07/12/2021

வீட்டில் உள்ள தரை பளிச்சிட...

 


கீறல்கள் மறைய...

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்...

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்...

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்...

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.


எண்ணை பிசுக்குளை நீக்க...

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

திமுக ஆட்சிக்கு வருவதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது...

06/12/2021

திருட்டு திமுக குடும்ப பித்தலாட்டம்...


முதல் நல்லவர்கள் போல் நடிப்பது பின் வேலையை காட்டுவது...

விடியல் விடியல் என்று சொன்னார்கள் ஆட்சிக்கு வந்த பின்பு மக்களை வச்சி செயவது...

உங்களை சொல்லி குத்தும் இல்லை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களை சொல்ல வேண்டும்...

05/12/2021

நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்...

 


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன், பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்.

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று..  கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்..

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடர வேண்டும்..

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்.. கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்.. மனம் அங்கே நிற்பதால் கை கூடும்.. இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே..

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்

கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே "

- திருமந்திரம்.

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்..

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை..

ஜோதி பாதம்.. திருவடி.. இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்.. நோய் நொடி வராது.. உடல் உறுதி பெறும்.. உள்ளம் பண்பாடும்.. இறைஅருள் கிட்டும்.. எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்.. ஜோதி தரிசனம் கிட்டும்.. திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்..

அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்.. உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்.. பரவெளி காணலாம்.. வெட்ட வெளியில் உலாவலாம்..

பேரின்பம்.. பேரின்பம்.. பேரின்பமே...

அதிமுக ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக மதுவுக்கு எதிராக போராடிய திமுக ஸ்டாலின் அவர்களே..

 


திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு என்று கூறிய கனிமொழி அவர்களே..

திமுக ஆட்சிக் காலத்தில் மது ஒழிக்கப்படும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்களே..

இன்னும் மதுக்கடைகளை மூட ஏன் தயக்கம்? மொத்தம் உள்ள 12 சாராய_ஆலைகளில் 9 சாராய ஆலைகள் உங்கள் குடும்பத்தினரின் பினாமி ஆட்களால் நடத்தப்படுகிறது என்பதாலா?

உங்கள் வார்த்தைகள் உண்மை எனில், உண்மையாகவே மக்கள் மீது அக்கறை இருப்பின் இனி மக்கள் ஒருவர் கூட பாதிக்கா வண்ணம் மது ஆலைகளை நிரந்தரமாக மூடி மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்வீர்களா? அல்லது நீங்கள் நடத்தியது அனைத்தும் நாடகம் தான் என்று ஒப்புக் கொள்வீர்களா?

நண்பர்களே...

 


ராமாயணப் போர் :பெண்ணுக்காக

மகாபாரதப் போர் :பெண்ணுக்காக

பாகுபலிப் போர் :பெண்ணுக்காக 

இதுல இருந்து என்ன தெரியுது அப்போத்துல இருந்து இப்ப வரைக்கும்..

பொண்ணுங்கனாலே ஒரே அக்கப்போரு தான்..

ஆகையால் சிங்கிளாக இருப்போம்...

நிம்மதியாக சந்தோசமாக  வாழ்வோம்...


🤣😊😊😊

இனிய இரவு வணக்கம்...

அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?

 


எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக் கொடுங்கள்.. அப்படியே நெஞ்சில் ஒட்டும்...

ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை,

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,

கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல்,

மேற்கிலிருந்து வாட்டுவது கோடை

தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்

நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள்,

யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,

உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-

சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,

உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்

பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல்,

மருட்கை, அச்சம், பெருமிதம்,

உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்

எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,

நாசி இரண்டு, வாய் ஒன்று,

முன்னொன்று, பின்னொன்று-உடலி­

ன் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில்

எண்ணங்களைப் பொருத்தித்

  1. தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள்.. தமிழாசிரியப் பெருமக்களே...

அதிமுக கலாட்டா 😁