30/07/2018

ஒரிசா பாலு ...


அறிந்துக் கொள்ள வேண்டிய மனிதர்கள் பட்டியலில்...

இதில் நான் வரிசை வாரியாக இவருக்கு ஒன்றாவது இடம் இரண்டாம் இடம் என்றெல்லாம் கூற வரவில்லை.

நான் சொல்லும் நபர்கள் பலருக்கும் தெரிந்து இருக்கலாம்.

சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்
தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டவும்
தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில இதை செய்கிறேன்

ஒரிசா பாலு...

இவரைப்பற்றி கூறுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும் முதலாவது இவர் கடல் சார்ந்த ஆய்வும் மீனவர்கள் பற்றிய  ஆய்வும் சிறந்தது.

கடல் ஆமைகள் தான் முந்தைய மூதாதையர்களுக்கு கப்பல் வழி காட்டி என்று இவர் அறிவித்த ஆய்வு முடிவு மிகவு‌ம் பிரசித்தி பெற்றது.

தமிழ் எழுத்துடைய பெயர்கள் உலக அளவில் எத்துனை இடங்களில் தமிழ் உள்ளது என்று அறிவித்தவரும் இவரே.

குமரிக்கண்டம் லெமூரியா ஆய்வுகளில் முக்கிய பங்கு இவருக்கும் உண்டு.

தமிழ் பற்றியும் தமிழர்களின் வாழ்கை முறைமை பற்றியும் ஆய்வு செய்து மேடைகளில் பேசி வரும் இவரை நம்ம அடிமை அரசுகள் கண்டுக்காமல் இருப்பதே வேதனை..

இதிலும் கடல் சார்ந்த ஆய்வுகளில் பல நாடுகளில்  பல நாட்கள் ஈடுபடுவதால் இவரது குடும்பத்தினர் கூட இவரை புரிந்து கொள்ளாமல் நோவினை செய்த தகவலும் உண்டு..

ஆனால் இப்போது இவரது குடும்பம் புரிந்து கொண்டு தமது மகனை இதே ஆய்வில் ஈடுபடுத்தி வருவதாகவு‌ம் தெரிகிறது..

நல்லா அறிவாளிகள் எல்லாம் அயல் நாட்டுல இருக்கீங்களே என்று நாம் வேதனை படும் சமயத்தில் இங்குள்ள மக்களின் வரலாற்று வாழ்கையை ஆய்வு செய்து உலக மக்களும் எடுத்துச்செல்லும் இவரை போன்றோரை நாம மதிக்கத்தான் செய்ய வேண்டும்.

அரசாங்கம் செய்யும் என்று காத்திருப்பது முட்டாள் தனம்..

அரசியல் வாதிகள் மீம்ஸும்
விளம்பர நடிகர்கள் மீம்ஸும்
போட்டு கை கொட்டி சிரிக்கும் நாம..

இவர்களை போன்றோரை அடையாளப்படுத்த வேண்டாமா? 

சிலுவை யுத்தங்கள் − 8...


நடந்து முடிந்த அனைத்துக் காரணங்களையும் பார்த்தோம் இப்பொழுது விளைவுகள்...

ஐரோப்பிய உலகம் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட எதிர் நடவடிக்கையின் முதல்கட்டமாக "கிளேர்மொன்ற்" மாநாட்டை நடத்தியது. ஹி.489(கி.பி.1095), நவம்பர் மாதம் 18−ம் தேதி தென்கிழக்கு பிரான்சிலுள்ள கிளேர்மொன்ற் எனுமிடத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 300 மதகுருமாா் பங்கேற்றனர்.

இதில் பல பிரச்சனைகள் பற்றியும் ஆராய,27−ம் தேதி மதகுருமாருடன் பொது மக்களும் கூடியிருந்த பிரமாண்டமான இக்கூட்டத்தில் பாப்பரசர் இரண்டாம் ஏர்பன், முஸ்லிம்கள் கிறித்தவர்களை அவமதித்ததாகப் புனையப் பட்ட கதையைக் கூறி, முஸ்லிம்களிடமிருந்து புனித ஜெரூஸலத்தையும் கிழக்குப் பிராந்தியத்தையும் அங்கு வாழும் கிறித்துவ சகோதரர்களையும் மீட்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் எனப் பிரசாரம் செய்தார்.

இப்புனிதப் பணிக்காக சிலுவைப் போரை ஆரம்பிக்குமாறும் பணக்காரன், ஏழை, ஆண்டான், அடிமை என்ற பேதமின்றி இப்போரில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பணித்தார்.

இப்போரில்  கலந்துக் கொள்வோரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் உயிர் துறப்போருக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் ஆசையூட்டினார்.

பிரித்தானிய வரலாற்றுப் பேராசிரியர் "ஸ்டீவன் ரன்ஸி மேன்" என்பவர் இவரது பிரச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் பின்வரும் கூற்று நோக்கத்தக்கது.

அதாவது "பாப்பரசர் இரண்டாம் ஏர்பன் ஒரு நாவலருக்குரிய கலைத்திறமையோடும் ஆர்வத்தோடும் பேசினார்.

உடனடியானதாகவும் பிரமாண்டமானதாகவும் ஏற்பாடாகிய அக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தும்போது, "இது தெய்வ ஆணை"(Deysle volt)எனும் முழக்கம் அவரது பேச்சை அடிக்கடி இடைமறித்து எழுந்தது.

இவரது இவ்வுரையினால் கவரப்பட்டு, அங்கு குழுமியிருந்த அனைவரும் போரில் கலந்து கொள்வதாக வாக்களித்ததோடு சிலுவைச் சின்னத்தையும் தம் உடைகள் மீது குத்திக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் போருக்கான ஆட்களை திரட்டும் படலமே நடைபெற்றது.

- தொடரும்.....

இது தான் திமுக உ.பி.களின் நாகரிகம்...


உங்க நாகரிகத்தை பார்த்து புல்லரிக்கிறது...

குற்றாலத்தின் அரிய புகைப்படம்...


பெரிய புராணம் தந்த சேக்கிழார் பெருமானின் வரலாறு...


பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார்.

அவர் பிறந்ததும் அருண்மொழி ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார்.

1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின.

தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச் சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்ல முறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார்.

ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறை சக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அரச பதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமய நூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார்.

நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான்.

அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான்.


சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார்.

தில்லையம்பல நடராஜர் உலகெலாம்  என அடியெடுத்துக் கொடுத்தார்.

 அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார்.

இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள #மூவாயிரம்_அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார்.

அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்ல நாளும், திருஞானசம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர்.

ஒரு பக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன.

இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது.

அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்த பாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான்.

சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்...

பாடல் விளக்கம்: எக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மேலும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேரவையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெருமானின் அடியவருடையவும் ஆன, பொருள்சேர் புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம்...

ட்ராய் தலைவரின் ஆதார் பாதுகாப்பு சவால் - தோற்கடித்த ஹேக்கர்...


பொதுவெளியில் பகிர்ந்து சவால் விடுத்த சூழலில், அவரது தனிப்பட்ட தகவல்களை பிரான்ஸ் நபர் இணையத்தில் பகிர்ந்தார்.

டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என்று அதை ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார். இதன்மூலம் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா எனவும் சவால் விட்டார். ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றை பதிவிட்டார்.

செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டார்.



எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ளார். ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இந்த பதிவுகளுக்கு எந்தவொரு விளக்கத்தையோ அல்லது மறுப்பையோ ட்ராய் அமைப்பின் தலைவரான ஷர்மா தெரிவிக்கவில்லை.

ஆதார் எண் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று வாதிடப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது...

முடியட்டும் திராவிடம்... விடியட்டும் தமிழகம்...


திராவிடமும் சாதி ஒழிப்பும்...


தமிழர்கள்: அறுபது ஆண்டுகளாக திராவிடம் பேசியும் ஏன் தமிழ்நாட்டில் சாதிய பிரச்சனைகள் ஓயல..

திராவிடர்கள்: ஆயிரம் ஆண்டு கால சாதியை அப்படி அறுபது ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது

தமிழ் தேசியர்கள்: அதெல்லாம் ஒரு மயி*ம் இல்ல..

சாதிய பிழவுகள் தமிழரிடம் இருந்திருந்தால் எப்படி சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் தமிழ்நாடு வல்லரசாக இருந்திருக்கும்?

திராவிடர்கள் தமிழரை பிரித்தாள சாதிய அரசியல் செய்கிறார்கள்.. திராவிட ஆட்சியை வீழ்த்தாமல் சாதிய சிக்கல்கள் ஒழியாது...

பிரமிடும் இரகசியங்களும்...



உலகில் பல இடங்களில் அமைத்துள்ள பிரமிடு அமைப்புகள் அனைத்தும் இணைத்து பார்க்கும் போது...

அந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள அணைத்து இடங்களிலும் தொடர்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பை போல இருக்கிறது இது ஒரு wireless communication கம்பி இல்லா தொடர்பு முறையை போல செயல் பட்டு இருக்குமா?

அதாவது இந்த கால மொபைல் போன் டவர் போல? 

நோட்டமிடும் வேற்றுலக மர்ம விண்கலம்...


இன்றைய அறிவியல் யுகம் விண்வெளி ஆய்வின் உச்சத்தில் இருக்கிறது, ஒரு சாமான்யனுக்குக் கூட வான்அறிவு அதிகமாக இருக்கிறது.

