17/01/2018

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்...


உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குயில், கடுக்கை, தாண்டி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோன்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்...

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தமிழனின் நாகரிகம் தாவரத்துடன் இணைந்து தான் இருந்தது. ஊரின் பெயர்களை கூட மரங்களின் பெயர்களை வைத்து தான் அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள்..
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது உண்மை.

ஆனால், இன்று... அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்..
மரங்களை இழந்தோம்; மழையையும் இழந்தோம்..

தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பற்றி ஒரு அகராதியே உண்டு. அவ்வளவு செழிப்பான மண்.. நம் தமிழ் மண். நம் பூமி...

‪உசில்‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் உசிலம்பட்டி..

‪இலுப்பை‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் இலுப்பையூர்..

‪‎விளாமரம்‬ இருந்த இடம் தான் விளாத்திகுளம்..

‪‎வாகைமரம்‬ செழித்து வளர்ந்த ஊர் தான் வாகைக்குளம்..

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து... இப்படி பல ஊர்களின் பெயரில் மரங்களின் பெயரும் மறைந்திருக்கு..

ஆனால், இன்று அந்தந்த ஊர்களிலேயே அந்த காரண மரங்களைக் காணவில்லை.

அதுக்கெல்லாம் பதிலாக... தைலமரம், சீமைக்கருவேலம், யூஃபோடிரியம், தூங்குமூஞ்சி'னு விதவிதமான வெளிநாட்டு மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.

இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய.. அதை நம்பி வாழ்கிற கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.

பார்த்தீனியம் செடிகள் நீர் நிலைகளையும் அழித்து விட்டது. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டது.

உசில் மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.
எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

வேங்கை மரம் இன்று அரிதாகி விட்டது. இந்த. மரத்தில் ஒரு குவளை செய்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய் தமிழர் கலாசாரத்தில் ரொம்ப காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

தோதகத்தி மரத்தில் எந்த பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்தில் கண்டு பிடிச்சிருக்காங்க. அதில் தோதகத்தி மரத்துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4- ஆயிரம் வருடத்திற்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.. ஆனால், இப்போது இந்த மரம் மிகவும் அரிதாகி வரும் நிலையில்.. தமிழக அரசு இந்த மரத்தை வெட்ட தடை விதித்திருக்கிறது.

இது மாதிரி தான்... குறுஞ்செடிகளும். நம் தமிழ் மண்ணில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

இதில் ‪‎துத்தி‬ என்று ஒரு செடி, மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தால் தொடர்ந்து பார்த்தீனியம் வளராது.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்சினைகளை இந்த தலைமுறையில் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு ஏசியைப் போட்டு நம்மை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைக்கும் நாம்.. ஏன் ஒரு பாரம்பரிய மரத்தை நட்டு இந்த பூமியை குளிர்ச்சியாக வைக்கக் கூடாது..?

இந்த பூமியை வளப்படுத்த நினைத்தால்.. இந்த மாதிரி பாரம்பரிய மரங்களை நம்பி தான் ஆக வேண்டும்..

அதற்கு.. இந்த 2018- ல் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு.. கண்ட கண்ட மரங்களை நடாமல்.. பாரம்பரிய மரத்தை தேர்வு செய்து... ஒரு மரமாவது நடுங்கள்.

மரங்களில் கூட ஷாம்பு உண்டு...

உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பாவிக்கலாம்.

வழுக்கைமரம் எனப்படுகிற தடசு மரத்தின் பட்டையை சுடு நீரில் போட்டால் வழுவழு ஷாம்பு ரெடி.

இந்த இரண்டு ஷாம்பூக்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

மருத மரத்தின் பட்டையை காய வைத்து கஷாயம் பண்ணி அருந்த.. உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப்பழம் மூலத்தைக் குணப்படுத்தும்...

தமிழனின் பாரம்பரியம் டா...


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


மூலிகை மருந்துகள்...

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப் பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

கார்பரேட் வியாபார இரகசியம்...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது.

இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும்.  முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.

ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...

எப்போது எம் தமிழின் பெருமையை இந்தியா அறியுமோ?


தொடரும் ஆதார் அட்டூழியம். கைரேகை கண்விழிப் பதிவை தொடர்ந்து இப்போது வருகிறது முக அடையாளப் பதிவு...


தனிமனித தகவலான கை ரேகை, கண்விழிப் படலங்களை ஏற்கனவே ஆதார் நிறுவனம் மக்களிடம் இருந்து கட்டாயமாக பெற்றுவிட்டது என்பதை நாம் அறிவோம்.

இவற்றை தனியார் நிறுவங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது என்பதையும் அறிவோம்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் அனைத்து குடிமக்களின் முக அடையாளத்தையும் துல்லியமாக பதிவு செய்து அதை சரிபார்த்த பின்னரே சேவைகள் வழங்க வேண்டுமென திட்டமிட்டுள்ளது ஆதார் நிறுவனம்.

கைரேகை கண்விழிப் பதிவுகளை நீங்கள் ஒருவருக்கு விரும்பிக் கொடுத்தால் தான் அதை சரி பார்க்க இயலும். ஆனால் முக அடையாளப் பதிவு என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் உங்கள் படத்தை வைத்து உங்கள் ஒட்டு மொத்த தகவலையும் சரி பார்த்து விடலாம்.

சாலையில் நடப்பவர் முதற்கொண்டு வீடுகளில் வசிப்பவர் வரை எவரது தகவலையும் அவரது ஒளிப்படத்தை வைத்து வெகு எளிமையாக சேகரித்து விடலாம்.

இது தனிமனிதர்களின் அடிப்படை அகவுரிமையை மீறும் செயலாகும்.

கண் ரேகை கண் பதிவுகளே தனிமனித உரிமை மீறல் என்று நாம் உச்சநீதிமன்றம் வரை சென்று நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்திய அரசோ அதை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இப்போது முக அடையாளப் பதிவுகளை சேகரிக்கும் வேலையை தொடங்கி உள்ளது கண்டனத்திற்குரியது.

இதை எதிர்த்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை...

இந்த மானங்கெட்ட ஈனர்களை உள்ளே விட்ட அலங்காநல்லூர் மக்களை என்னவென்று சொல்லுவது...


உத்தமன் பன்னீரை ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் திருப்பி அனுப்பியதால் ரவுடி துறையை வைத்து விரட்டி விரட்டி அடித்த இந்த அடிமை ஈனர்களை உள்ளே விட்டு இருக்கக்கூடாது..

வெட்கங்கெட்ட அடிமைகள்.. நமது மறதி.. அவர்களின் பலம்...

ஆர்.கே.நகரில் தினகரனை மறைமுகமாக தாக்கி வைக்கப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்...


தமிழிசைக் கருவி - பறை (தப்பு)...


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி.

எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன...