23/02/2019

எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்...


சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.

அதைத் திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்து கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறி விடுகிறார்.

உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.

இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்...

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.

தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.

ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.

கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).

அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.

அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே.

அன்று கருணாநிதி குற்றம் சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர் நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி...

அதன் பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு..

அதன் பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

உலகின் மிகச் சக்தி வாய்ந்த காந்தம் நம் மனம் தான்...


இரண்டு கால்களிலும் அணியப்பட்ட சிலம்பு...


சிலம்பு என்பது சங்ககால தமிழ்  மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும்.

கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும்.

இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது...

தமிழன் திராவிடனா.? பகுதி - 2...


https://youtu.be/oo7bPAEWRb0

Subscribe the channel for more news...

பல்வலி நீங்க எளிய வைத்தியம் உங்களுக்காக...


பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே.

பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும்.

அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்...

செயற்கை சோப்பிற்கு பதில் எதை பயன்படுத்தலாம்.?


5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்...


அதிகாரி சுற்றரிக்கை விட, அமைச்சர் இல்லை என்று சொல்ல.... நாம் சும்மா இருந்துவிட, இந்த அக்கிரமம் நடந்து விடும்...

உடனே ஒட்டு மொத்தமாய் எதிர்க்குரலுடன் தடை கேட்டு வழக்கும் வேண்டும்...

தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம், அரசு, அதிகாரம் என்று இந்தியா கொடுத்திருந்தும்....


தமிழர்கள் அதை திராவிடனிடம் கொடுத்துவிட்டு தீவைத்து தன்னை தானே அழிப்பது கொடுமையில் கொடுமை...

திராவிடமாயை ஒழிப்பே தமிழர் நீர்நிலவள உயிர் பாதுகாப்பின் முதல் படி....

தமிழர் கட்சிகளுக்கு மட்டுமே நமது வாக்கை பதிவுச் செய்யோம் என்று உறுதி எடுப்போம்...

இதில் ஆரியத்தை சேர்க்க வில்லை என்று கேள்வி கேட்காதீர்கள், தமிழன் என்றைக்கும் ஆரியத்தை தன் அரசியலில் சேர்க்க மாட்டான்...


நினைவு கொள்ளுங்கள் ஆரியம் தமிழனின் எதிரி, திராவிடம் தமிழனின் துரோகி...

நம் உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...