17/10/2018

போக்குவரத்துறையில் 2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...


தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றன. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவுகள் மற்றும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆர்.சி. புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓட்டுநர் உரிமங்கள் ஏடிஎம் வங்கி அட்டைகளைப் போல் ஒரே வடிவத்திலும், வண்ணத்திலும் இருக்கும் எனவும், இதில் பாதுகாப்பான கொய் லோச் அச்சு தொழில் நுட்பம், மைக்ரோ பிரிண்டிங் மற்றும் சிப்-பில் க்யூ.ஆர். கோடுகள், ஹாலோகிராம், வாட்டர் மார்க் போன்ற தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். போலி காட்டு தயாரிக்காமல் இருப்பதற்கான ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் அந்த அட்டை இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு முத்திரை, உரிமம் வழங்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, ஓட்டுநரின் பெயர், ரத்த வகை, உறுப்புதானம் செய்தவரா என்பது உள்ளிட்ட விவரங்களும், வாகனம் விற்கப்பட்ட தேதி, தகுதி தேதி, வாகன பிரிவு, வர்த்தக பயன்பாட்டுக்கானதா, சொந்த பயன்பாட்டுக்கானதா மற்றும் வாகனத்தின் ஜேசிஸ் எண், என்ஜின் எண், எரிபொருள் புகை வெளிப்படும் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது, தானாகவே பழைய வாகன ஓட்டுநர் உரிமங்கள் புதிய ஸ்மார்ட் கார்டு வடிவத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனச் சோதனையில் காவல்துறை அதிகாரிகள் அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபடும்போது அடுத்த வினாடியே ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே பழைய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் புதிய முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டைகளை வழங்குவதற்காக கூடுதலாக ரூ.18 முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.