30/07/2018

சிலுவை யுத்தங்கள் − 8...


நடந்து முடிந்த அனைத்துக் காரணங்களையும் பார்த்தோம் இப்பொழுது விளைவுகள்...

ஐரோப்பிய உலகம் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட எதிர் நடவடிக்கையின் முதல்கட்டமாக "கிளேர்மொன்ற்" மாநாட்டை நடத்தியது. ஹி.489(கி.பி.1095), நவம்பர் மாதம் 18−ம் தேதி தென்கிழக்கு பிரான்சிலுள்ள கிளேர்மொன்ற் எனுமிடத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 300 மதகுருமாா் பங்கேற்றனர்.

இதில் பல பிரச்சனைகள் பற்றியும் ஆராய,27−ம் தேதி மதகுருமாருடன் பொது மக்களும் கூடியிருந்த பிரமாண்டமான இக்கூட்டத்தில் பாப்பரசர் இரண்டாம் ஏர்பன், முஸ்லிம்கள் கிறித்தவர்களை அவமதித்ததாகப் புனையப் பட்ட கதையைக் கூறி, முஸ்லிம்களிடமிருந்து புனித ஜெரூஸலத்தையும் கிழக்குப் பிராந்தியத்தையும் அங்கு வாழும் கிறித்துவ சகோதரர்களையும் மீட்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் எனப் பிரசாரம் செய்தார்.

இப்புனிதப் பணிக்காக சிலுவைப் போரை ஆரம்பிக்குமாறும் பணக்காரன், ஏழை, ஆண்டான், அடிமை என்ற பேதமின்றி இப்போரில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பணித்தார்.

இப்போரில்  கலந்துக் கொள்வோரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் உயிர் துறப்போருக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் ஆசையூட்டினார்.

பிரித்தானிய வரலாற்றுப் பேராசிரியர் "ஸ்டீவன் ரன்ஸி மேன்" என்பவர் இவரது பிரச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் பின்வரும் கூற்று நோக்கத்தக்கது.

அதாவது "பாப்பரசர் இரண்டாம் ஏர்பன் ஒரு நாவலருக்குரிய கலைத்திறமையோடும் ஆர்வத்தோடும் பேசினார்.

உடனடியானதாகவும் பிரமாண்டமானதாகவும் ஏற்பாடாகிய அக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தும்போது, "இது தெய்வ ஆணை"(Deysle volt)எனும் முழக்கம் அவரது பேச்சை அடிக்கடி இடைமறித்து எழுந்தது.

இவரது இவ்வுரையினால் கவரப்பட்டு, அங்கு குழுமியிருந்த அனைவரும் போரில் கலந்து கொள்வதாக வாக்களித்ததோடு சிலுவைச் சின்னத்தையும் தம் உடைகள் மீது குத்திக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் போருக்கான ஆட்களை திரட்டும் படலமே நடைபெற்றது.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.