30/11/2017

தமிழகத்தை அழிக்கும் நியூட்ரினோ திட்டத்தை உடனே தொடங்க சொல்லி.. தமிழக அரசிற்கு பாஜக மோடி உத்தரவு...



தமிழ்நாட்டில் ரயில்வே இல்லாத ஒரே மாவட்டம் தேனி... அதை முதலில் செய்யிங்க அப்புறம் நியூட்ரினோ பத்தி பேசலாம்...

God என்பதின் உண்மையான அர்த்தம்...


God என்பதை நாம் தான் தவறாக புரிந்து வைத்துள்ளோம்.. ஆனால் அமெரிக்கா அதை சரியாக புரிந்துள்ளது..

செவிலியர் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை...



நாங்கள் சட்ட விரோதமாக இல்லை சட்டம் தான் எங்களுக்கு விரோதமாக உள்ளது...

இனி ஜட்டி வாங்கினாலும் காட்டிக் கொடுக்கும் பாஜக மோடி யின் ஆதார்.. பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல...


மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக..  சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்..

நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக் கூடாது.

காங்கிரஸ் கொண்டு வந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும் என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்து விட வேண்டும்.

ஜெய்ஹிந்தி என்று கூறிக் கொண்டு அடங்கிக்கிடந்தால்.. எல்லையில் பத்து நாளுக்கு ஒருவர் வீதம் ராணுவ வீரர்கள் சாகிறார்களே அது குறையும்...

29/11/2017

ஜி.எஸ்.டி.வரிக்கு எதிர்ப்பு நெசவாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நெசவு தொழில் முக்கிய பங்குபெற்றுள்ளது, இந்த நிலையில் நெசவு தொழிலுக்கும் அதனை சார்ந்துள்ள மூலப்பொருட்களான நூல், சாயமருந்து, நெசவாளர் கூலி, லுங்கி என தனித்தனியே ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் நலிவடைந்துள்ள நெசவு தொழிலுக்கு மேலும் மேலும் தனி தனியே வரிவிதிப்பு  மிகவும் ஆபத்தானது எனவும் அதனால் நெசவு தொழில் மீது தனி.தனியே சுமத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும் தற்போதைய நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து குடியாத்தம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் ஆண்கள், பெண்கள் என குடும்பமாக ஒன்றுகூடி குடியாத்தம் தொலைபேசி அலுவலகம் முன்னர் சுமார் 300, க்கும் மேற்ப்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்க்கு  கட்சி பாகுபாடு இன்றி  சில  அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர், ஆர்ப்பாட்டத்தின் போது  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிக்கு  எதிர்ப்பு  தெரிவித்து  கண்டன  கோஷ்ம் போட்டனர்...

பாஜக கலாட்டா...


இப்ப கணித முறையில் கலாய்க்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.. பலே.. வெள்ளையத் தேவா.. இது புது டைப்பால்ல இருக்கு..

செருப்பு வீச்சுக்கு பயந்து அமைக்கப்பட்ட மேதை...

சொர்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்...


உலக விஞ்ஞானம் திகைக்கும் நமது மகான்களின் அமானுஷ்யங்கள...


யோகியின் உடல் ஆதிக்க சக்திகள்...

கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன
கேள்விகள் கேட்கப்படும் என்பதை
அறியாமலேயே, அவற்றிற்கு முன் கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியம்...

மென்னிங்கர் பவுண்டேஷனில் தன் யோக சக்தியை விஞ்ஞானக் கருவிகளால் பரிசோதனை செய்ய அனுமதித்திருந்தார் யோகி சுவாமி ராமா.

அவர் யோக சக்தியால் இன்னும் எத்தனையோ விஷயங்களை செய்து காட்ட முடியும் என்று அந்த ஆராய்ச்சியாளர்களிடம் கூறியிருந்தார்.

அவற்றில் முக்கியமானவை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதயத்துடிப்பை நிமிடத்திற்கு இருபது வரை குறைத்து, உடனடியாக அதை நிமிடத்திற்கு 250 வரை அதிகப்படுத்துவது.

இதயத்துடிப்பை ஒரேயடியாக ஒரு
நிமிடத்தில் இருந்து மூன்று நிமிடம் வரை
நிறுத்தி வைப்பது.

உடலில் செயற்கையாய் அங்கங்கே
கட்டிகளை ஏற்படுத்துவது, அந்தக்
கட்டிகளைக் கரைக்கவும் முடிவது.

உடலில் எந்தப் பகுதியில் ஊசியைக்
குத்தினாலும், ரத்தம் வெளி வராதபடி ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது.

கண்களை மூடிக் கொண்டு படிக்க முடிவது.

மூடிய புத்தகம் அல்லது உறையில் போட்டு மறைத்திருக்கும் கடிதத்தைத் தொட்டுப் பார்த்தே படிப்பது.

தூரத்தில் இருக்கும் பொருட்களை கண்களை மூடியே பார்க்க முடிவது.

தொடாமலேயே பொருட்களை நகர்த்த
முடிவது.

பிராண சக்தியுடன் சூரிய சக்தியையும்
இணைத்து அற்புதங்கள் செய்ய முடிவது.

இப்படி ஆராய்ச்சியாளர்களிடம் அவர் சொல்லி இருந்த போதிலும், பின்னர் அவரால் அந்த ஆராய்ச்சிகள் அனைத்தையும் செய்து காட்டும்
விஞ்ஞான சூழ்நிலைகள் பல காரணங்களால் அமையவில்லை.

இதற்கிடையில் அவர் இந்தியா திரும்பிப் போய்விட்டார். மறுபடியும் பல சொற்பொழிவுகள் ஆற்றவும், ஆன்மிகப்
பணிகளுக்காகவும் அமெரிக்கா வந்த போது சில ஆராய்ச்சிகளை அவரால் செய்து காட்ட முடிந்தது. அவற்றையும் 'Beyond Biofeedback' நூலில் ஆராய்ச்சியாளர்கள் எல்மர் மற்றும் அலைஸ்க்ரீன் (Elmer - Alyce Green) குறிப்பிட்டார்கள்.

அந்த சுவாரசியமான
ஆராய்ச்சிகளையும் பார்ப்போம்.

ஒரு முறை எல்மர், சுவாமி ராமாவிடம்
உடலில் ஏற்படும் கட்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செயற்கையாய் உடலில் கட்டிகளை ஏற்படுத்தவும், அந்தக் கட்டிகளை கரைத்துக் கொள்ளவும் முடியும் என்று சுவாமி ராமா சொல்லி இருந்ததை அவர்
நினைவு கூர்ந்தார்.

உடனே தன் உடலில் நான்கு வினாடிகளில் ஒரு இடத்தில் ஒரு
பறவையின் முட்டையின் அளவில் ஒரு
கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக்
காட்டினார். எல்மர் அந்த கட்டியைக் கையால் தொட்டுப் பார்த்தார். கட்டி உறுதியாக இருந்தது.

அதே போல் வேறொரு இடத்திலும் வேறு
வடிவத்தில் இன்னொரு கட்டியை சுவாமி
ராமா உருவாக்கிக் காட்டினார். அவற்றை
உருவாக்குவது யோக சக்தியால் என்றாலும் கூட, அந்தக் கட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை சுவாமி ராமாவால் சொல்லத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தக் கட்டிகளைக் கரைத்தும் காட்டினார்.

தன்னால் தொடாமல் பொருட்களை சுழல
வைக்கவோ, நகர்த்தவோ முடியும் என்று
சொல்லி இருந்ததையும் சுவாமி ராமா செய்து காட்டினார்.

ஒரு பென்சிலை கயிறில் கட்டித் தொங்கவிட்டு அதை அருகில் உற்றுப் பார்த்து சில மந்திரங்களைச் சொல்லி சுழல விட்டார்.

ஆனால் எல்மர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். 'மூச்சுக் காற்றால் கூட அப்படி சுற்ற வைக்க முடியும்' என்றார். உடனே சுவாமி ராமா, ஆராய்ச்சிகூட சூழ்நிலையிலும் கூட தன்னால் அப்படி செய்து காட்ட முடியும் என்று சொன்னார்.

உடனே வேறொரு சிறிய ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள், ஒரு வட்ட அமைப்பில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தன.

ஐந்தடி தொலைவில் சுவரை ஒட்டி ஒரு
கட்டிலில் சுவாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக் காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி அவருக்குத் தரப்பட்டது. முகமூடி இல்லாமலும் கூட வெறும் மூச்சுக் காற்றால் ஐந்தடி தூரத்தில் இருந்து அந்த ஊசிகளைச்
சுழல வைப்பது முடியாத காரியமே அல்லவா? அந்த முகமூடியை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை சுவாமி ராமா, பத்து பத்து டிகிரிகளாக அசைத்துக் காட்டினார்.

இந்த ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் ஆறு பார்வையாளர்கள் முன் நடந்தது.

ஒரு முறை சுவாமி ராமா, எல்மர் மற்றும்
அலைஸ் க்ரீனுடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பேட் நோரிஸ் (Pat Norris) என்ற அவர்களுக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருத்தி, சுவாமி ராமாவை சந்திக்க ஆர்வம் கொண்டு போன் செய்திருந்தார்.

எல்மர், சுவாமி ராமாவிடம் தங்கள் நண்பரான அந்த பெண்மணியைச் சந்திக்க முடியுமா? என்று கேட்டார். சுவாமி ராமா உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் பேட் நோரிஸ் வந்து சேர்வதாகத் தெரிவித்தார். உணவருந்தி முடிந்ததும் சுவாமி ராமா, ஒரு வெள்ளைத் தாளையும், ஒரு பென்சிலையும் தனக்குத் தரும்படி கேட்டார். அவர் கேட்டுக் கொண்டபடியே வெள்ளைத் தாளையும், பென்சிலையும் எல்மர், சுவாமி ராமாவுக்கு கொடுத்தார். சுவாமி ராமா அந்த வெள்ளைத் தாளில் என்னவோ எழுத ஆரம்பித்தார். எழுதி
முடித்து அதை மேசையில் கவிழ்த்து
வைத்தார்.

