07/01/2019

சிவப்பு அரிசி ரகசியங்கள்...


சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுச்(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. யப்பான், கொரியா, பிலிப்பைன்சு(ஸ்), இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.  இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.

இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு ஆட்சி செலுத்துபவர் (Governor) இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்.

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், எரியம் (Phosphorus) போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் லோவாஸ்டேடின் (Lovastatin)  என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர்.

இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் (Asthma) மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

இரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்(ஜ்)யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர்.

'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது...

அரசுகள் அம்பலம் - isis அமெரிக்காவால் வளர்க்கப்பட்டதின் நோக்கம்...


இரண்டு பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர்...


கடலூர் மாவட்டம் திட்டகுடியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியையும், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 19 பேர் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் , கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது

13 வயது மாணவி பெற்றோரை  இழந்தவள் என்பதால் தன் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். அவள் திட்டக்குடியில் படிக்கும் பள்ளி அருகே உள்ள இட்லி கடையில் பலகாரம் சாப்பிட போவது வழக்கம்.

அப்படி ஒருநாள் செல்லும் பொழுது அந்த கடை உரிமையாளர் செந்தில்குமாரின் மனைவி தனலட்சமி ( வயது 40 )

தனது கள்ள காதலன் ஆனந்தராஜ் (வயது 24 ) உடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை இந்த மாணவி பார்த்துவிட அவளையும் மிரட்டி அனந்த ராஜ் உடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி பல முறை உல்லாசம் அனுபவித்ததோடு தனது நண்பர்கள் மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருடனும் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு தனலட்சுமி அந்த மாணவியை மிரட்டி அவளது தோழியான 14 வயது மாணவியையும் வீட்டுக்கு வர வைத்து அனந்த ராஜ்கு விருந்தாக்கியுள்ளார்.

பின்னர் இரு மாணவிகளையும் கிருஸ்துவ மதபோதர் அருள்தாஸ்  என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார் அவர் இந்த இரண்டு மாணவிகளையும் அனுபவித்து விட்டு தன் சக நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார்.

இப்படி தனலட்சுமி, அருள்ராஜ் மற்றும் மத்த ப்ரோக்கர்கள் சேர்ந்து அந்த மாணவிகளை சேலம், விழுப்புரம், கடலுரில் உள்ள பல லாட்ஜ்களுக்கும், வாடகை வீடுகளுக்கும் அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடைசியாக ஒரு நாள் அந்த மாணவிகள் இரவில் அவர்களிடம் இருந்து தப்பித்து காவல் நிலையம் சென்று அவர்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் 10 பெண்கள் உள்பட 19 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிகு மாற்றபட்டது, இந்த வழக்கில் தீர்ப்பளித்த கடலூர் நீதிமன்றம் கிருஸ்துவ மத போதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது, அவர்களுக்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கபடும் என்றும் நீதிபதிகள் கூறினர்...

மரங்கள் அழியும் போது வெறும் மரங்கள் மட்டுமே அழிவதில்லை...


அதனை சார்ந்து  வாழும் அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது...

சாலை விரிவுபடுத்துகிறோம், தொழிற்சாலை கட்டுகிறோம் என்று எத்தனையோ மரங்கள் அழிக்கப்படுகின்றன இங்கு, அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்க்காகவே.

மரத்தை அழிக்க நினைக்கும் நாம் மரம் நடுவதற்க்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

அரசாங்கமும் அழிக்கவே நினைக்கிறது...

பாஜக தமிழிசை கலாட்டா...


தமிழ் நாட்டில் திராவிடர்கள் சாதனை...


தமிழ் நாட்டில் முன்னர் மருத்துவமனை கால்லுரிகள் அரசு நடத்திக்கொண்டு இருந்தது.. சாராய கடைகள் தனியார் நடத்தி கொண்டு இருந்தர்கள்..

திராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததும்... மருத்துவமனை கால்லுரிகள் தனியார் நடத்துகின்றார்கள்.. சாராய கடை அரசு நடத்துகின்றது..

சாராய கடையை நடத்தினவர்கள் இன்று கால்லுரி மருத்துவமனை
நடத்துகின்றார்கள்..

திராவிடர்கள் ஏன் இந்த திட்டம் கொண்டு வந்தார்கள் தமிழா சிந்தித்து பார்..

எந்த திட்டம் அரசு நடத்தினால்.. தமிழர்களை குடிக்கு அடிமைப்படுத்தி தமிழன் இன உணர்வு மொழி உணர்வு சிதைக்க முடியும்..

தமிழா திராவிடர்கள் தமிழனை திட்டம் போட்டு சிதைத்து கொண்டு இருகின்றார்கள்..

விழித்தெழு தமிழினமே...

பிரபஞ்ச சக்தி...


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்..

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்..

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்..

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்..

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்..

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்..

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

நாட்டு மருத்துவம்...


இங்கே நடக்கும் விளையாட்டை புன்னகையுடன் சிரித்துவிட்டே இடத்தை கடந்து செல்கிறேன்...


ஓவ்வொரு விளையாட்டும் ஓவ்வொரு கோணங்களில் நடக்கிறது.

ஆனால் விளையாடும் மனிதர்கள் நடிக்கிறார்கள்.

நடிப்பு மட்டுமே மிகபெரிய விளையாட்டு.

ஓரே தன்மையில் விளையாட்டை ரசித்தே செல்கிறேன்.

விளையாட்டு குழந்தை போலவே...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


தாய்லாந்தில் உள்ள பேங்காக் சர்வதேச விமான நிலையத்திற்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலாங் லுங் மாவட்டத்தில், ஒரு பெரிய புத்த கோவிலான வாத் ஃபிரம் தம்மகாயா அமைந்துள்ளது.

இது பொதுவான பௌத்த ஆலயத்தை போலல்லாமல் ஒரு பறக்கும் தட்டு போன்ற வடிவத்தை ஒத்திருப்பதை போல காட்சியளிக்கிறது. இது வத்திக்கன் நகரத்தை விட எட்டு மடங்கு பெரியது, கம்போடியாவின் பழமையான அங்கோர் வாட் கோவிலை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவுக்கு உள்ளது, இது உலகின் மிகப்பெரிய நவீன மதக் கோவில் கலைப்படைப்பாகும்.!

இந்த கட்டிடத்தின் மையத்தில் ஒரு பெரிய குவிமாடம் உள்ளது, புத்தரின்  300,000 வெண்கல சிலைகள், தங்க பூசப்பட்ட  மூடப்பட்ட உள்ளது. மேலும் கோவிலுக்குள்ளேயே 70000 மேலும் கோவில்கள் உள்ளன.

சரி இந்த நவீன பௌத்த ஆலயத்தை பறக்கும் தட்டு வடிவில் கட்டியெழுப்ப, அவர்கள் கூறும் காரணம் இதுதான்:
தாமரை சூத்ரா. 13 வது நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய தாய்லாந்து பௌத்த துறவிகளின் புனித நூல். தாமரை சூத்ரா இதனை "புத்தரின் இறுதிப் போதனை" என்று நம்புகிறார்கள், மேலும் "சூத்திரத்தின் சாரம்" ".அதில் வரும் விளக்கம் அத்தியாயம் 23:

பௌத்த அண்டவியல் எப்போதும் மில்லியன் கணக்கான பிற உலகங்களின் இருப்பை ஏற்றுக்கொண்டது. அதாவது பல நூற்றாண்டுக்கு முன்னர், விண்ணிலிருந்து பல இசைக்கருவிகளின் இரைச்சலுடன் கூடிய வெள்ளை தாமரை - போன்ற ஒரு விண்கலம், வானத்தைச் சுற்றியபின் பூமிக்கு வருகிறது.

அதில் காட்காவாஸ்வா (கௌதமர்) என்ற பெயரில் ஒரு விசித்திரமான கடவுள் வருகை தருகிறார். அவர் எப்படி இருந்தார்? அவரது முகம் நீல தாமரை போலவும், அவரது உடல் தங்க நிறமாக இருந்தது ... மேலும் கண்கள், ஒரு புத்துணர்ச்சியைக் காட்டிக் கொண்டது. மனிதர்கள் அவர் மற்றொரு உலகில் இருந்து வரும் ஒரு முனிவர் என்று பதிலளித்தனர். மேலும் அந்த காட்காவாஸ்ர். பல்வேறு வடிவங்களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கிறார், மேலும் பல தோற்றங்களை எடுத்துக் கொள்ளுகிறார்.

பிறகு சிலகாலம் அவர் நமது கிரகத்தின் மீது ஆழ்ந்த தியானம், வாழ்வியல் நெறிமுறை ஆகியவற்றை பிரசங்கிக்கிறார். ஒருசமயம் அவர் தனது உலகை விவரிக்கும் போது, அந்த சஹா உலக நாடு, சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற மண், கற்கள், மலைகளால், நிரப்பப்பட்டது என கூறி. இறுதியாக விடைக்கொடுத்து விட்டு புறப்படுகிறார்: அவர் மீண்டும் வெள்ளை தாமரையினை அடைந்தார், பல இசைக் கருவிகளின் இரைச்சலோடு தனது வாகனத்தில் அவர் தனது சொந்த உலகிற்கு திரும்பினார்.

இது தாய்லாந்து மக்களின் தாமரை சூத்ரா என்ற நூலில் வரும் புத்தர் கதை. எனவே அவர்கள், தங்கள் விண்வெளி கடவுளின் வாகனத்தின் வடிவிலே ஆலயத்தை அமைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை...