02/10/2017
புல்ரோரர் - Bullroarer...
இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.
இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.
அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..
திராவிடம் - 6...
ஆங்கிலேயர் 'திராவிடத்தை' உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப் பயன்பட்டது.
ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களைஅப்பகுதி மக்களோடு கலந்து விடுவர்.
இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.
இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும்சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம்,உணவுப்பழக்கம், பண்பாடு, மருத்துவம், கலாச்சாநம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.
(அப்போது தானே பிரித்தாள முடியும்)
மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ் மேல்காதல் கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்து தமிழரோடு தமிழராக ஒன்றிவிட்டனர்.
இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்தான் வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்றவர்கள்..
அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.
'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.
இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.
ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்..
தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்துதமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர்வரலாற்றை ஆராயத் தொடங்கினார்.
தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும்வட மொழிகளிலிருந்து அவை முற்றிலும்வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.
இவரைப் பற்றிய விமர்சனங்களும் உள்ளன..
'சாணார்' மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின்கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது..
(அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது).
இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரிய வருகிறது.
ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில் கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப் பற்றுள்ளவர்என்றே தெரிகிறது.
எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர்என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.
இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள்ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்றகருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.
திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள் தருவதாக வடமொழியில் வழங்கி வந்ததாகக் கூறுவர்.
திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட,
ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்றபொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.
"த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா"
இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞான சம்பந்தரை 'திராவிடசிசு'என்று இழிந்து கூறுவதாக திராவிடவாதிகள் மேடை தோறும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.
இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.
முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.
"தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது" என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.
தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தைதான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.
(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்)
இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும்சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.
நூறுவருடம் எடுபடாத ஒரு கோட்பாடு எப்படி நடைமுறையில்திடீரென்று குதித்தது?
தமிழ்ப் பிராமணர்களே ஆரியர்என்று எப்படி நம்பவைக்கப்பட்டது?
மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா.?
டுவிட்டரில் தெறித்து ஓடிய மோடி.. அப்போ நேரடி விவாதம் என்றால்?
அமெரிக்காவில் , பிரிட்டனில் இரண்டு பேர் இறந்தால் டுவிட்டரில் அதற்கு இரங்கல் தெரிவித்து தன்னை முக்கிய தலைவராக காட்டிக்கொள்ளும் திருவாளர் மோடி .. தனது அட்சியில் நடந்த ஒரு அவலத்தை பற்றி டுவிட்டரில் கருத்தை பதிந்தார் என்றால் அது மும்பை ரயில் நிலைய கோர விபத்தால் பலியான 20 அப்பாவிகளின் மரனத்தை பற்றிதான்.
ஆனால் சில நாட்களுக்கு அந்த போஸ்டை நீக்கி உள்ளார்.. காரணம் அந்த போஸ்டுக்கு மக்கள் வழங்கிய எதிர்கருத்துக்கள் தான்.. 3600 கோடிக்கு உயிரற்ற சிவாஜி சிலைக்கு செலவிடுவதில் என்ன பயன் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று தொடர்சியான கருத்துக்களின் விளைவு அந்த போஸ்டை சைலண்டா நீக்கியுள்ளார்.
என்ன செய்ய கடந்த எட்டு ஆண்டுகளில் 16,722 போஸ்டுக்களை போட்ட மோடிக்கு இந்த ஒரு போஸ்ட் பல பாடங்களை கற்றுக்கொடுத்து விட்டது போலும்..
டுவிட்டரிலேயே தெரிந்து ஓடும் மோடி எங்கிருந்து லைவ் சோவில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள.. கரன் தாபர் வந்து போவாரல்லவா...
சம நீதி...
சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..
மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..
அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..
இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...
அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.
தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?
Subscribe to:
Posts (Atom)









