07/03/2019

ஆங்கிலம் உருவானது நம் தமிழ் மொழியை வைத்து தான்...


"An etymology dictionary of the English language" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...

தமிழே ஞால முதல் மொழி, தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று நன்கு ஆய்ந்து அடித்துக் கூறிய, மலையாளியான சட்டம்பி சுவாமிகள் பற்றித் தெரியுமா தமிழர்களே?


தெரிந்துக் கொள்ளுங்கள்...

வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் (ஆகஸ்ட் 1853 - மே 5, 1924) கேரளத்தில் புகழ்பெற்றிருந்த ஒரு வேதாந்தி, யோகி.

இந்துமதச் சீர்திருத்தக்காரர். இந்து மதத்தின் பிராமணச் சடங்குகளுக்கு எதிராக போராடியவர். நாராயண குருவின் சமகாலத்தவர், மூத்த தோழர்; ஆத்மானந்தரின் ஆசிரியர்.

ஐயப்பன் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சட்டம்பி சுவாமி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள கொல்லம் அல்லது கொல்லூர் என்ற சிற்றூரில் பிறந்தார்.

தந்தை தாமரசேரி வாசுதேவ சர்மா. தாய் நங்ஹேமப்பிள்ளி. குஞ்ஞன்பிள்ளை என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.

மரபான முறையில் கல்வி கற்றார். சம்ஸ்கிருதமும் தமிழும் சோதிடமும் பயின்றபின் சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார்.

நாகர்கோயிலைச் சேர்ந்த வடிவீஸ்வரம் வேலுப்பிள்ளை ஆசான் அவரது ஆசிரியர்.

பதினைந்து வயதில் திருவனந்தபுரம் பேட்டை என்ற இடத்தில் இருந்த ராமன்பிள்ளை ஆசான் என்பவரிடம் அடிமுறையும் வர்ம வைத்தியமும் கற்றார். அவ்வாறு சட்டம்பி என்ற பெயர் கிடைத்தது. அதற்கு பயில்வான் என்று பொருள்.

அதன் பின் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் பயின்றார். இவரது குருநாதர் யார் என்று தெரியவில்லை.

நாகர்கோயிலை ஒட்டிய மருத்துவாழ் மலையில் பலகாலம் இவர் தவம் செய்திருக்கிறார். அப்போது தன் குருவை கண்டடைந்திருக்கலாம் என்கிறார்கள்.

இவர் தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என்பவர்கள் உண்டு.

சட்டம்பி சுவாமிகள் தைக்காடு ஐயாவு ஆசானிடம் ஹடயோகம் கற்றபோது இளைய மாணாக்கராக இருந்தவர் நாராயணகுரு.

1882ல் வாமனபுரம் அருகே அணியூர் என்ற ஊரில் நிகழ்ந்த கோயில் விழாவில் துறவியானபின் இருவரும் முதன்முறையாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவாழ்மலையில் இருந்த போதே நாராயணாகுருவிடம் அவருக்கு உறவிருந்திருக்கிறது.

நாராயணகுருவும் சட்டம்பி சுவாமிகளும் சேர்ந்து நீண்ட பயணங்களை மேற்கொண்டார்கள்.

மருத்துவாழ்மலையில் ஒருகுகையில் தவமிருந்தார்கள்.

அந்த குகை இப்போதும் அவர்களின் நினைவிடமாகப் பேணப்படுகிறது.

நாராயணகுரு அருவிப்புறத்தில் அவரது புகழ்பெற்ற சிவலிங்க பதிட்டையை நிகழ்த்தியபோது சட்டம்பி சுவாமி உடனிருந்தார்.

சட்டம்பி சுவாமிகள் சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவர். இந்து சமூகத்தில் அன்றிருந்த பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கெதிராக கடுமையாக எழுதியும் பேசியும் சுற்றுப்பயணம் செய்தார்.

தீண்டாமைக்கும் சாதி வேறுபாடுகளுக்கும் எதிரான சுவாமியின் தாக்குதல்கள் மிகவும் வேகம் உடையவை.

கிறித்தவ மதமாற்ற முறைகளைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புகளை அவர் பதிவு செய்திருக்கிறார்.

நீல கண்ட தீர்த்தபாதர், தீர்த்தபாத பரம ஹம்சர், ஆத்மானந்தா போன்ற யோகிகளும் கவிஞர் போதேஸ்வரன், பெருநெல்லி கிருஷ்ணன் வைத்யன்ம் வெளுத்தேரி கிருஷ்ணன் வைத்தியன் போன்ற பல இல்லறத்தாரும் அவருக்கு மாணவர்களாக இருந்தார்கள்.

சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எர்ணாகுளத்திற்குச் சென்றபோது சட்டம்பிசுவாமிகளும் அங்கே இருந்தார்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்து கூட்டத்தைக் கண்டு தூரத்திலிருந்து அவரை தரிசித்து விட்டு சென்றார் சட்டம்பிசுவாமிகள்.

சட்டம்பி சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர், அவ்வளவு பெரிய மகான் என்னைத் தேடி வருவதா என்று கூறி தாமே சட்டம்பி சுவாமிகளைக் காணச் சென்றார்.

சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி மொழி தெரியாததால், இருவரும் சமஸ்கிருதத்தில் தனிமையில் உரையாடினர். சட்டம்பி சுவாமிகளிடம் சின்முத்திரையின் பொருள் கேட்டார் சுவாமிஜி.

தமிழ் நூற்களை நன்கு கற்றிருந்த சட்டம்பி சுவாமிகள் சின்முத்திரைக்கு அருமையாக விளக்கம் அளிக்கவே, சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜியின் அசைவ உணவுப் பழக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள சட்டம்பி சுவாமிகளால் முடியவில்லை.

சட்டம்பி சுவாமிகளால் பெரிதும் கவரப்பட்டார் சுவாமி விவேகானந்தார்.

வாழ்வின் கடைசிக்காலத்தில் சுவாமி பன்மன என்ற ஊரில் தங்கியிருந்தார். கும்பளத்து சங்குப்பிள்ளை என்ற அறிஞர் அவருடைய புரவலராக இருந்தார்.

இன்று அவர் சமாதியான இடம் பன்மனை ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது.

1934ல் திருவிதாங்கூருக்கு வந்த காந்தி அடிகள் அங்கே ஒருநாள் தங்கியிருந்தார்.

சுவாமி நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவரது கைப்பிரதிகள் பல அச்சேறாமல் பின்னாளில் கண்டெடுக்கப்பட்டன.

அவர் எழுதி வெளிவந்த சிலநூல்கள் எண்பது வருடங்களுக்கு பின்னர் மறுபதிப்பு கண்டன. அவரது மலையாள உரைநடை நேரடியானது. அவருக்கு கேரள உரைநடை வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்குண்டு.

தமிழ், சமற்கிருதம், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மிகுந்த புலமை பெற்ற இவர் மிகமிக நுணுக்கமாய் ஆய்ந்து, மலையாளத்தில் எழுதிய 'ஆதி பாஷா' எனும் ஒப்பிலக்கண நூல், பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களால், 'ஆதி மொழி' எனும் பெயரில் மிக நன்றாய்த் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நூலின் விலை, உருவா நூற்றியெண்பது (180/-) மட்டுமே..

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க, போற்ற வேண்டிய நூல்...

பழங்களை எலுமிச்சை சாறில் அலசி விட்டு சாப்பிடுங்கள்...


திருட்டு திராவிட வந்தேறிகளா...


வெள்ளையனே வெளியேறு
என்று சொன்னது சரியென்றால்..

அந்நியனே வெளியேறு
என்பதும் சரிதானே...

பிறகு எப்படி டா தெலுங்கு கன்னடன் மலையாளி போன்ற வேற்றினத்தார் தமிழர் போர்வையில் தமிழ்தேசியத்திற்குள் அடங்குவான் ?

இப்படி சொல்பவன்..

ஒன்று பிழைப்புவாதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அவன் வந்தேறியாக இருக்க வேண்டும்...

விழித்துக்கொள் தமிழினமே...


மனிதர்கள் வாழ்க்கையில் வாழ்ந்ததை விட அழித்தது தான் அதிகம் இப்புவியில் இன்று வரை...


மனிதனையும், மனித ஆற்றலையும், மனித அறிவையும், உயர்த்தி பேசி வரும் பிணங்களுக்கு ஓன்று சொல்லி கொள்கிறேன்...

மனிதன் மிகவும் கீழ்த்தரமான பிறவிதான் இருக்கும் பறவைகள் விலங்குகள் மற்ற உயிரினங்கள் மரங்கள் இயற்கை முழுவதையும் விட கீழ்த்தரமான உணர்வில்லா  உயிரினங்கள்..

கடைசி வாய்ப்பு இயற்கை உணர்வுடன்  சேர்வது மட்டுமே..

இதையும் இழந்தால் பிணங்களாக வாழுங்கள் தினமும்...

தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு / செம்பருத்தி சீயக்காய் தூள்...


https://youtu.be/mncCslTGS5A

Subscribe The Channel For More Tips...

வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வெளியே வேறு கிரகங்களில் உயிர் வாழ்கிறார்களா? என்பதை அறிய அமெரிக்கா உட்பட பல வல்லாதிக்க நாடுகள் தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றன...


இதற்கு உதாரணமாக
இப்போதைக்கு எந்த ஆய்வுக்கும் கொட்டப்படாத பணத்தினை வேற்றுக்கிரக தேடலுக்காக இந்த நாடுகள் தங்கள் விஞ்ஞானிகளுக்கு முன்வைத்து வருகின்றனர். இல்லாத ஒன்றை இத்தனை சிரமப்பட்டு பணத்தினை வாரி இறைக்கும் அளவிற்கு, இவர்கள் ஒன்றும் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் அல்ல.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்றுகிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு சமூகமாக உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் உணவு உண்டு, தண்ணீர் அருந்தி நம்மை போலவே இருப்பார்களா? என்பது தான் சந்தேகம் என்கிறார்.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமமல்ல. அவர்களது இடத்தில் இருந்து இந்நேரம் பயணிக்க தொடங்கி இருந்தால், 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம் என்று கூறி உள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியிருந்தார். இந்த திட்டத்துக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து அடுத்த 10
ஆண்டுகளுக்கு ரூ .640 கோடி
செலவிடப்படும் .

மேலும் ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார் . இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த
வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட்
பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ் தலைமை தாங்குகிறார் .

இந்த திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும் , மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் ( 328 அடி ) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பால் ஹெல்யர் வேற்றுகிரகவாசிகள் குறித்து புதுவித தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதைப்பற்றி தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.

அவர் கூறியதாவது...

இதுவரை 4 வகையான
வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்க
கடந்த சில ஆண்டுகளாக
வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது . பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசகிள் மனிதர்களின் கண்டுபிடிப்பான அணு ஆயுதத்தை பார்த்து வருத்தம் கொள்கிறார்கள் ,
ஏனெனில் அணுகுண்டானது
அண்டசராசரத்தில் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள்.

மேலும் , பூமியை பசுமையாக்கும் பல்வேறு யோசனைகள் அவர்கள் வசம் உள்ளன , வேற்றுகிரகவாசிகளால் பருவ
மாற்றங்களுக்கு தீர்வு காண முடியும்.சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல ஆடையணிந்து ஷாப்பிங்
சென்றுள்ளனர் . அவர்களை நான் பார்த்துள்ளேன் , ஆனால் அதற்கானஆதாரம் என்னிடம் இல்லை . அவர்களை பார்த்த நான் மட்டுமே இதற்கு ஆதாரம் என கூறியுள்ளார்.

சர்வதேச விண்வெளி மையம் நாசாவின் முன்னாள் கமாண்டர் டாக்டர் லெரொய் சியோ ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வொல்லோங் கோங் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார் அங்கு மாணவர்களியே பேசிய அவர் கூறியதாவ்து:-

சமீபத்தில் சனிகிரகத்தின் நிலவில் நீர் உள்ளது கண்டறியபட்டு உள்ளது . மேலும் வளிமண்டலங்களில் அமினோ அமிலங்கள் உள்ளது. பிரபஞ்சத்தில் நம்மை தவிர வேறு
வேற்றுகிரகவாசிகளும் உள்ளனர் என்ற கருத்தை இது காட்டுகிறது. எல்லா வகையான உயிரினங்களும்,
புத்திசாலித்தனமான
வேற்றுகிரகவாசிகளும் உள்ளன என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருவருக்கொருவர் கண்டுபிடிக்க முடியாதது பரந்த தூரத்தில் உள்ளதாக நான் நினைக்கிறேன்.என கூறுகிறார்.

தாமஸ்_ஹேர்: அறிவியலாளர்.

ஸ்டீபன்_ஹாக்கிங்: கோட்பாட்டு இயற்பியலாளர்.

லெரொய்_சியோ: விண்வெளி ஆய்வாளர். 

பால்_ஹெல்யர்: ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

என உலகின் முக்கிய நபர்கள் இவ்வளவு தீர்மானமாக, அறிவியல் ரீதியாக வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனர் என்று கூறினால், நம்மால் நம்பமுடியாமல் இருக்க முடியுமா?

விழித்துக்கொள் தமிழினமே...


தியானம் என்பது ஒரு பரிசோதனை...


கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.......?

பரவாயில்லை. தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....?

பரவாயில்லை. தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......?

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு.......? என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்....? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம். எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன. எண்ணங்கள் மறைந்ததும், திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன. எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள். அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின், அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே-தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே-இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போதுதான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது.அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே "விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்...