31/10/2020

வெளி மாநிலத்தவருக்கு வீடு, கடைகள் கிடையாது: சீர்காழி வர்த்தகச் சங்கம் முடிவு...

 


வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை இனி வாடகைக்கோ, விற்பனைக்கோ கொடுக்க மாட்டோம் என சீர்காழி வர்த்தகச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் துண்டறிக்கைகள் மூலம் சீர்காழி பகுதி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீர்காழி நகரில் முதலில் அடகுக் கடைகள் வைத்துத் தொழில் செய்துவந்த வடமாநிலத்தவர்கள் தற்போது நகரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அடகுக் கடைகள், நகைக் கடைகள், உணவகங்கள், இரும்பு மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என நகரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் வடமாநிலத்தவர்கள் கைகளிலேயே இருக்கின்றன.

தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழர் வேலை தமிழர்களுக்கே என்ற பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சீர்காழியில் உள்ள வர்த்தகர்கள் நலச் சங்கமும் இந்தப் பிரச்சார இயக்கத்தில தமிழ்த் தேசியப் பேரியக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.

அதனடிப்படையில் சீர்காழி வர்த்தக நலச் சங்கம் சார்பில், இனி சீர்காழி நகரில் வெளிமாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை விற்பனைக்கோ அல்லது வாடகைக்கோ கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதனை சீர்காழி பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு வர்த்தக நலச் சங்கம் சார்பில் துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்துச் சீர்காழி வர்த்தக நலச் சங்கத்தின் தலைவர் பு.கோபு கூறும்போது, "சீர்காழி நகரில் உள்ளூர்வாசிகள் தற்போது எந்தத் தொழிலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுக நகரின் ஒட்டுமொத்த வர்த்தகத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்ட வெளி மாநிலத்தவர்கள் இங்கு வேறு யாரும் தொழில் செய்து விட முடியாதபடி கடை இடம் மற்றும் கட்டிடங்களின் விலை மதிப்பையும் உயர்த்தி விட்டுவிட்டனர். அத்துடன் தரமற்ற பொருட்களைக் கொண்டுவந்து விலை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதனால் போட்டியைச் சமாளிக்க முடியாமல் இங்கு தொழில் செய்து வந்த உள்ளூர்க்காரர்கள் நஷ்டமடைந்து தொழிலைக் கைவிட்டுவிட்டனர்.

உதாரணத்திற்கு வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்த 12 கடைகளில் 10 கடைகள் மூடப்பட்டு இரு உள்ளூர்வாசிகள் மட்டுமே கடை வைத்து இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் உதிரிபாகங்கள் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதுபோலவே பிற தொழில்களிலும் அவர்களே அதிக அளவில் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதனால்தான் தமிழர் வேலை மட்டுமல்ல, தமிழர் வணிகமும் இனி தமிழர்களுக்கே என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது" என்றார் கோபு...

அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடந்து எழும் கடுமையான எதிர்ப்புக் குரலின் விளைவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்...

 


இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த போராட்ட உணர்வுக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.எல்லா அநீதிக்கு எதிராகவும் இன்னும் வலிமையுடன் போராடுவோம்...

மராட்டிய பிராடு ரஜினி கலாட்டா...

 


விழித்துக்கொள் தமிழினமே...

தவறான போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களது உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளும் நடிகர்கள்

அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு சென்று கோடிகளில் செலவழித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்..

ஆனால் இந்த நடிகர்களை தங்களது ஹீரோக்களாக, ரோல்மாடல்களாக எடுத்துக் கொண்டு இளம் வயதிலேயே போதைக்குள் சிக்கும் இவர்களது ரசிகர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கூட செலவு செய்ய முடியாமல் தம் குடும்பத்தை தவிக்கவிட்டு பாதி வயது கூட தாண்டாமல் மரணமடைகிறார்கள்...

மத்திய கல்வித் துறைச் செயலர் தமிழக கல்வித் துறைச் செயலருக்குக் கடிதம்...

 


 புதிய கல்விக் கொள்கையை அனைத்து ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றி ஆவண செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொண்டதாக அரசாணை வெளியிடவில்லை.

அக் கொள்கையைப் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஆனாலும் இங்கு அமைச்சரின் அனுமதியில்லாமல் ஒப்புதல் இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கிறது?

கல்வியை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு பதவிக்காக உயிர் வாழ்கிற அடிமைகள்...

சொன்னதை செய்யலன்ன டிரான்ஸ்பர் செய்வோம்ன்னு சென்னை கலெக்டரையே மிரட்டிய மத்திய சென்னை மாவட்ட திமுக நிர்வாகி...

 


பிரபஞ்சம் இரகசியம்...

 


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம்.

ஒரு இரகசியத்தை இங்கே கூற போகிறேன்..

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடி கொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை..

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே.

அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடை பிடியுங்கள்.

அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது.

மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...

பூனை களும் சகுணம் உண்மைகளும்...

 


மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாகச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைப் பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களைக் காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது...

கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்ட ரஜினி - செய்தி...

 


ஒவ்வொரு தேர்தலிலும் காரைக்குடியை காங்கிரசுக்கு ஒதுக்குவதே திமுகவின் வழக்கம்...

 


இம்முறையும் காங்கிரசுக்கே ஒதுக்கினால் தீக்குளிப்பேன் எனக் கொந்தளித்த திமுக நிர்வாகியால் பதட்டத்தில்...