30/10/2018

கன்னடன் கமலுக்கு எப்படி தமிழன் வலி புரியும்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மிகவும் பிரபலமான சதிக் கோட்பாட்டு வலைத்தளங்களில் ஒன்றுக்கு பின்னால் ஒரு யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர், "மென் இன் பிளாக்" என்றழைக்கப்படும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை வெளியில் எடுத்துக்கூற முயற்சித்து வருகிறார்.

வேற்றுகிரகவாசிகள் இருப்பதைக் காட்டிலும் அரசாங்கத்தின் முக்கிய பணி இவர்களை பற்றிய தடயங்களை மறைப்பது தான். ஏனென்றால் இது உலகை ஆள்பவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும். மேலும் மதம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் முறிவுக்கு வழிவகுக்கும்.

புதன் கிரகத்தின் மேற்பரப்பில் வேற்றுகிரக கட்டடங்களின் சான்றுகள் இருப்பதை நாசா விண்வெளி ஆய்வுப் படங்களில் கண்டறிந்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். புதன் கிரகத்தில் அவர்கள் நெருக்கமான கட்டமைப்புகளில் உள்ளனர். அவர்கள் மேற்பரப்பில் அல்லாமல் கீழே ஆழமாக உள்ளனர். தேவை கருதியே மேற்பரப்புக்கு வருகின்றனர்.

மேலும் அதன்  வெப்பம் நிலை, பகல் நேரத்தில் 800 டிகிரி பாரன்ஹீட் (430 டிகிரி செல்சியஸ்) மற்றும் இரவில் வளிமண்டல -90 டிகிரி ஃபெரேன்ஹீட் (-180 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அதன் வளிமண்டலத்தில் அடைந்தாலும் கூட. அங்கு, பூமி போன்ற விலங்குகள், புதைபடிவங்கள், அழிந்துபோகும் கட்டிடங்கள், மற்றும் வேற்றுகிரக மனிதர்கள், உள்ளனர் என்பதற்கான சான்றுகள் NASAவிடம் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல், இந்த படங்கள் மூளை செய்யும் தந்திரங்கள் என்றும், பொதுவாக கண்கள் மேகங்கள் அல்லது பாறையின் மேற்பரப்பில் உள்ள முகங்களைப் பார்க்கும் போது, ​​அவைகள் கண்களின் காட்சிபிழையாக இருக்ககூடும் என்கின்றனர். நம் சூரிய மண்டலத்தில் வேற்றுகிரக வாழ்வின் அடிப்படை வடிவங்களைக் கூட இதுவரை தாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று நாசா மறுக்கிறார்.

அமெரிக்க அரசாங்கம் யுஎஃப்ஒ பற்றிய ஆய்வுகளில் ஆர்வமற்றதாக இருப்பதாகவும், வேற்றுகிரக உயிரினங்கள் சத்தியத்தை தேடுபவர்களுடைய வேலையை இடை மறுக்கிறது என்றும் கூறுகிறார்...

Conspiracy Theory ...


உங்களின் ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் இந்த ஒரு வார்த்தை தான் பதில் என்று நீங்கள் திரும்பி சென்று விடுகிறீர்கள்...

ஆனால் ஒரு உண்மை Conspiracy Theory என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள் அமெரிக்காவின் CIA தான்...

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க...


1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக...

பாஜக மோடி க்கு இந்தியாவின் வளர்ச்சி என்பது ஜியோ நெட் தான்...


வேலூர் - விரிஞ்சிபுரம் - தமிழனின் காலம் காட்டும் கல்..


வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்...

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில்.

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்...

தங்கம் கருப்பு பணத்திற்கே முதலாளி...


இளைஞர்களை இந்த கேடுட்கெட்ட மோகத்தில் இருந்து வெளியே வாருங்கள் நமக்கு காலம் குறைவாகவே உள்ளது.

உனக்கு விடுமுறை ஞாயிறு தான், அவன் கடையை திறப்பதும் இதை ஞாயிற்றுக்கிழமை தான். ஏன் ?

