுத்த கட்டமாக தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திர நிறுவனங்கள் தங்களை சந்தைப்படுத்துதலுக்கான இடத்தை நாள் தோறும் பெருக்கி கொண்டே வருகிறது...

இந்த இயந்திரங்களின் மூலம் தண்ணீரை சுத்திகரித்து அதனை பருகும் நாம் என்றாவது அதன் செயல்முறையை பற்றி சிந்தித்து பார்த்தது உண்டா...

விற்பனையாளர்கள் தரமான பொருட்களை தான் நமக்கு கொடுப்பார்கள் என்ற சிந்தையில் தான் நாம் இருக்கிறோம்... அது தான் அவர்களின் மூலதனம்..

இந்த இயந்திரத்தின் மூலம் நாம் பருகிடும் ஒரு லிட்டர் தண்ணீரில் உள்ள மறைநீர் அளவு இரண்டு முதல் மூன்று லிட்டர் ஆகும்.

அதாவது ஒரு லிட்டர் நீரைசுத்திகரிக்கும்  பொழுது மூன்று லிட்டர் நீர் வீனாக்கப்படுகிறது...

அதனை இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் water purification ratio 3:1மற்றும்  2:1 என்று வைத்துள்ளது.. ஒரு இயந்திரத்தின் முழு கொள்ளவு சராசரியாக 7லிட்டர்.. அந்த 7லிட்டர் சுத்திகரிக்க 20லிட்டர் நீர் வீணாகும்...

இந்த இயந்திரங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்போம் நிறுவனங்களை பொறுத்து அதன் சுத்திகரிப்பு படிநிலைகள் அமைக்கப்படுகிறது குறைந்தது  நான்கு அல்லது ஐந்து நிலைகள் இருக்கும் அதாவது தூசி, மணல் நீக்குதல், இரசாயன கலப்புகளை நீக்குதல், உப்பு நீக்குதல், பாக்டீரியா அழித்தல் என்பன.

இதனால் நீரில் உள்ள அனைத்து சத்துகளும் உரிஞ்சப்பட்டுவிடும்...

பிறகு அந்த நிறுவனம் சொல்லும் நாங்கள் mineral cartridge  கொடுத்திருக்கிறோம் அதில் மனித உடலுக்கு தேவையான மினரல்களை சேர்த்து வைத்துள்ளோம் அது நீர் சுத்திகரிப்பு முடிந்தவுடன் இறுதிகட்ட நிலையில் நீரில் சேர்க்கப்டும் என்று.

இயற்கையாக நீரில் உள்ள அனைத்து சத்துகளையும் அகற்றிவிட்டு செயற்கையான ரசயானங்களை சேர்த்து கொடுக்கப்படுகறது.. இது தான் அந்த மினரல் காட்ரிட்ஜ்-ன் பணி.

 ஒவ்வொரு இடத்தில் உள்ள தண்ணீரானது அந்தந்த மக்களுக்கு ஏற்புடையதாகவே இருக்கும்... அதனால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் தான் சுத்தமான நீர் கிடைக்கும் என்ற எண்ண ஓட்டத்தை மாற்றிடுங்கள்.. தண்ணீரை அதன் இயற்கை சத்துகளுடன் பருகுவது தான் சிறந்தது..

மேலும் ஒரு முக்கியமான விடையம் அது தான் இயந்திரத்தின் உற்பத்தி விலை.. ஒரு  RO  இயந்திரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவு ரூ 3500 முதல் ரூ. 4000 வரை மட்டுமே... ஆனால் விற்பனை நடிகர்/நடிகைகள், சச்சின், தோனி போன்றவர்கள் வருவதால் விளம்பரம்ங்களுக்கு உண்டான செலவையும் சேர்த்து மூன்று மடங்கு அதிகமாக நம்மை வாங்க வைக்கிறார்கள்...

இவர்களிடம் ஏமாந்தது போதும்...
இயற்கை முறையில் பயணிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.