அதாவது நாம் பூமியில் இருந்து பார்க்கும் நீல வானம் ஒரு முடிவல்ல அதற்குமேல் கருமையான ஒரு வானம் இருக்கிறது அங்கே சூரியக்குடும்பத்தில் பூமியும், அந்த சூரியக்குடும்பம் ஆயிரக்கணக்கான சூரியக்குடும்பங்களும் கோடிக்கண‌க்கான சூரியன்களையும் (நட்சதிரங்கள்), உள்ளடக்கிய பால்வெளி மண்டலமும் உள்ளது என்றும், இது போல ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் வின்வெளியில் இருக்கின்றன என்பதும், இவைகள் வட திசையில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான ஒரு பால்வெளி மண்டலத்தை மற்ற பால்வெளி மண்டலங்கள் சுற்றி வருகின்றன என்பதும் சாமான்யரும் அறிந்ததே.

அந்தவகையில் நமது சூரிய மண்டல பால்வீதியில் மர்மமான விண்கலம் ஒன்று சுற்றி வருகிறது. ' இது வேற்றுலகத்தை சார்ந்தது என ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வேற்றுலக மர்ம விண்கலம் ஆனது 13000 ஆண்டுகளாக
விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த மர்மமான விண்கலம் பற்றிய  1954-யில் அமெரிக்க
விமானப்படையைச் சார்ந்த
ஆய்வாளர் ஒருவர் அளித்த
செய்தியின் மூலம் தான், இப்படி
ஒரு விண்கலம் புவியைச் சுற்றி
வருகிறது என்பது தெரிய வந்தது.

விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் ஆனது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் வெளியான இந்த மர்ம விண்கலம் பற்றிய செய்தி தீயாய் பரவியது என்பதும் குறிபிடத்தக்கது.

மீண்டும் 1960-யில் அமெரிக்க
கடற்படை இதே மர்ம விண்கலம்
104.5 நிமிட சுற்று வேகத்தில்
புவியைச் சுற்றிவருவதை
கண்டறிந்தது .

மேலும் இது சார்ந்த தீவிரமான ஆய்வும் தொடங்கப்பட்டது.

216 கி.மீ தூரம் : விசித்திரமான
சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்றும் குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் கண்டறியப்பட்டது.

இந்த மர்ம விண்கப்பலில் 50
ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக்
கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் முகவர் கண்கானித்துக் அறிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக விண்வெளிவளர்ச்சி யுத்தம் நடத்திக்
கொண்டிருக்கும் அமெரிக்க
மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த மர்ம விண்கலம் மீது சிறப்பு கவனம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

1899-ஆம் ஆண்டு நிக்கோலா
டெஸ்லா வேற்றுகிரகவாசிகளிடம் பெற்ற சமிக்ஞை என்பது இந்த மர்ம விண்கலத்தின் சமிக்ஞையாக தான் இருக்கும். மேலும் 1930-களில் இருந்தே இந்த மர்ம விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெறுவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் அறிக்கை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1957-ஆம் ஆண்டு தான் மர்மமான விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது
டாக்டர் லுயிஸ் கோராலோஸ்
(Dr.Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இசுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2)
வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக இந்த விண்கலம்
சிக்கியது.

அதே 1957-ஆம் ஆண்டு
இசுப்புட்னிக் 1 விண்கலத்தில்
(Sputnik 1) இருந்த விண்வெளி
வீரர்கள் அடையாளம் காணமுடியாத ஒன்று, போலார் சுற்று வட்டப்பாதையில் தங்களின் அருகே நிழல் ஆடுவதாக அறிக்கை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 7-ஆம் அதேதி 1960-ஆம்
ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழ் இந்த மர்ம விண்கலம் பற்றி செய்தி வெளியிட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

1957-ஆம் ஆண்டு வாக்கில்
அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் செலுத்த முனையத் தொடங்கி 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட போலார்
செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் பூமியை கண்கானித்தல் போன்றவைகளை செய்வதோடு, போலார் சுற்று வட்டப்பாதையில் அடிக்கடி தென்படும் மர்ம விண்கலம் பற்றிய தகவல்களையும் சேமிக்க உதவும் என்று நம்பப்பட்டது.

பின் 1960-களில் மீண்டும் மர்ம விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலம்
ஆனது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்கும் என விண்வெளி வீரர்களும்,
அறிவியலாளர்களும் கணிப்பு
தெரிவித்தனர். அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான
விண்கலமாய் (Heaviest Artificial space ship) பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது முதல் முறையாக ரேடாரில் மர்ம விண்கலம் சிக்கிய 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு
மீண்டும் மர்ம விண்கலம்
புகைப்படத்தில் சிக்கியது.
இதற்கு க்ரூமன் ஏர்கிராஃப்ட்
கார்ப்ரேஷன் (Grumman Aircraft
Corporation) மிகவும் உதவியது.

இந்த விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்து பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ச் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் இந்த
மர்ம விண்கலம் பற்றி உண்மையை மக்களிடம் மறைக்காமல் அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது...