02/04/2019

பிரபஞ்ச இரகசியம்...


புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...

1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..

கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.

பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.

2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..

கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.

3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..

விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.

4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..

நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.

பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.

நல்லது மட்டுமே உள்ளது.

எது நிகழ்ந்தாலும் சரி,

அது இயற்கையின் விருப்பம்.

அது நல்லதாகவே இருக்கும்.

5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...

இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.

மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.

என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.

மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.

6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...

அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.

மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.

7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...

அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்

இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.

9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...

உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.

மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக  சக்தியைப் பெறுவீர்கள்.

10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...

கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?

கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.

நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.

பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை  மூன்று முறை கூறுங்கள்.

உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.