30/10/2018

பெண்ணியம்...


பெண் = ஆண் 

இப்போது இருக்கும் பெண்கள் நிஜமாகவே பெண் தன்மையுடன் தான் இருக்கிறார்களா ?

100 வருடங்களுக்கு முன் பெண்களுக்கு தாடி மீசை வளர்ந்தது என்ற செய்தி இருக்கிறதா ?

இப்போதுள்ள பெண்களில் 7/10 பெண்களுக்கு மீசை முளைக்கிறது தாடி வளர்க்கிறது.... ஏன் என்று கேட்டால் ஹார்மோன்களில் பிரச்சனை என்கிறார்கள்.... நாங்கள் கேட்ட கேள்வி ஏன் என்பது ஆனால் நவீன அறிவியலோ எப்படி என பதில் கூறுகிறது....

ஹார்மோன் சுரப்பதால் உடலில் மாற்றம் உண்டாகிறது.... எண்ணங்களில் மாற்றம் வருவதால் தான் ஹார்மோன் சுரக்கிறது....

இப்போதுள்ள பெண்கள் சிறு வயதில் இருந்தே ஆண்களை போல வளர்க்கப்படுகிறார்கள்... ஆண்களை போல உடைகளை உடுத்த சொல்லி தரப்படுகிறது... ஆண்களை போலவே முடிகளை வெட்ட சொல்லி தருகிறார்கள்.....

ஆண்கள் என்றால் ஏதோ உயர்ந்த இனம் போல... ஆண்களை போல ஆண்களை போல என பெண்ணியவாதிகள் செய்யும் அத்தனையும் பெண்மையை கேவலப்படுத்தும் செயலே அன்றி வேறு ஏதும் இல்லை.....

இந்த தாக்கத்தால் வளர்க்கப்படும் குழந்தை பெண்மையை விட்டு ஆண்மையை தன் உடலில் ஏற்றி கொள்கிறது.... அதனால் தான் ஆண் உடலில் வரும் ஹார்மோன்கள் இதில் சுரக்கிறது.....

பெண்மை மிகஅழகானது.... ஆண்மை கரடுமுரடானது....

இதில் சமம் என்ற பேச்சுக்குகே இடம் இல்லை....

ஒருவிடயத்தில் ஒருவர் உயர்ந்தவர்.. மற்றொரு விடயத்தில் மற்றொருவர் உயர்ந்தவர்கள்.... இந்த புரிதல் தான் அவசியமே தவிர.... நாம் சமம் நாம் சமம் என உறுதிமொழி எடுப்பது இல்லை... உண்மையாக அப்படி சமமாகவும் இருக்க முடியாது.....

இரு பொருள்களின் தளம் சமமாக உள்ளதை எடுத்து இரண்டையும் பொருத்தி பாருங்கள்.. அது நிலைதன்மை இல்லாததாகவும்..... எப்போது வேண்டுமானாலும் ஒன்றை மாற்றொன்று விலகி செல்லும் நிலையில் தான் இருக்கும்.... அதே அதில் ஏற்ற இறக்கமான பொருந்தக்கூடிய இரு அமைப்புகளை பொருத்தினால் அது எந்த வகையிலும் ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்து செல்லாது....

அது போல தான்.... ஆண் பெண் உறவுகளும் ..... அது எந்த வகையிலும் சமம் இல்லை.....  நீங்கள் சமம் சமம் என கொண்டு வந்த கருத்தியல் ஒரு வீட்டில் ஆணுக்கு ஒரு Shaving razor
பெண்ணுக்கு ஒரு Shaving razor
என்ற சமத்தில் தான் கொண்டு வந்து விட்டு இருக்கிறதே தவிர.... வேறு ஒரு மயிருக்கும் உதவவில்லை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.