17/10/2018

எண்ண விதைத்தல்...


multi beam pendulam
water drop splash

(law of attraction ) ஈர்ப்பு விதியை கொஞ்சம் வெற மாதிரி செய்ய முயற்சி செய்வேன்  அதில் இரு முறைகளை சொல்லுறேன்..

நமது எண்ணங்களுக்கு ஏற்பதான் நிகழ்வுகள் நடக்கிறது என்று நாம் அறிந்த ஒன்றே..

அப்போ நமக்கான தேவைகளை நமக்குள் விதைத்து எண்ண அலைகளை உருவாக்கினால் அது பிரபஞ்சத்தில் விதைந்து நினைத்ததை நிகழ்த்தும் நமது ஆழ்மனத்திலும் பதிவாகி அதற்கேற்ப subconscious ல் விதைத்து அது மூளையில் வளரும் அதற்கு ஏற்ப நமது அசைவுகளும் மாறும் மாற்றப்பட்டும்..

multi beam pendulam...

இந்த வகையான pendula தை அசைத்தால் அதாவது ஒரு beam ஐ இழுத்து விட்டால் அந்த குண்டு மற்ற குண்டுகளின் மீது மோதும் நாம் இழுத்து விட்ட அதே வேகத்தில் மறுபக்கத்தில் உள்ள கடைசி இரும்பு குண்டும் தானாக பின் சென்று அதே வேகத்துடன் அதே போல  அதன் அருகே உள்ள குண்டை இடிக்கும் இந்த செயல் ஓயாது இயற்பியல் விதி அப்படி
நாம் நிறுத்தும் வரை நிக்காது.

அப்படி இந்த இரும்பு குண்டுகளின் மோதலில் உருவாகும் ஒலிகளில்  அதிர்வுகள் உண்டாகும் தானே. இந்த ஒலி யானாது ஓம்(அ+உ+ம்) எனும் பிரவனத்தில் தான் சேர்கிறது.

இந்த அதிர்வுகளில் நமக்கு தேவையானதை முறையிட்டு / விதைத்து எண்ணங்களை இதன் உதவியோடு  இணைதால் பிரபஞ்சத்திடம் (ௐ ) சேர்த்துவிடும் ..

இதை நமது மனதிற்குள்ளும் செய்யலாம் ஆனால்  பின் பற்ற முடியுமா? அதுவும் எத்தனை முறை மனதில் நினைப்போம் நாம் ? எனவே இந்த முறையை பயன் செய்வேன். நாம் நல்லா இருக்கனும்னு என்ற எண்ணங்களை மற்றவர்கள் சொல்லி எண்ண அலைகளை உருவாக்காகி இறைவனிடம் வேண்டுவது போல்.

விதைப்பது : இரும்பு குண்டை இழுத்து விடும் போது முறையிடு சாமிட்ட வேண்டுவது போல வாய்விட்டு தேவைகளை சொல்லலாம்.


water drop splash...

பொதுவாக எல்லா பொருட்களும் தன்னோட நினைவுகளை பதிவு செய்து கொள்ளும் என்று நாம் அறிந்த ஒன்று தான் உயிராக இருந்தாலும் சரி உயிரற்றவைகளாக இருந்தாலும் சரி
நீரும் அப்படி பட்டது தான.

water has memory என பலரும் அறிவியல் பூர்வமாக நிறுவிறுக்காங்க பலர். இதை தான் நாம் இப்போ பயன்படுத்த போறோம்..

நான் 3 மாதங்களுக்கு முன் ஊருக்கு  சென்றிருந்த போது இதை செய்தேன் ஒரு சின்ன plastic  bottle லில் நீரை ஊற்றி அதில் எனது தேவைகளை சொல்லுவேன் கடவுளிடம் முறையிடுவது போல ஆனால் தினமும் ஒவ்வொரு தேவையை முறையிட மாட்டேன் இரண்டே தேவை முக்கியமானதேவை தான்.

தினமும் அந்த தேவை மட்டுமே முன் வைப்பேன் பின் அந்த bottleலின் கீழ் சிறு துளை போட்டேன் அதிலிருந்து நீர் கீழே சொட்டுவது போல் வடிவமலத்தேன்.

plastic bottle ல அந்தரத்தில் சில கருவிகளின் உதவியோடு நிறுத்தி 30sec க்கு ஒரு துளி தரையில் விழுந்து சிதறுவது போல் செய்தேன் , நான் வச்சிருந்த bottle அளவில் 15  நிமிடம் இந்த நிகழ்வு நடக்கும்.

தாய பழித்தாலும் தண்ணீரை பழிக்காத என்று சொல்வாங்க காரணம் நீர் எண்ணகளை பதிவு செய்யும் என்பதால்..

அதற்கேற்ப இயங்கும் நீரும். எங்க வீட்டில் உள்ள மரத்திற்கு நீரை ஊற்றும் போது அந்த நீர் மரத்திற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லி தான் ஊற்றுவேன்.

(சாபம் விடும் போது கமண்டலத்தில இருக்கிற நீரால அவர்களோட வார்த்தைகளை /மந்திரங்களை/எண்ணங்களை விதைத்து தெளிச்சி விடுவாங்க may be இதுவாக கூட இருக்கலாம்)

எனது எண்ணங்களை பதிவு செய்த நீர்கள் ஒவ்வொரு துளியாக தரையில் விழுந்து தெரித்து உருவாக்கும் அதிர்வுகள் நமது எண்ணங்களை ஒலிக்கிறது. அதிர்வாகளில் எனது எண்ணங்கள்  இணைந்து பிரபஞ்சத்தில் விதைக்கிறது.

இப்படியும் எண்ணங்களை விதைத்து அறுவடை செய்யலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.