ஏனென்றால் நீ அடிமை என்று அவனுக்கு தெரியும் உன்னை எப்படி அவன் கடையை தேடி வர வைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும் வணிக அரசியல்...

பெண்ணியம்...


பெண் = ஆண் 

இப்போது இருக்கும் பெண்கள் நிஜமாகவே பெண் தன்மையுடன் தான் இருக்கிறார்களா ?

100 வருடங்களுக்கு முன் பெண்களுக்கு தாடி மீசை வளர்ந்தது என்ற செய்தி இருக்கிறதா ?

இப்போதுள்ள பெண்களில் 7/10 பெண்களுக்கு மீசை முளைக்கிறது தாடி வளர்க்கிறது.... ஏன் என்று கேட்டால் ஹார்மோன்களில் பிரச்சனை என்கிறார்கள்.... நாங்கள் கேட்ட கேள்வி ஏன் என்பது ஆனால் நவீன அறிவியலோ எப்படி என பதில் கூறுகிறது....

ஹார்மோன் சுரப்பதால் உடலில் மாற்றம் உண்டாகிறது.... எண்ணங்களில் மாற்றம் வருவதால் தான் ஹார்மோன் சுரக்கிறது....

இப்போதுள்ள பெண்கள் சிறு வயதில் இருந்தே ஆண்களை போல வளர்க்கப்படுகிறார்கள்... ஆண்களை போல உடைகளை உடுத்த சொல்லி தரப்படுகிறது... ஆண்களை போலவே முடிகளை வெட்ட சொல்லி தருகிறார்கள்.....

ஆண்கள் என்றால் ஏதோ உயர்ந்த இனம் போல... ஆண்களை போல ஆண்களை போல என பெண்ணியவாதிகள் செய்யும் அத்தனையும் பெண்மையை கேவலப்படுத்தும் செயலே அன்றி வேறு ஏதும் இல்லை.....

இந்த தாக்கத்தால் வளர்க்கப்படும் குழந்தை பெண்மையை விட்டு ஆண்மையை தன் உடலில் ஏற்றி கொள்கிறது.... அதனால் தான் ஆண் உடலில் வரும் ஹார்மோன்கள் இதில் சுரக்கிறது.....

பெண்மை மிகஅழகானது.... ஆண்மை கரடுமுரடானது....

இதில் சமம் என்ற பேச்சுக்குகே இடம் இல்லை....

ஒருவிடயத்தில் ஒருவர் உயர்ந்தவர்.. மற்றொரு விடயத்தில் மற்றொருவர் உயர்ந்தவர்கள்.... இந்த புரிதல் தான் அவசியமே தவிர.... நாம் சமம் நாம் சமம் என உறுதிமொழி எடுப்பது இல்லை... உண்மையாக அப்படி சமமாகவும் இருக்க முடியாது.....

இரு பொருள்களின் தளம் சமமாக உள்ளதை எடுத்து இரண்டையும் பொருத்தி பாருங்கள்.. அது நிலைதன்மை இல்லாததாகவும்..... எப்போது வேண்டுமானாலும் ஒன்றை மாற்றொன்று விலகி செல்லும் நிலையில் தான் இருக்கும்.... அதே அதில் ஏற்ற இறக்கமான பொருந்தக்கூடிய இரு அமைப்புகளை பொருத்தினால் அது எந்த வகையிலும் ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்து செல்லாது....

அது போல தான்.... ஆண் பெண் உறவுகளும் ..... அது எந்த வகையிலும் சமம் இல்லை.....  நீங்கள் சமம் சமம் என கொண்டு வந்த கருத்தியல் ஒரு வீட்டில் ஆணுக்கு ஒரு Shaving razor
பெண்ணுக்கு ஒரு Shaving razor
என்ற சமத்தில் தான் கொண்டு வந்து விட்டு இருக்கிறதே தவிர.... வேறு ஒரு மயிருக்கும் உதவவில்லை....

மூட்டாள் பத்தர்களே சாமியார்களின் ஏடிஎம் கள்...


தமிழன் கண்டு பிடிப்பான திருகை...


நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது..

திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு...

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்..

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்..

சமாச்சாரம் இது... இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்...

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்...

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்..

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்...

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...