பேட் நோரிஸ் வந்தவுடன் அவரிடம் சுவாமி ராமா, தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்கும்படி சொன்னார். திடீரென்று அவர் கேள்வி கேட்கச் சொன்னதால் திகைத்தார் பேட் நோரிஸ்.

சுவாமி ராமா மேலும் வற்புறுத்தவே 'என்
மகனை தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்ப வேண்டுமா?' என்று கேட்டார்.

சுவாமி ராமா இன்னொரு கேள்வி கேட்கச் சொன்னார். பேட் நோரிஸ் 'நான் பி.எச்.டி பட்டம் பெற கல்லூரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமா?' என்று கேட்டார்.

இப்படியே மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு கேள்வி என்று ஏழு கேள்விகளைக் கேட்கச் சொன்னார் சுவாமி ராமா.

பேட் நோரிஸ் ஏழாவது கேள்வி கேட்டவுடன் தான் முன்பே எழுதி வைத்திருந்த தாளை எடுத்து அவரிடம் தந்தார். அந்தத் தாளில் சுவாமி ராமா, பேட் நோரிசின் ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுதி இருந்தார்.

அவற்றில் ஐந்து கேள்விகளுக்கான பதில்கள் மிகத் துல்லியமாகவும், ஒரு கேள்விக்கான பதில் அந்தக் கேள்வி சம்பந்தப்பட்டதாகவும், ஒரு கேள்விக்கு பதில் சிறிதும் சம்பந்தம் இல்லாததாகவும் இருந்ததாக பேட் நோரிஸ் தெரிவித்தார்.

ஏழு கேள்விகளில் ஐந்து மட்டுமே மிகச்சரியாக இருப்பினும், கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறியாமலேயே, அவற்றிற்கு முன்கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியமே அல்லவா?

'Beyond Biofeedback' நூலில் சுவாமி ராமா செய்ய முடியும் என்று சொன்ன சில ஆராய்ச்சிகளை, தங்களால் செய்ய முடியாமல் போனதற்கு எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் அப்படி செய்ய முடியாமல் போன ஆராய்ச்சிகளில் இரண்டு வேறு சில யோகிகளால் செய்து காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் நினைவு கூரலாம்.

குடா பக்ஸ் கண்களை மூடிக் கொண்டு படித்துக் காட்டியதும், சுவாமி விசுத்தானந்தர் சூரிய சக்தியைக் கொண்டு சில அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள...

இலுமினாட்டி யும் - தனி ஒருவன் படமும்...


எல்லாரும் தனி ஒருவன் திரைப்படம் பார்த்தீங்களா? பாக்கலனா உடனே பாருங்க...

இதை ஏன்டா இவன் கேக்குரானு நினைக்கிறீங்களா..

தனி ஒருவன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நபரே தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்திற்கும் காரணமானவராகவும் மறைமுகமாக மாநிலத்தை அவரே ஆள்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகப்பட முடியாத அந்தஸ்த்து உள்ள ஓர் நபர் அனைத்து தப்புகளுக்கும் காரணம்.

மூன்று பினாமிகளை கொண்டு அனைத்தையும் நிகழ்த்துவதாகவும் ஊடகங்கள் இவருக்கு சார்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக உலகையே ஏமாற்றி கொண்டிருக்கும் மருத்துவ துறை எவ்வாறு அவனால் நடப்பிக்க படுகிறது என்பதையும் இந்திய அழகியை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரம் படைத்தவனாகவும் அவனை சித்தரித்து படம் நகர்கிறது.

இப்போ நாம் கதைக்கு வருவோம். இவை அனைத்தும் நிகழக்கூடியவையே என்பதை உணர்கிறீர்களா?

இதைப் போலவே அனைத்து நாடுகளும் சிலரால் ஆளப்படுகிறது. அவர்களே அனைத்தையும் முடிவெடுக்கிறார்கள்.

நாம் என்ன வாங்குவது என்ன படிப்பது என்ன ஆடை அணிவது எப்போது எதை செய்வது எல்லாம் இவர்களாளேயே கட்டுப்படுத்தப்பபடுகிறது.

தமிழர்களே விழித்தெழுவோம்...

நான் படித்த உளவியலில் இருந்து.. நாம் ஏன் பொய் சொல்கிறோம்?


இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும் தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க..

பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் சுயமரியாதையுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான் அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன்..

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்...

உங்களுக்கே தெரியும்  நாம சொல்கிற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று.. சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றார்கள்.

தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பது போல காட்டிக் கொள்ள வேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல.

ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்து விடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.

தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்..

பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப் போய் விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம் பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்? அடப் பாவிகளா…..

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட…. இது நல்லாருக்கே..

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அப்படிப்போடு….. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டு கொள்ளாமலேயே
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல இருக்கிறது இத

நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?

ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்த வேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக வேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்.

பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்.

கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்...