19/02/2021

உணர்வுகளின் சக்தி...

1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும், முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும். உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

தமிழக மக்கள் டூ ஸ்டாலின் : வெக்கமே இல்லாம எப்படி இந்த மாதிரிலாம் பேசுறிங்க...

 


அரசியல் பழகு...


 

அய்யனார் பற்றிய உண்மைகள்...

அய்யனார் என்பது சாத்துவணிகனின் காவல் தெய்வம் என சொன்ன போது. இல்லை இல்லை இது தமிழர்களின் வழிபாடு தான் என பலர் முட்டு கொடுத்தார்கள்....

அதே போல் இந்த புத்தர் என்பதே ஒரு போலியான உருவகம் தான்...

வணிகர்களின் சாதியில் துறவறம் போவது என்பது இயல்பான ஒன்று...

அந்த துறவறம் என்பது ஏதோ எல்லாவற்றையும் துறந்து விட்டு போவது என அர்த்தம் இல்லை....

பூமியின் இரகசியங்களை தேடி.... தனது அடுத்த தலைமுறையை உலகத்தை ஆள செய்ய தேடித்திரியும் ஒருவித வாழ்க்கை முறை தான்...

இந்த வாழ்க்கை முறையை இந்த வணிகக்கூட்டத்திற்கு பழக்கப்படுத்தியது.... அரச குடும்பம்....

அந்த வணிகக்கூட்டத்தில் இருந்து துறவறம் போனவனை வைத்து உருவாக்கப்பட்டது தான் பெளத்தம்...

உடனே பெளத்ததில் இல்லாத நல்ல கருத்துகளா என கேட்ப்பார்கள்....

புத்தர் யார் என்பதற்கே ஆதாரங்கள் கிடையாது.... இந்த கருத்துகள் புத்தர் தான் சொன்னாரா என ஆராய எந்த மூகாந்திரமும் இல்லாத போது.... எந்த அடிப்படையில் இது புத்தர் சொன்னது என சொல்கிறார்கள்....

நல்ல கருத்துகளின் குவியலை சேகரித்து அனைத்தும் இவர் சொன்னது தான் என சொன்னால் உடனே அவரை கடவுளாக பார்ப்பது தான் முட்டாள் தனம்.....

அந்த புத்தன் எனும் சாத்து வணிகனுக்கு காவல் காத்த பூதம்.... அப்படியே ஐப்பானிலும்.... தமிழ்நாட்டிலும் மட்டும் 100% ஒத்து போகிறது எனில் அந்த வணிகக்கூட்ட தலைமை யார் என நீங்களே பார்க்க வேண்டும்.....

இப்போது இருக்கும் நகரத்தார் வணிகர்கள் போலிகள்....

உண்மையான அந்த தலைமை அரச குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மறுக்க முடியாத பிணைப்பு ஒன்று உள்ளது. அதன் ஆழத்தை தேடி செல்லும் போது நமக்கே அதிர்ச்சிகள் தான் மிஞ்சும்....

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் வெளியிடலாம்......

அய்யனாரை குலதெய்வ என சொல்லுபவர்கள் வருத்தப்பட வேண்டும்....

அதே கோவிலில் யாருக்கு பலி கொடுக்கிறீர்களோ அது தான் குலதெய்வம்.....

அய்யணாருக்கு பலி கிடையாது ஒருவேலை இருந்தாலும் முன்னோர்களிடம் நன்கு கேளுங்கள்...

அருகில் இருக்கும் வேறு ஒன்றுக்கு தான் பலி என சொல்லுவார்கள்...

சாமானிய மக்களின் விரோதி பாஜக மோடி அரசு...

 


ஆக, இந்திய அளவில் GoBackStalin ட்ரெண்ட் ஆகியதற்கு அறிவாலயத்தில் விழா ஒன்று நடத்த வேண்டும்...

 


உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...

உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.

நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மன உளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்.

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.

உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....

மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...

நன்றி ஆரோக்கியமே..

நன்றி உடலே..

என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி..

என்னை குணமாக்கியதற்கு நன்றி..

என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.

இதன் மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு.. உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.

1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் "ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது" என்பதை மனதிற்குள் சொல்லி கொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...

2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்.

4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்... எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...

5. காலை வேலையில் நியூஸ் பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....

6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்.

7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன் மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்.

தினமும் இதை செய்து பாருங்கள்.. தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் கலாட்டா...

 


பிராடு பாஜக மோடியின் இன்றைய பொய்...

 


உணர்வு அலைவரிசை...

1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...