02/04/2019
பிரபஞ்ச இரகசியம்...
புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...
1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..
கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.
பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.
2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..
கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.
3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..
விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.
4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..
நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.
பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.
நல்லது மட்டுமே உள்ளது.
எது நிகழ்ந்தாலும் சரி,
அது இயற்கையின் விருப்பம்.
அது நல்லதாகவே இருக்கும்.
5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...
இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.
மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.
என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.
மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.
6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...
அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.
மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.
7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...
அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.
8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...
நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்
இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.
9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...
உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.
மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக சக்தியைப் பெறுவீர்கள்.
10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...
கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?
கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.
நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.
பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை மூன்று முறை கூறுங்கள்.
உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...
உணவே மருந்து - எளிய இயற்கை மருத்துவம்...
1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.
7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...
ஒரு அடிப்படையான விஷயத்தை நினைவில் கொள்...
நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய், அதில் அங்கீகாரம் தேடாதே. அது பிச்சையெடுப்பதைப் போன்றது. ஏன் ஒருவர் அங்கீகாரம் தேட வேண்டும் ஏன் ஒருவர் அடையாளம் காணப்படுவதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்.
உன்னுள் ஆழ்ந்து பார் நீ செய்வதை நீ விரும்பாமல் இருக்கலாம், நாம் தவறான வழியில் போகிறோமோ என்ற பயம் உனக்கு இருக்கலாம், எல்லோரும் பாராட்டப்படுவதன் மூலம் நீ நாம் சரிதான் என்ற உணர்வைப் பெறலாம். அங்கீகாரம் நீ சரியான இலக்கை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம்.
இது உன்னுடைய உணர்வுதான். இதற்கும் வெளி உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஏன் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கையில், நீயே சார்ந்தவனாகி விடுகிறாய்
நான் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும் வரும் கண்டனத்தை நான் பெரிதாக மதிக்கிறேன். நோபல் பரிசை நான் ஏற்றுக் கொண்டால் நான் சார்ந்து இருப்பவனாகி விடுகிறேன். நான் என்னை மதிக்கவில்லை, பதிலாக நோபள் பரிசை மதிக்கிறேன் என்றாகி விடும். இப்போது நான் என்னை மதிக்கிறேன் வேறு எதற்க்கும் நான் மதிப்பளிக்கவில்லை. இந்த வழியில் நீ தனித்துவமானவனாக இருக்கலாம். இப்படி தன்னுடைய வழியில் முழுமையான சுதந்திரத்தில் வாழ்வது, உன்னுடைய சொந்த காலில் நிற்பது, தன்னுடைய சொந்த முயற்சியில் இருப்பது ஒரு மனிதனை உண்மையான நிலை பெற்றவனாகவும் வேரூன்றியவனாகவும் மாற்றும். அதுதான் ஒரு மனிதன் மலர்தலின் ஆரம்பம்.
தன்னைப் பற்றிய உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதன் தனது அன்பில், தனது சொந்த முயற்சியில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படாமல் வாழ்வான். உனது வேலை எந்த அளவு மதிப்பு வாய்ந்ததோ அந்த அளவு குறைவாகத்தான் உனக்கு மரியாதை கிடைக்கும். மேலும் உனது வேலை மிகுந்த புத்திகூர்மை கொண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில் உனது வாழ்நாளில் உனக்கு மதிப்பு கிடைக்காது. நீ கண்டனம் செய்யப் படுவாய். இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்த பிறகு உனக்கு சிலை வடிக்கப்படும். நீ எழுதிய புத்தகங்கள் மதிக்கப்படும். ஒரு உண்மையான அறிவாளியை புரிந்து கொள்ள இந்த சாதாரண மனித குலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளி மிகப் பெரியது. முட்டாள்களால் மதிக்கப்பட நீ அவர்களது கோட்பாட்டிற்க்குள் அடங்க வேண்டும், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும். இந்த நோய் பிடித்த மனித குலம் மதிக்க வேண்டுமானால் நீ அவர்களை விட நோய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் உன்னை மதிப்பார்கள். ஆனால் அதனால் நீ பெறுவது என்ன நீ உனது ஆன்மாவை இழக்கிறாய், நீ எதையும் பெறுவதில்லை...
துளசி...
எந்த வீட்டில் காலையிலும் , மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு " யமதேவன் " நுழைய முடியாது, கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும் " தீபமேற்றி " பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர்.
துளசியின் காற்று பட்டாலும்,, துளசியை வலம் வந்து வணங்கி னாலும் எல்லா பாபங்களும் நீங்கும்.
தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும்.
பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர்.
பகவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலையை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர்.
துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார்.
துளசி இலைகளை பெளர்ணமி, அமாவாசை , துவாதசி", சூர்ய சங்க்ராந்தி , உச்சி மதியம் , இரவு,vசந்த்யா வேளைகளில் பறிக்கக் கூடாது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால் பிரதிஷ்டை ஆகாமலேயே மதிக்கப்பட வேண்டியவர்கள் ஶ்ரீமத்பாகவதம் , துளசி சாளக்ராம் கங்கை , வைஷ்ணவர்கள் ஆவார்கள் ஆவார்கள்.இவர்கள் நால்வரும் " ப்ரகாஷ்க் மூர்த்தீகள் " என அழைக்கப்படுவர்.
துளசி ஜெயந்தி " கார்த்திகை பெளர்ணமி " ஆகும்.
துளசியின் பிற பெயர்கள் − ப்ருந்தா , ப்ருந்தாவனி , விஸ்வபூஜிதா , விஸ்வ பவானி , புஷ்பஸரா நந்தினி , க்ருஷ்ண ஜீவானி , ஹரிப்ரியா , கேசப்ரியா , ஸுலபா, வைஷ்ணவி , ஸ்யாமா , ராமா, கெளரி , பஹுமஞ்சரி , அம்ருதா, தமிழில் " திருத்துழாய் ".
பாற்கடலில் தன்வந்த்ரி பகவான் அம்ருதம் கொண்டு வருகையில் அதில் துளசி தளமும் இருந்தது என ப்ரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது...
கம்யூனிசம் என்றால் என்ன.?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றை வரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்... தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
Subscribe to:
Posts (Atom)









