30/10/2018

ஜியோவில் இனிமேல் ஆபாச படங்களை பார்க்க முடியாது.. வாடிக்கையாளர்களுக்கு செக்...


உலகளவில் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது.  ஆபாச இணையதளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை.
இந்த நிலையில் ஆபாச இணைதளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27 ஆம் தேதி உத்தரவிட்டனர்.

தற்போது ப்ரீ டேட்டா கிடைப்பதால் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் பார்ப்பதாகவும், அதனால் குற்றச் செயல்கள் பெருகுவதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாது ஜியோ நெட்வொர்க் வந்த பிறகு ஆபாச இணையதளங்களை மக்கள் அதிகமாக பார்ப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஆபாச வலைத்தளங்களைப் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜியோவின் இந்த அதிரடி திட்டத்தால், பல நல்ல மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவர்கள், இளைஞர்களிடையே நல்ல மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்றும் கூறப்படுகிறது.

ஜியோ நெட்வொர்க்கின் இந்த திட்டத்தால் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் ஜியோவை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆபாச இணையதளத்தை பார்ப்பதை கட்டுப்படுத்தவே ஜியோ நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.